நீட் பார் ஸ்பீட்உலகெங்கும் பதின்வயதினர் தொடர்புடைய வாகனவிபத்துக்களுக்கு போதிமரம் இந்த கணிப்பொறி விளையாட்டு.நான் அதிக நேரம் செலவிட்டு விளையாண்ட நாட்கள் உண்டு.

எனது மாணவர்கள் எப்போதாவாது ஒரு கார்விபத்தில் சிக்கிமீண்டால் போதிய இடைவெளிக்குப் பின்னர் நான் அவர்களை கேட்கும் கேள்வி இதுதான்.

நீட் பார் ஸ்பீட் மாதிரிதானே ஒட்டின ...

உண்மையைச் சொல்லத் தயங்காதவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

இந்த விளையாட்டின் சிறப்பு என்று நான் உணர்ந்தது எந்தக் காரை எடுத்து ஓட்டினாலும் உண்மையில் அந்தக்காரின் அத்துணை குணங்களும் கணிப்பொறியினுள் ஓடும்  காருக்கும் இருக்கும்.

எல்லா காரையும் ஓட்டிப்பார்த்து, காட் மோடில் வரும் 2000 காரை அத்துணை ட்ராக்குகளிலும் ஒட்டியிருக்கிறேன். தனி அனுபவம் அது.

இந்த விளையாட்டில் ஒட்டிய அத்துணைக் கார்களையும் ஒரு திரைப்படத்தில் பார்க்க முடிந்தால் ?

வாவ் அனுபவம் அல்லவா அது.

அதற்குள் ஒரு கதையைப் பொருத்தவேண்டும் அவ்வளவே.

அழகாக ஒரு கதையைப் பொருத்தியிருக்கிறார்கள்.

டோபி மார்ஷல் ஒரு ரேசர் ஆனால் அதற்குரிய பொருளாதாரப் பின்புலம் இல்லாதவன். டினோ எப்போதும் தோற்பவன். ஆனால் பெரிய இடத்துப் புள்ளையாண்டான்.

வஞ்சகமாக டோபியை சிறைக்கு அனுப்புகிறான்.

மீண்டுவரும் டோபி எப்படி டினோவை பழிவாங்கினான் என்பதே கதை. இதை திரைமுழுதும் புழுதிபறக்கும் ரேஸ்களோடு சொல்லியிருக்கிறார்கள்.

பாஸ்ட் அண்ட் பியுரியஸ் போல முழுதும் சிஜி செய்யாமல் உண்மையான கார்களையே பறக்கவிட்டு வெடிக்கவைத்து விளையாண்டது இயக்குனர் ஸ்காட் வாவ்வின் முத்திரை!

ரேஸ் பிரியர்கள் பார்க்கலாம்

படம் வயதுவந்தோருக்கு மட்டுமே .

அன்பன்
மது 

Comments

 1. என்ன பள்ளிவிடுமுறையா இப்போது அங்கு ஆங்கிலபடமாக பார்த்து தள்ளிவிடுகிறீர்களே

  ReplyDelete
  Replies
  1. மச்சான் இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த படம்
   ரேஸிங் சீக்க்வன்ஸ் நல்லா இருப்பதால் எழுத வேண்டும் என்று நினைத்து தள்ளிப் போய் இப்போத் தான் எழுதினேன்.

   Delete
 2. அதிக வேகம் அதிக ஆபத்து...

  ReplyDelete
 3. ஆவலைத் தூண்டுகிறது தோழரே

  ReplyDelete
  Replies
  1. பார்க்கலாம் தோழர்

   Delete

Post a Comment

வருக வருக