பிழைத்திருப்பார்களா பிள்ளைகள் ?


விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தவுடன், பள்ளிக்கு திரும்பினோம், நாலரை மணிக்கு சாலைக்கு வந்தால் கரும் பரப்பில் இருந்து எழுந்த அனல் அலை தரையில் இருந்து ஆறடிக்கு பறந்தது. 


கருவாடாதல், என்பார்களே அதேதான்.  முதல் நாள் அனுபவம் தந்த கிலியில் மறுநாள்  வரும் பொழுது தண்ணீரை எடுத்துக் கொட்டிக்கொண்டு வரலாமா என்றுதான் பார்த்தேன். 

எதற்கு ரிஸ்க் என்று வெகுநாள் காத்திருந்த நூல்களை எடுத்துக்கொண்டு சென்றேன். பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகு மெல்ல வாசிக்க ஆரம்பித்து மாலை ஐந்துக்கு வண்டியை எடுத்தேன். 

என்னுடைய அனுபவத்தில் இருந்து கொடும் கோடையை சமாளிக்க மரங்களை விட்டால் வேறு கதியே இல்லை. 

எங்கள் பள்ளியில் ஒரு வரிசையில் நடப்பட்ட புங்கை மரங்கள் எம்மையும் மாணவர்களையும் காக்கின்றன. 

புங்கையின் குளுமையை உணர ஒருமுறை அதன் நிழலில் ஒதுங்கிப் பார்த்தால்தான் தெரியும். 

வீட்டின் முன்னரும் நிறய புங்கை மரங்களை நட நினைத்திருக்கிறேன். 

நான் அஞ்சுவது இன்னொரு விசயத்திற்காக. 

கோடை கொடூரத்தாண்டவம் ஆடுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தாகிவிட்டது. 

ஊடகங்கள் முதலில் அறிவித்த  இரண்டு கோடை உயிரிழப்புகளில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் என்பதுதான் கிலி தருகிறது. 

ஆசிரியர்களே அடித்தொண்டையில் இருந்து கத்தினால்தான் மாணவர்கள் கேட்பார்கள். 

அடிக்கும் கொடும் வெயிலில் என்ன என்ன செய்யப் போகிறார்கள் மாணவர்கள் என்று தெரியவில்லை. 

மாணவிகளில் சிலர் நகைக்கடை ஒன்றில்  பணிக்குச் சென்றுவிட்டார்கள். 

இன்னும் சிலர் கிடைக்கும் பணிகளில் சேர்ந்துவிட்டார்கள். 

இவர்கள் நிழலில் இருப்பதால் கவலை இல்லை. 

எந்தப் பணியிலும் சேராமல் வயல் வெளிகளில் ஓடித்திரியப்போகும் மாணவர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. 

வழக்கமாக கோடை அவர்களை செழுமைப் படுத்தும். 

ஆளுமை வளர்ச்சியில் கோடை விடுமுறை ஒரு முக்கிய பங்காற்றுகிறது. 

ஆனால் இந்தக் கோடை நாம் சந்தித்த கோடைகளைப் போல் அவ்வளவு சினேகமாக இல்லை. 


பிள்ளைகள் 
பிழைத்துக்கிடந்தால் சரி. 

நல்லதே நடக்கட்டும் 

அன்பன்
மது 


Comments

 1. நல்லதே நடக்கட்டும் நண்பரே

  ReplyDelete
 2. நல்லது நடக்கும் தோழரே
  த.ம.

  ReplyDelete
 3. கவலைப் படாதே சகோதரா ,இளரத்தம் எப்படியும் பிழைத்துக் கொள்ளும் :)

  ReplyDelete
  Replies
  1. வேயில் அதிகம் அதுதான் கொஞ்சம் அச்சுறுத்துகிறது..
   மற்றபடி வெயிலை என்ஜாய் செய்யும் பிள்ளைகள்தான்

   Delete
 4. ஆம் இந்தக் கோடை கொஞ்சம் வில்லத்தனமாகத்தான் இருக்கிறது...நம்புவோம்..எதுவும் எதிர்மறையாய் நடக்காது என்று...

  ReplyDelete
 5. இதில் சிறப்பு வகுப்புகள் என்று படுத்துகிறார்கள். அதை என்னவென்று சொல்ல....

  கீதச

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஏதும் வைக்கக்கூடாது என்பதுதான் அரசு உத்தரவு

   Delete
 6. நான் சென்னையில் படித்த பள்ளியில் முழுக்க புங்கை மரங்கள் மட்டுமே.. குளுமைக்கு உத்திரவாதம் ..

  விடுமுறையிலும் உங்கள் மாணவ குழந்தைகளை பற்றி கவலைகொள்ளும் மனம் எல்லாருக்கும் வராது சகோ ..
  நல்லது நடக்கட்டும் ..வெயில் கொடுமையிலிருந்து பிள்ளைகள் தப்பிக்கணும் ..

  ReplyDelete
  Replies
  1. விடுப்பு என்பது ஒரு மாதம்தான்
   அதிலும் பாதி நாட்கள் நாங்கள் பள்ளிக்கு செல்ல பணிகள் இருக்கு

   எனவே மாணவர் குறித்து சிந்திப்பது இயல்புதான்

   எல்லோரும் சிந்திப்பார்கள்
   கூடுதலாக நான் எழுதுகிறேன் அவ்வளவுதான் சகோ

   Delete

Post a Comment

வருக வருக