லேய் மரம் என்ன உங்க வீட்டு பொண்ணாப்பா, பூத்தா பொங்கல் வைக்க ?

தோழமைகளுக்கு வணக்கம்,


தகவலைச் சொன்ன பெரியவர்

வாழ்வின் மிக எளிமையான விசயங்கள் கூட என்னை எடி.எம்மில் பணத்தை பார்த்ததது போன்ற ஆனந்த அதிர்ச்சியில் தள்ளிவிடுகின்றன.



 தோப்புப்பட்டியில் விதைக்கலாம் மரக்கன்று நடும் நிகழ்வில் ஒரு தகவலை கிராமத்தின் பெரியவர் ஒருவர் சொன்னார்.

நாங்கள்  ஏழு மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருந்தோம். ஆனால் கூண்டுகள் ஆறுதான் கிடைத்தன.

கோவில் என்பதால் அரசையும், வேம்பையும் ஒன்றாக நடலாம் என்று சொன்னோம்.

சரி என்றார்கள்.

அப்போதுதான் பெரியவர் அந்த விசயத்தை சொன்னார். நடுவது பெரிய விசயமில்லை. வேம்பு பூ பூக்கிற பொழுது பொங்கல் வைக்கணும் என்றார்.

ஒருகணம் ஆச்சர்யத்தில் உறைந்தேன்.

என்ன சொல்றீங்க மரம் பூ பூத்தால் பொங்கல் வைக்க வேண்டுமா?
ஆமா, அந்த பாருங்க கரையில் ஒரு வேம்பு பூ விட்டிருக்கிறது அதற்கு வரும் செவ்வாய் அன்று பொங்கல். காலையில எட்டுமணிக்கெல்லாம் வந்திருங்க என்றார்.

நமது மரபில் மரம் பூத்தால் பொங்கல் வைத்திருகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய செய்தி.

கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு இது இயல்பான செய்தியாக இருக்கலாம்.

என்போன்ற ஆட்களுக்கு மூர்ச்சை வரவைக்கும் செய்தி இது.

எவ்வளவு செழுமையான பண்பாட்டோடு நாம் இருந்திருக்கிறோம்?
அப்படி இருந்த நம் நாட்டில்தான் மணற்கொள்ளை நடக்கிறது எனபதும் நினைவில் எழ கலவையான உணர்வுகளோடு விடைபெற்றேன்.

#தமிழன் என்று சொல்லடா


பின்னூட்டங்கள்.


Rafeeq Sulaiman உண்மைதான் நம்மண்ணின் பெருமைகாத்தலென்பது நமது மரபு மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதேயாகும். அப்போதுதான் தலைநிமிர்ந்து நடக்க முடியும்
Unlike · Reply · 6 · 18 hrs

Subramanian ஆமாம் சார் கடந்த வாரம் தான் நம்ம வீட்டில் தென்னனை மரத்துக்கு பொங்கல் வைத்தோம்
Unlike · Reply · 2 · 18 hrs

Selva Kumar அய்யா..தென்னை பாலைவிட்டால் இதுபோல் உண்டு...
Unlike · Reply · 2 · 18 hrs

             Kasthuri Rengan பாலை ப்ரிட்ஜிலும், தேங்காயை கடையிலும்            பார்க்கும் தலைமுறைக்கு இதெல்லாம் புதுசு ஆசானே
           Like · Reply · 2 · 18 hrs

           Selva Kumar மன்னிக்கவும் பாளை...
           Unlike · Reply · 1 · 18 hrs

Devatha Tamil நானும் தென்னை பாளை விட்ட போது வைத்தேன்
Unlike · Reply · 2 · 18 hrs

            Devaraj Pudhugaipudhalvan இத்தன பேரு பொங்க வச்சுருக்கீக!         ஒருத்தரும் என்ன கூப்பிடவுமில்ல! பொங்கலுந்தரல!
Unlike · Reply · 1 · 17 hrs

மா. செல்லத்துரை எங்க ஊர் தலைவரே (தோப்புப்பட்டி)
Like · Reply · 1 · 17 hrs

பேசுவோம் வாங்க நல்ல தகவல் நன்றி
Like · Reply · 1 · 17 hrs

Siva Shanmugam தமிழனின் ஒவ்வொரு செயலும் அறிவியல் சார்ந்தது என்பதுதானே வரலாறு.
Unlike · Reply · 1 · 10 hrs

Sivasankaravadivelu Subramanian வாழை போட்டு முதல் குலை போட்டவுடன் பாயாசம் வைத்து வீட்டுக்கு வீடு கொடுப்பார்கள்.முதல் குலையை கோவிலுக்கு கொடுப்பார்கள்.அதை பக்கத்து வீடுகளுக்கு கொடுப்பார்கள்.
Unlike · Reply · 2 · 9 hrs

Adaikalaraj Arumugam ஏறத்தாழ 22 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தோப்பில் உள்ள தென்னை குழை தள்ளியபோது பொங்கல் வைத்த ஞாபகம் வந்து செல்கின்றது...
Unlike · Reply · 1 · 4 hrs

Palanivelu Velu உங்க அக்கவுண்ட்ல பணமிருந்தா ஏ.டி.எம் ல பணம் வரும் .அக்கவுண்ட்ல பணமில்லன்னா ஏடி.எம்.ல பணம்வராது இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு?
Unlike · Reply · 1 · 2 hrs

Comments

  1. நானும் முதல்முறை அறிகிறேன் தோழர்
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. வியப்பு தோழர்

      Delete
  2. தென்னை மரம் பாளை விட்டால் பெண் வயதுக்கு வந்தால் செய்யும் சடங்குகள் அனைத்தும் செய்வர்

    ReplyDelete
    Replies
    1. நகரவாசிகளுக்கு இது புதுமையான தகவல்

      Delete
  3. இத்தனை விஷயங்கள் இருக்கா !!! அப்போ அந்த மரமும் நம்ம பிள்ளை போலத்தானே ..பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  4. கல்லுக்கு பொங்கல் வைப்பதை விட ,இயற்கைக்கு பொங்கல் வைப்பது நல்லதுதான் :)

    ReplyDelete
    Replies
    1. ஆம், வருகைக்கு நன்றி

      Delete
  5. தென்னை பாலை விட்டால் பொங்கல் வைத்துக் கும்பிடுவர்....

    ReplyDelete

Post a Comment

வருக வருக