மனிதவள மேம்பாட்டு பயிற்சிகள்இப்படி ஒரு துறை இருப்பதே இன்னும் பல இளைஞர்களுக்கு தெரியாது!
முறையான பழக்கமும், பயிற்சியும் இருந்தால் மேடைகளில் உங்களை மின்னவைக்கும் துறை இது. வெறும் புகழ் என்பதையும் கடந்து ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் ஒரு மாத ஊதியத்தை ஒரே நிகழ்ச்சியில் ஈட்டும் வாய்ப்பைத்தரும் வளர்ந்துவரும் துறை இது.

ஆனால் பயிற்சி என்றால் வகுப்பு எடுப்பதுதானே என்கிற தட்டையான கேள்விதான் வரும்.

வகுப்பின் கற்றலை தேர்வுகள் மூலம் அளக்கலாம் என்றால் பயிற்சியின் அடைவை நடத்தை மாற்றத்தின் மூலம் அறியலாம்.

இப்படி அடிப்படையிலே பல வேறுபாடுகள் உண்டு.

இந்த துறையில் முத்திரைபதிக்கும் பலர் இருக்கிறார்கள்.

எனது புதுகையிலேயே பலர் இருப்பது மகிழ்வு. பயிற்சித்துறைக்கு என்னை தயார் செய்து அனுப்பிய ஸ்ரீராம், வழிகாட்டிய முருகபாரதி கண்ணன், பயிற்சிக் பட்டறையில் எனது குருவாக வந்த ஆர்.ஆர்.ஜி என்று அறியப்படும் ஆர்.ஆர். கணேசன் என பலர் புதுகையிலேயே இருக்கிறார்கள்.

தம்பி சும்மா சொல்லிக்கொண்டே போகாமல் பயிற்சித்துறை என்றால் என்ன என்பதை விளக்கமாகச் சொல்லுப்பா என்போருக்கு.

வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வணிக மேம்பாட்டுப் பயிற்சி. இரண்டு வகைப் பயிற்சிகள் இருக்கின்றன.

வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் முதன்மையானது தன்னை அறிதல் பயிற்சி.

க்னோ தை ஸெல்ப் என சாக்கரடீஸ் சொன்னதுதான் இது.

வாழ்வின் வெற்றி, அமைதி எல்லாம் நம்மை நாமே அறிந்தால்தான் சாத்தியம். இதற்கான கருவிகளை அறிமுகம் செய்வதும் மேம்பாட்டுக்கான கருவிகளை அறிமுகம் செய்வதும் இந்தப் பயிற்சியின் நோக்கங்களில் சில.

தொடர்வோம்

அன்பன்
மது

வாழ்வியல் திறன் பயிற்சிகள் 

Comments

 1. அருமையான துவக்கத்துடன்
  அவசியமான பதிவு
  ஆவலுடன் தொடர்கிறோம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 2. அடுத்த பகிர்விற்காக
  காத்திருக்கிறேன் நண்பரே

  ReplyDelete
 3. நல்ல தகவல் தோழரே...
  என்னைப்போன்ற பேச்சே வராதவர்களுக்கும் பயன் உண்டா ?
  மேலும் அறிய தொடர்கிறேன்...
  த.ம.

  ReplyDelete
 4. தொடர்கின்றேன்.

  ReplyDelete
 5. சுருக்கமாக எனினும்
  மிகச் சரியான அருமையான விளக்கம்
  ஆர்வமுடன் தொடர்கிறோம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 6. நல்லதொரு தலைப்பு பற்றி நல்லதொரு துவக்கம். எல்லோருக்கும் மிகவும் தேவையான ஒன்றும் கூட...தொடர்கிறோம்

  ReplyDelete

Post a Comment

வருக வருக