இசை எனும் நம்பிக்கைச் சுரபி Music the Hope Raiser


பத்தாம் வகுப்பில் இசை குறித்து ஒரு பாடம் இருக்கிறது
இசை ஒரு நம்பிக்கைச் சுரபி என்று பொருள் கொள்ளும் தலைப்பில் (Music the Hope Raiser)



முனைவர் கார்ல் பால் நாக்கின் உரை. பாஸ்டன் இசைப் பல்கலையில் இசைப் பயிற்சியைத் தேர்ந்தெடுத்த மாணவர்களின் பெற்றோருக்கு ஆற்றிய உரை.

இசை குறித்த வெகு அற்புதமான படிமத்தை மனங்களில் படியவைக்கும் அற்புதமான பாடம்.

இனி உரை.

நமது சமூகம் இசையை கலை மற்றும் பொழுது போக்கு பட்டியலில் வைத்திருகிறது. ஆனால் இசை பொழுதபோக்கு அல்ல. நான் சாட் (SAT)தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ படிக்கத்தான் விரும்புவேன் என்று என் பெற்றோர் நம்பினார்கள். நான் இசையை தேர்ந்தெடுத்த பொழுது அதிர்ந்தார்கள். இத்துணைக்கும் இருவருமே சங்கீதப் பிரியர்கள். எனது வீட்டில் எப்போதும் ஐரோப்பிய சாஸ்திரிய சங்கீதம் வழிந்தபடியே இருக்கும். இருப்பினும் உச்ச மதிப்பெண்களைப் பெற்ற நான் இசையைத் தேர்ந்தெடுத்தை  அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இசை பொழுதுபோக்கல்ல உங்கள் குழந்தைகள்  பயிலப் போகும் இசை பொழுதுபோக்கு என்ற சொல்லுக்கு நேர் எதிரானது.

இசையும் வானவியலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பார்கள் கிரேக்கர்கள். வானவியல் தொலைவில் இருக்கிற கண்ணுக்குத் தெரியும் பொருட்களை குறித்து பயில்வது, இசை நமது ஆன்மாவிற்குள் சுழலும் கண்ணுக்குத் தெரியாத பொருட்களை அறிமுகம் செய்கிறது.



இசை வாழத் தகுதியில்லா இடங்களில் கூட சாத்தியப்பட்டிருக்கிறது.

பிறவி இசை மேதை என்று கொண்டாடப்பட்ட ஆலிவர் மெஸ்ஸியன் உலகம் கொண்டாடும் தி குவர்ட்டெட் டு தி எண்ட் ஆப் டைம் என்கிற இசைக் கோவையை ஜெர்மானியர்கள் அவரை அடைத்து சித்திரவதை செய்த ஒரு யூதவதை முகாமில்தான் தொகுத்தார். வதை முகாமின் கொடூரம் மனிதர்களைப் பட்டினி போட்டது, உடல் நலிவைத் தந்தது, பொன்னையும் பொருளையும் பறித்துக் கொண்டது, ஏன் உயிரையும்  பறித்தது ஆனால் அவர்களின் ஆன்மாவை இசை நிரப்பியது. இசை அவர்கள் ஆன்மாவை செத்துவிடாமல் பாதுகாத்தது. தி குவார்டெட் டு தி எண்ட் ஆப் டைம் யூதவதை முகாமில் ஆலிவர் மெஸ்ஸியனுடன் அடைபட்டிருந்த நான்கு இசைக்கலைஞர்களை மட்டுமே மனதில் கொண்டு தொகுக்கப்பட்டது.

மனிதவாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம் கலை. நாம் உயிரோடு இருக்கிறோம், நமது வாழ்விற்கு பொருள் இருக்கிறது, நாம் யார் என்பதையெல்லாம் உலகிற்கு சொல்லும் ஒரு கருவி இசை.

அந்த சபிக்கப்பட்ட செப்டம்பர் பதினொன்றில் மக்கள் வீடுகளில் பிரம்மை பிடித்தவர்கள் போல தேங்கிப் போனார்கள். வழக்கமாக விளையாடும் ஹூப் விளையாட்டோ, ஷப்பிங்கோ போகவில்லை. நான் வழக்கம் போல பயிற்சிகாக எனது கி போர்டை நெருங்கிய பொழுது வலிமிகு சிந்தனை என்னை தடுத்து. அந்தத் தருணத்தில் இசைப் பயிற்சி அவசியமா, அது பொருளுடையதா என்கிற கேள்வி எனது மனதில் எழுந்தது.

ஆனால் துயர் மிகுந்த அந்த மாலையில் மக்கள் பேரழிவு நடந்த இடத்தில் ஒன்று கூடினார்கள் ஒருவரின் கரத்தை ஒருவர் பற்றிக் கொண்டு குழுவாக வி ஷால் ஓவர் கம் என்று பாடினார்கள், அமெரிக்கா தி பியூட்டிபுல் என்று பாடினார்கள், தேசிய கீதத்தை இசைத்தார்கள். அந்த துயர்மிகு சம்பவத்திற்கு பிறகு மக்கள் பெருமளவில் ஒன்றாக கூடியது நியூயார்க் பில்ஹார்மோனிக் குழுவின் இசை நிகழ்வுதான். இராணுவம் பாதுகாப்பைத் தந்தது, ஆனால் இசைதான் வாழ்விற்கான நம்பிக்கையையும், துயரைக் கடக்கும் வலிமையையும் தந்தது இசைதான்.

ஆம், வலியைத், துயரை, நிச்சயமின்மையைக் கடந்துவர இசைதான் மக்களுக்கு உதவியது.

இன்று புதிதாக பயில வந்திருக்கும் மாணவர்கள் இசையில் மேதமை பெறுவது மட்டும் போதாது, அவர்கள் இசையால் புவியை எப்படிக் காப்பது என்கிற வித்தையையும் கைக்கொள்ளவேண்டும்.

இராணுவமோ, பறக்கும் விமானங்களோ ஒருபோதும் உலகிற்கு அமைதியைக் கொணரா. ஆனால் இசையால் அது இயலும், கலையால் அது இயலும்.

உலகை அமைதி மண்டலமாக மாற்றும் சக்தி கலைஞர்களுக்கே உண்டு.


நான் வகுப்பறையில் செய்த சில முன்தயாரிப்புகள்

சில பாடல்களை ஒலிக்கச் செய்தேன்.

ஒலித்த பாடல்கள் மற்றும் இசைக் கோவைகள்

1. குறை ஒன்றுமில்லை
2.காற்றினிலே வரும் கீதம்
3. ஆத்தா உன் சேலை
4. அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு
7. அமெரிக்கா தி பியூட்டி புல்
8.பீத்தோவன் கோவைகள்
9. மொசார்ட் கோவைகள்
10. விவால்டி கோவைகள்

பாடச் செயல்பாடுகள் இன்னும் தொடரும் ...

அதுவரை
அன்பன்
மது

Comments

  1. நுணுக்கமாகப் பகிர்ந்த விதம் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. //நமது சமூகம் இசையை கலை மற்றும் பொழுது போக்கு பட்டியலில் வைத்திருகிறது. ஆனால் இசை பொழுதபோக்கு அல்ல. //

    உண்மைதான் நான் பள்ளியில் படிக்கும்போதும் எங்களுக்கு மியூசிக் வகுப்புண்டு அது ஒரு ரிலாக்ஸேஷன் போல் .
    மேலும் நம்ம நாட்டில் இல்லாத வரவேற்பு இங்கே இசைக்குண்டு ..11 அம வகுப்பின் இறுதியில் 6th form open ஈவ்னிங்கில் ஒரு ஆசிரியர் கூறியது ..அறிவியல் படங்கள் அனைத்திலும் 400 மதிப்பெண் எடுத்த மாணவி மருத்துவம் அல்லது வேறு அறிவியல் துறையை எடுக்காமல் இசையை கிங்ஸ் காலேஜில் படிக்க சேர்ந்தாளாம் . ..எனக்கு ஆச்சர்யமாகிப்போனது
    எந்தளவுக்கு இசையை நேசித்திருந்தால் அவள் இப்படி செய்திருப்பாள் என்று தோணுச்சு //மைதியைக் கொணரா. ஆனால் இசையால் அது இயலும், கலையால் அது இயலும்.//100 %உண்மை

    ReplyDelete
    Replies
    1. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி ..
      வகுப்பில் பகிர உதவும்

      Delete
  3. விளக்கம் நன்று தோழரே
    த.ம. 2

    ReplyDelete
  4. நண்பர் மது,

    படு சுவாரஸ்யமான பாடமாக இருக்கும்போல தெரிகிறதே.

    நான் பத்தாவது படித்தபோது தேம்ஸ் நதியில் குளிப்பது பற்றிய ஒரு பாடம் உண்டு. டைட் கார்னெர்ஸ் என்ற பாடம் நினைவிலுள்ளது.

    இதுபோன்ற இசை பற்றி அப்போது எதுவும் இல்லை.

    இசை யின் மகத்துவம் உணர்ச்சிகளின் ஊடே ஒளிந்திருப்பது. முழுவதும் விவரிக்க இயலாது.

    விவால்டியின் four seasons கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதை கேட்கும்போது நம் ஆட்கள் எப்படி அங்கிருந்து பல இசை இழைகளை நம் இசைக்கு கடத்தி வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

    ------இராணுவம் பாதுகாப்பைத் தந்தது, ஆனால் இசைதான் வாழ்விற்கான நம்பிக்கையையும், துயரைக் கடக்கும் வலிமையையும் தந்தது ------

    -----வதை முகாமின் கொடூரம் மனிதர்களைப் பட்டினி போட்டது, உடல் நலிவைத் தந்தது, பொன்னையும் பொருளையும் பறித்துக் கொண்டது, ஏன் உயிரையும் பறித்தது ஆனால் அவர்களின் ஆன்மாவை இசை நிரப்பியது. இசை அவர்கள் ஆன்மாவை செத்துவிடாமல் பாதுகாத்தது. -----

    அருமையான வரிகள். பொருத்தமான மொழிபெயர்ப்பு.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மொழிபெயர்ப்பு இன்னுமே செழுமைப்படுதலாம் என்றே தோன்றுகிறது.

      நன்றிகள் இசைப் பதிவரே

      Delete
    2. போர் சீசன்ஸ்தான்

      Delete

Post a Comment

வருக வருக