பாகுபலி எனும் வர்ணாசிரமப் படம்நந்தன் ஸ்ரீதரன்இப்பதான் பாகுபலி 2 பார்த்துவிட்டு வீட்டுக்கு வருகிறேன்..
உண்மையில் இதை சரித்திரக் கதை என்று சொல்ல முடியாது.. ஏனென்றால் இப்படியொரு வரலாறு நிகழவே இல்லை.. மகா பாரதம் போன்ற இதிகாசம் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது போன்ற இதிகாசங்களும்இல்லை..பின்னர் இதை எப்படித்தான் வகைப் படுத்துவது..? ஃபேண்டசி என்றா..? ஃபேன்டசிக்கு உள்ள வரையரைகளை இந்தக் கதை நிச்சயம் நிறைவு செய்கிறது. ஆனாலும் ஃபேண்டசி என்றால் முற்றிலும் ஃபேன்டசியாக இருக்க வேண்டும். ஆனால் இக்கதை முழுக்க முழுக்க ரியாலிட்டியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது போல இருக்கிறது. படம் முடிந்தது என நினைத்து வெளியே வந்த இருவர் பல்லாவின் தங்கச்சிலை தண்ணீரில் மிதந்து (!) நயாகரா அருவியில் விழுந்து அப்புறம் ராஜமௌலியின் அருவியில் விழுந்து உடைந்து சிதறியபோது, "அம்புட்டும் தங்கம்டோய்.. உன் பொண்டாட்டிக்கு எம்பது பவுனு போட்டப்ப என்னா ரவுசு பண்ணுன.. இந்த சிலையோட கை விரல் மட்டும் நூறு பவுனு இருக்கும் போலயே.." என பேசிக் கொண்டார்கள்..

இப்படியான தோற்றத்தை உண்மை போல தோற்றுவிப்பதில் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. மிகையல்ல..
படம் முழுக்க இந்துத்துவா கருத்துகள்.. அரசன் ஆள வேண்டும்.. பொது மக்கள் பேள வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை.. மக்கள்தான் ராச்சியம் என்பதையே அறியாமல் அரச வம்சங்கள் மக்களை அடிமை நாய்களாகவும் பகடைகளாகவும் பயன்படுத்தும் இந்துத்துவா கோட்பாட்டை மிக எளிதாக மக்கள் மீது திணிக்கும் படம் இது..
உண்மையில் மிக விறுவிறுப்பாக செய்யப்பட்ட படம்.. உண்மையில் பிரம்மாண்டமாக செய்யப்பட்ட படம்.. உணமையில் மக்களை மக்கு மாக்கான்களாக ஆக்க செய்யப்பட்ட படம்..

சங்கரின் கேவலப்பட்ட பிரம்மாண்டத்தோடு இந்த ராஜமௌலியின் கேவலப்பட்ட பிரம்மாண்டத்தை ஒப்பிட்டு வேலை வெட்டி இல்லாத சிலர் விவாதம் நடத்திக் கொண்டு வேறு இருக்கிறார்கள்..
இந்தப் படம் நடந்த கதையும் அல்ல.. வரலாறும் அல்ல.. இதிகாசமும் அல்ல.. வர்ணாசிரம தருமத்தை பொதுமக்கள் மனங்களில் திணிக்கும் நோக்கோடு எடுத்து அந்த நோக்கில் வெற்றிபெற்ற படம் இது..

படத்தில் வரும் அரச குலத்தோர் அனைவரும் தங்கப் பூணூலோடு நடமாடுகிறார்கள்.. முக்கியமான அறிவிப்புகளை இந்துத்துவ சாமியார்களைக் கொண்டு அறிவிக்கிறார்கள். ஒவ்வொரு ஃபிரேமிலும் இந்துத்துவம் பொங்கிப் பிரவாகிக்கிறது. சத்திரியன் என்று ஒவ்வொரு முறை பிரபாஸ் சொல்லும்போதும் சீழ்க்கையொலி பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்த்திருப்பார்கள் போலும்.. நான் படம் பார்த்த அல்லிநகரம் பாத்துமா தியேட்டரில் அந்த மாதிரியான சீழ்க்கையொலிகள் சத்திரியன் என்ற வசனத்துக்கு வரவே இல்லை..

மொத்த‘த்தில் மோடி அரசாங்கம் நடக்கிறது. ராஜமௌலிகளின் படங்களும் வருகின்றன.. நம் மனித மனங்கள் அழுகிப் போய் கிடக்கின்றன..

மன்னர்களின் பெருமையை பீத்தாமல் மக்களின் துயர்களை முன்நிறுத்தும் வரலாற்றுப் படங்கள் வந்து வெற்றி பெறும்போது இது போன்ற பிரம்மாண்ட பிதற்றல்கள் அர்த்தமற்றுப் போகும் என நம்புகிறேன்..
நண்பர்களுக்கான குறிப்பு :

தேனியில் பாத்துமாவில் மட்டும்தான் பாகுபலி 2 போட்டிருக்கிறார்கள்.. தியேட்டரில் ஃபர்ஸ்ட் ஷோவிலேயே வேர்த்து வேர்த்து வடிகிறது.. இன்டர்வெல்லில் கேண்டீனில் போய் தண்ணி பாட்டில் கேட்டால் இல்லை என சொல்கிறார்கள். தியேட்டரிலேயே கேன் வாட்டர் வைத்திருக்கிறார்கள். அதில் ஐம்பது பேர் கியூ நின்றபடி இருக்கிறது.. ஆக நண்பர்கள் பாத்துமா தியேட்டர் போகும்போது தண்ணீர் பாட்டில்கள் குறைந்தது நாலைந்து கொண்டு செல்லுங்கள். இலலை என்றால் உடம்பிலிருந்து வியர்வையின் மூலம் வெளியேறும் தண்ணீரை சமன் செய்ய முடியாது..
பாகுபலி பிரம்மாண்டமான என்டர்டெயினர்தான்..

ஆனாலும் பாகுபலி மாதிரியான படங்கள் சமூகத்துக்குப் பிடித்த கேடுதான் என்பது எனது முடிபு...

ஆக்கம்
 நந்தன் ஸ்ரீதரன்

Comments

 1. உண்மையை உரக்கச் சொன்னமைக்கு நன்றி தோழர்
  த.ம.1

  ReplyDelete
 2. நண்பரே,

  இது ஒரு வித்தியாசமான விமர்சனம். மேலும் நியாயமாகவே இருக்கும் என்று படுகிறது. நான் இன்னும் பாகுபலி முதல் படத்தையே பார்த்ததில்லை. இந்தப் படத்தை டி வி யில் எப்போதாவது காட்டும்போது பார்க்கலாம் என்றிருக்கிறேன். மற்றபடி ஹாலிவுட் டை மிஞ்சிவிட்டார்கள் என்று கூவுவதெல்லாம் வேடிக்கை.

  பாஹுபலி ஒரு பிரம்மாண்ட குப்பை.

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம் தோழரே..

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 4. அடேங்கப்பா!

  எல்லாம் நம் மனநிலைதான் இருக்குனு நினைக்கிறேன். மேகத்தை அழகான பெண்ணாகப் பார்க்கலாம்னதே மேகத்தை இன்னொருவர் ஆணும் பெண்ணும் உறவு கொள்வதுபோல் கற்பனையில் பார்க்கலாம். அல்லது ஒருவன் இன்னொருவனை முதுகில் குத்திக் கொலவதுபோலும் பார்க்கலாம். அதே மேகம்தான் ஒவொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தோணுது. ஒரு அறிவியலான் பார்வையில் அதே தண்ணீராகவும் ரெண்டு ஹைட்ரஜனும், ஆக்சிஜனுமாக தெரியலாம்.

  ஆக, பார்ப்பவனைப் பொறுத்துத்தான் அது.

  உண்மை எது இதில்? என்றால் ஒரு தலை பட்சமான பதிலாகத்தான் வரும்.

  இன்றைய சூழலில் வர்ணாசிரமம் சொல்லி பார்ப்பனர்கள் பேச பயப்படுகிறார்கள். அதெல்லாம் தவறுதான் என்றுகூட ஏற்றுக்கொள்ளும் மனநிலையை பலர் பெற்றுள்ளார்கள். இருந்தாலும், ட்ரடிஷன் என்பதால் அதை தூக்கி எறிய முடியாமல் குழப்ப மன்நிலையுடன் தொடர்கிறார்கள் என்றுகூட ஒரு திறந்த மனதுடன் சொல்லலாம்.

  ஆனால், வர்ணாசிரத்தை வைத்து முழு நேரப் பிழைப்பு நடத்துவது திராவிட நாதாரிகள்தான். யாரையோ காப்பாத்த முயல்வதாக பம்மாத்துக் காட்டி தன் பொழைப்பை ஓட்டுகிறார்கள் என்று கூட சொல்லலாம்னு அடிக்கடி தோணுது.

  நான் பாகுபலி ஒண்ணும், ரெண்டும் இன்னும் பார்க்கவில்லை. அப்படி ஒண்ணும் பார்க்கணும்னு ஈர்ப்பு இல்லை. நான் பார்க்காதனால எனக்கு ஒரு 30 டாலர் செலவு கம்மி அவ்ளோதான்.

  ஆனால், இப்படத்தின் கமர்ஷியல் வெற்றி என்னை பிரமிக்க வைத்துள்ளது. ஒரு சாதாரண ரசிகனை தியேட்டர்ல போய் பார்க்க தூண்டியுள்ளது இப்படம். உலகம் முழும் வாழும் இந்தியர்கள் இப்படத்தைப் போய் பார்க்கிறார்கள். இது ராஜமெளலியின் மிகப் பெரிய வெற்றியே.

  அதைப் பாராட்டவும் செய்யலாம். இல்லைனா வர்ணாசிரம் பத்தியும் பேசலாம்.

  இதில் வர்ணாசிரம் இருக்கா? வரலாற்றுப் படம் என்றால் வர்ணாசிரத்தை தவிர்க்க முடியாது. வர்ணாசிரம்னு வந்துவிட்டால் அதை பலவாறு திட்டலாம்தான்.

  மேகத்தை (பாகுபலிய) நந்தன் பார்க்கும் விதம் ஒரு வகை. அவர் பார்ப்பதை அவர் எழுதுகிறார். ஏன் அவர் இன்னொரு கோணத்தில் பார்க்கிறார்? அவர் மனநிலை அப்படி. :) பார்ப்பவர் கணகளுக்கேற்பத்தான் தெரியும் "மேகம்". ஆக நந்தன் மனநிலையைத்தான் நான் இங்கு பார்க்கிறேன்.

  ஒரு வகையில் இப்படத்தை எப்படிடா திட்டலாம்னு காத்துக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் இங்கே த்ன உணர்வுகளை சேர்த்துக் கொட்ட நந்தன் ஒரு வழி வகுத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு ஒரு சின்ன வெற்றி. ஆனால் ராஜமெள்லியின் வெற்றி பிரமாண்டமானது என்பதால் நந்தன் ஒரு சிறு தூசுவாகப் போய்விட்டார் பாவம். :(

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வருண்,

   நந்தனின் சமூக நிலைப்பாடு எனக்கு உவப்பானது.

   முதல் முதலாக தங்கப் பூணூல் குறித்துப் பேசியவர் நந்தன்தான்

   மிகச் சரியாக பிராமணியக் கூறுகளைக் கண்டறிவார்.

   அவர் யார் என்று தெரிந்தால் உங்களுக்கு அதிர்ச்சிகள் காத்திருக்கலாம்.

   அவரது பார்வை நுட்பம் என்னை பகிர வைத்தது. உங்களை எகிற வைத்ததும் அதுவே.

   மேகம் குறித்த என்னுடைய பார்வை வரும் எட்டாம் தேதி வரும்.
   ஷெட்யூல் செய்திருக்கிறேன்.

   பிறகு
   அடியேனும் ஒரு திராவிட நாதாரி என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

   Delete
 5. இந்த வகை தலைப்பில் ஒரு விமர்சனத்தை எதிர்பார்த்தேன். ஆனால் உங்கள் பார்வையில் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். தங்கப்பூணூல், சாமியார் என்று சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு இந்துத்துவப் படம் என்றால் ?, எடுத்துக்காட்டாக முதல் காட்சியில் அசுரனின் பொம்மையை எரிப்பது, கட்டப்பா தான் அடிமையாக இருப்பதில் சிலிர்த்துக்கொள்வது இப்படி விரிவாக அலசியிருக்கலாம்.
  இன்னொரு முரண் முதல்பாகத்தில் தமன்னாவை பாலியல் வன்முறை செய்யாத குறையாகக் பிடித்து இழுத்தும் தள்ளியும் விளையாடிவிட்டு இப்பாகத்தில் பெண்ணைத் தொட்டவனின் கழுத்தை வெட்ட வேண்டும் என்பது என்ன நியாயம் என்பது விளங்கவில்லை.

  ReplyDelete
 6. எதைச் சொன்னால் காசு பார்க்கலாம் என்று ராஜ மௌலிக்கு நன்றாகவே தெரிகிறது :)

  ReplyDelete

Post a Comment

வருக வருக