இது பாகுபலி இரண்டு


இது பாகுபலி குறித்த என்னுடைய பார்வை.

திரையரங்கங்களை தற்காலிகமாக ஈர்ப்பு மையமாக மாற்றியிருக்கிறது.


வசூலில் சாதனைகளைப் படைதிருக்கிறது.

ஒரு தனிமனிதனின் படைப்பாற்றளுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்!

பலர் சிலாகித்து எழுத, நந்தன் அவரது பார்வையை பகிர்ந்திருந்தார்.

பல்வாள்தேவனின் தேவனின் தங்கப் பூணூல், மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பே கொடுக்காத சிகை நீக்கும் தர்மம்

குறித்து நந்தன் பேச நான் அவர் இற்றையை பகிர்ந்திருந்தேன்.

மக்கள் ஏற்புடைய நாயகன் சிம்மாசனத்தில் அமர்கிற பொழுது படம் நிறைவடைகிறது.

இறுதி வசனம் எல்லாவற்றையும் சொதப்பிவிடுகிறது.

"நான் இட்டதே ஆணை, நான் சொல்வதே சாசனம்"

சொல்லப் போனால் மக்கள் புரட்சி என்று துவங்கி நெப்போலியனில் முடிந்த புரட்சி போன்ற எண்ணற்ற புரட்சிகளை

கண்முன் நிறுத்தும் முடிவுதான்.

மக்களின் ஏக உணர்வுகளை வாங்கிச் செரித்து அவற்றை தங்கள் அரசியல் இருப்புக்கு பயன்படுத்தும் அன்றய இன்றைய  அரசியல் நிகழ்வுகளைக் அப்படியே கண்முன்னால் கொணரும் இறுதி வசனம்.

என்னால் படத்தை ரசிக்க முடியவில்லையே ஏன்? என்று என்னவளைக் கேட்டேன்.

ராஜா ராணிப் படத்தை இதைவிட அழகாய் பிரமாண்டமாய் எப்படிக் காட்ட முடியும்?

கிராபிக்ஸ் என்றாலே பியூட்ச்சர மட்டுமே பார்த்து பழகீட்டிங்க என்று தீர்ப்பளித்து படத்தை ரசிக்கத் துவங்க நான் வலிந்து கவனம் குவித்தேன்.

படத்தில் நான் ரசித்த இடங்கள்...

ரொம்பப் பிடித்து டைட்டில் சீக்வென்ஸ்.

தெறி, சிஜி, டைட்டில் போட்டது போலவும் ஆச்சு, முதல்பாகத்தை சொன்னது போலவும் ஆச்சு, படத்தின் பிரமாண்டத்தை

அப்படியே பிரதிபலித்திருக்கும் சீக்குவன்ஸ்.

யூ.கே டெக் கார்திகேயன் ஒருமுறை பேசும்பொழுது சொன்னார், சார் நாங்க யாரவது தெலுங்குப் பசங்க இன்டர்வியுக்கு வந்தால் இடத்தைக் காலி செய்துவிட்டு வந்துவிடுவோம். ஒரு ப்ரோக்ராம் எழுதச் சொன்னால் கீழிருந்து மேலாக எழுதுவார்கள் என்றார். தலைகீழாக ஒரு நிரலை எழுத எத்துனை நிபுணத்துவம் வேண்டும்!

இன்னும் சாதிய தற்குறிகள் நிறைந்த, பெருநிலக்கிழார்கள் பண்ணை அடிமைகளை வைத்திருக்கும், ஏழைப் பெண்களை
விபச்சாரத்தில் தள்ளுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் மாநிலத்தில் இருந்து எழுந்திருக்கும் தொழில்நுட்பச்  செறிவு திகைக்க வைக்கிறது.

மிரட்டும் கிராபிக்ஸ் நுட்பம்.

என்னதான் கிராபிக்ஸ் இருந்தாலும் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை தரும் காட்சிகள்தான் ஒரு படத்துக்கு பலம்.

அந்தவகையில் காதல் மிளிரும் பாகுபலி, தேவசேனா  போரிடும் காட்சிகள், "விரல்களை அல்ல தலையை" காட்சி", என சில காட்சிகள் நம்மை அசத்துகின்றன.

மிகக் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், இடைவேளையில் அரண்மனை அதிரும் காட்சி. ஓர் பெரிய வாவ்.

அதே போல இறுதிக் காட்சியில் கதாயுதத்தின்  அடியைத்தாங்கி அதைத் தரையில் பரப்பும் நாயகன்.

வழக்கம் போல  இயற்பியல் விதிகளை வளைத்திருந்தாலும் நல்ல கற்பனை.

பாகுபலியின் பொறியியல் நுட்பம். வடிமைக்கும் இயந்திரங்கள் மூலம் மக்கள் உழைப்பை எளிதாக்கும் பாணி ரசனை.

இதே போன்ற கருவிகள் பண்டையகாலத்தில் எகிப்திலும், சைனாவிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது வரலாறு.

இது அப்படியே ரசல் க்ரோ ஜாக்கி சான் நடித்த டிராகன் ப்ளேட் படத்தை நினைவூட்டியது.

எரியும் கொம்புகளோடு காளைகள்! யோவ் இது நம்ம ஆதி நடித்த அரவான் காட்சி இல்லையா? என்ன சிஜி இன்னும் நேர்த்தியாக இருக்கிறது என்றெல்லாம் கேள்வி கேட்காமல் ரசிக்க வேண்டும்.

(கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ப.வெங்கடேசன் ஆ.வியில் எழுதியிருக்கும் வேள் பாரியில் இதே போல் ஒரு விசயத்தை பகிர்ந்திருப்பார்.)

படத்தில் நகைப்புத் தரும் கணங்கள்

தேவசேனா மகிழ்மதிக்கு பயணிக்கும் தருணத்தில் வரும்  கனவுக்காட்சிப் பாடல்.

இறுதிக் காட்சியில் மிதக்கும் தங்க முகம். கிட்டத்தட்ட அரை டன் எடை கொண்ட ஒரு தங்க முகம் எப்படி தண்ணீரில் மிதக்கிறது. டேய் உங்க பேட்மேன் மட்டும் முதுகெலும்பே உடைந்தாலும் மூனே வாரத்தில் கிளைமாக்ஸ் பைட்டை போடுறாரு, அப்போ கைதட்டிட்டு இப்போ என்ன கேட்கிறே என்று எகிறக்கூடாது.

படத்தின் இன்ஸ்பிரேசன்கள்.

அப்படித்தானே சொல்ல வேண்டும்?
பசுமை பின்னணியில் குதிரையில் பாகு வரும்  காட்சியில் அப்படியே  டாம் க்ரூஸ்சை லாஸ்ட் சாமுராய் படத்தில் பார்த்த நினைவு.

வானை மறைக்கும் அம்பு மழை, ஹீரோ படத்தில் ஜெட்லீயை நினைவுபடுத்தியது.

படத்தின் இன்னும் சில சொதப்பல்கள்


படத்தில் எரிச்சலூட்டிய விசயம், தேவையற்ற காட்சிகளுக்கு தந்திருக்கும் பிரமாண்டம். எரிச்சல் வரும் பிரமாண்டம். குறிப்பாக குந்தளதேசத்தின் அந்த பெரும் நீர்த்தேக்கம்.

ப்ரோப்ர்சன் விதிகளை வளைப்பது பிரமாண்டமாக தெரியவைப்பதில் வேண்டுமானால் உதவியிருக்கலாம். ஆனால் ரசிக்க உதவவில்லை. அதிலும் அணையைத் தாங்கும் பல கிமி நீளமுள்ள ஒரு  முட்டுக்கம்பில் ஏறி நாயகன்  நூறுமீட்டர் ஸ்பிரின்ட் ஓடுகிறார். எரிச்சலோ எரிச்சல்.

சிவகாமிதேவியின் தன்பீடு நிறைந்த செயல்பாடுகள். ஆணவம்.

கடந்த பகுதியில் படத்தை தூக்கி நிறுத்தும் ஒரு கதாபாத்திரம் இந்த பாகத்தில் எரிச்சலூட்டும் பாத்திரமாக மாறியிருப்பது என்ன கொடுமைடா சரவணன்.

திரையுலகு, ரசிகர்கள், விமர்சகர்கள் படத்தைக் கொண்டாடலாம். ஆனால் அடியேனுக்கு இல்லை.

சொல்லப் போனால் முதல் பாகத்தின் அருகே கூட வர முடியாது.

பிரபாஸ் வெகு சிரத்தையெடுத்து இரண்டு கதாபாத்திரங்களை வித்தியாசப் படுத்திக் காட்டியிருக்கிறார்.

அனுஷ்கா, போர் கெ புண்ணியத்தில் வயதை தெரிவிக்கிறார். இருந்தாலும் படத்தின் பல காட்சிகளைத் தாங்கிப் பிடிக்கிறார்.

வாவ் கேரக்ட்டர், கடந்த பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் என்றால், இந்தப் பாகத்தில் அனுஷ்கா, தமன்னா ஒரே காட்சியில் வருவதோடு சரி.

இசை

செமை காண்டானது இசைக்குத்தான்.

க்ரௌச்சிங் டைகர், ஹிடன் டிராகன் படத்தில் வருகிற இசைத் தொகுப்பு ஒன்று ஒலித்து  பார்ப்பது ஆந்திரப் படமா இல்லை சைனீஸ் படமா என்கிற குழப்பத்தை ஏற்படுத்தியது.

உலகத் தரம்வாய்ந்த இசைக் கோர்ப்பு ஒன்றை பயன்படுத்தும் பொழுது அதற்குரிய நியாயம் விசுவலில் இருக்க வேண்டும்.

குறிப்பாக இறுதியாக அந்த இசை ஒலிக்கிற பொழுது நெட்டுக் குத்தாக நிற்கவைக்கப்பட்ட காய்ந்த வைக்கோல் பத்தைகள் எரிச்சலூட்டுகின்றன.

மற்றபடி அஆவ், ஊவ் என்ற சப்தங்களை பலமாக நம்பிவிட்டார் இசையமைப்பாளர்.


ஆமா

ராஜமௌளி அடுத்து என்ன செய்யப் போகிறார்?

அன்பன்
மது.


Comments

  1. வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஆமா...
    ராஜமௌளி அடுத்து என்ன செய்யப் போகிறார் ?

    பாகுபலி 3

    வேறென்ன....
    நடுநிலையான விமர்சனம் தோழர்.

    ReplyDelete
  3. பாகுபலி 2 பார்த்தாச்சு நாங்கள் இருவருமே...

    பிரம்மாண்டம் தான். பல காட்சிகள் பிரமிக்க வைக்கிறதுதான் விமர்சகர் சொன்னது போல....ஹாலிவுட்டுக்கு நிகராக நாமும் எடுக்க முடியும் என்ற ஒன்று...கிராஃபிக்சில் கலக்க முடியும் என்ற ஒன்று.

    விமர்சனம் மாறுபட்ட கோணத்தில் நன்று...

    ReplyDelete
  4. விமர்சனம் அருமை .இங்கே பிபிசி ல கூட சொன்னாங்க பாஹுபலி பற்றி புகழ்ந்து .ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிச்சிருக்கீங்க ..இங்கேயும் தியேட்டரில் ஓடுது ..நான் இன்னும்முதல் பாஹுபலியே பார்க்கல ..

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம்.

    நான் இரண்டு பாகமும் பார்க்கவில்லை! :)

    ReplyDelete

Post a Comment

வருக வருக