குழந்தைகளும் நூல்களும் bharathi puthakaalayam


கடந்த ஒன்றாம் தேதி ஒரு நல்ல முன்னெடுப்பு ஒன்று நிகழ்ந்தது.



பாரதி புத்தகாலயம் விஸ்வா அழைத்தார்.

குழந்தைகளை அழைத்துக் கொண்டு பாரதி புத்தகாலயம் வாருங்கள். இன்று குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு நிகழ்வு இருக்கிறது என்றார்.

நான் அரங்கை அடைந்த பொழுது தோழர் பாலகிருஷ்ணன் வெகு அற்புதமான நடையில் ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

எனது தாமதமான வருகை அமர்வின் போக்கில் சிறு அதிர்வை ஏற்படுத்துவதை உணர்ந்தேன்.

எதிர்பாரா விதமாக நண்பர் ரபீக் சுலைமான் அங்கு இருந்தார் இளைய மகள் ஆயிஷாவுடன்.

தோழர் பாலு அவரது கதையை சொல்லி முடித்ததும் அரங்கில் சூழ்ந்திருந்த குழந்தைகள் தங்கள் புரிதலைப் பகிர்ந்துகொண்டனர்.


அடுத்த நிகழ்வாக குழந்தைகள் ஆளுக்கு ஒரு வரியாக கதை ஒன்றை வளர்த்தெடுத்தனர்.

எந்தக் கட்டுப்படும் இல்லாத காரணத்தால் வரிகள்  இயல்பாக வந்தது.

நல்லதோர் நிகழ்வில் பங்கெடுக்க வாய்ப்புக் கிடைத்ததை நினைத்துக் கொண்டே விடைபெற்றோம்.

மாதம் ஒருமுறை குழந்தைகள் கூடினால் நலம்.

அன்பன்
மது

Comments

  1. நல்ல செயலுக்கு வாழ்த்துகள் தோழர்
    த.ம. 1

    ReplyDelete
  2. நல்ல விஷயம். தொடரட்டும் இது போன்ற நிகழ்வுகள்.

    ReplyDelete
  3. நல்ல விஷயம் ..பிள்ளைகளின் யோசிக்கும் திறனை அதிகரிக்கும் இம்மாதிரியான முன்னெடுப்புகள் ..பாராட்டுக்கள் இதனை ஆர்கனைஸ் செய்தொருக்கு

    ReplyDelete

Post a Comment

வருக வருக