Nagore Rumi
April 28 at 7:36pm ·
வணக்கம் என்று சொல்வது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். சமீபத்தில் கவிஞரும், எழுத்தாளரும் நண்பருமான நாகூரி அப்துல் கையூம் தன் வாட்ஸப்பில் ஒரு பதிவை இட்டிருக்கிறார். அந்த கருத்துக்களோடு நான் முற்றிலும் உடன் படுகிறேன். இதோ அது உங்களுக்காக:
எனக்கு தெரிந்த தமிழை எழுதுகிறேன்
பல இளம் வாலிபர்களின் முகநூல் பதிவுகளில் காணக்கிடைக்கும் தகவல்
வணக்கம் என்ற தமிழ் சொல்லை சொல்ல கூடாது அது பெரிய பாவம் , வணக்கம் என்ற தமிழ் சொல்லை யாரிடமும் சொன்னால் அது கடவுளுக்கு இணையாக ஒருவரை வணங்கும் செயலாகும் என்று நிறைய சின்ன தம்பிகள் பதிவுகள் போட்டிருக்கிறார்கள்
இந்த கருத்தின் அடிப்படையில் சில டிவி நிகழ்ச்சிகளில் சில மத தலைவர்கள் வணக்கம் என்ற சொல்லை தவிர்கின்றனர்
ஒரு ஐஞ்சாம் கிளாஸ் பெயிலா போன அறிஞர் கண்டுபிடித்த இந்த அறிய தமிழ் மொழி கண்டுபிடிப்பை சில டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரு குல்லா போட்ட பி எச் டி படித்த பேராசிரியரும் இந்த வணக்கம் என்ற வார்த்தையை சொல்வதை தவிர்கின்றதை பார்க்க முடிந்தது
ஐஞ்சாம் கிளாஸ் பெயில் ஆன அறிஞருக்கு தமிழ் மொழியின் தொன்மை தன்மை தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு ஆனால் ஒரு டாக்டர் பட்டம் பெற்ற கல்லூரி பேராசிரியருக்குமா தமிழ் மொழியின் விளக்கம் தெரியாமல் புரியாமல் இருக்கும் ?
வணக்கம் , சோறு , கயிறு , மயிர் , தயிர் , இது போன்றவைகள் தமிழ் மொழியில் உள்ள சில சொற்கள் (Words ) இந்த சொற்கள் வாக்கியங்களில் அமைத்தால் மட்டுமே அது முழு அர்த்தம் ( பொருள்படும் )
வணக்கம் (greetings , wishes )
வணங்குகிறேன்
உங்களை வணங்குகிறேன்
உங்களை தெய்வமாக வணங்குகிறேன்
உங்களை கடவுளாக நினைத்து வணங்குகிறேன்
உங்களை என் கடவுளாக ஏற்று கொண்டு வணங்குகிறேன்
இதில் முதலில் உள்ள " வணக்கம் " என்பது எந்த வாக்கிய பொருளடங்கிய செயலையும் குறிக்காது
அடுத்து கீழே எழுதியுள்ள வார்த்தைகள் பல அர்த்தங்கள் கொண்ட வாக்கியம் இதற்க்கு பொருள் உண்டு
பன்றி என்று ஒரு வார்த்தையை சொன்னால் நான் பன்றியை சாப்பிட்டதாக பொருள் படாது
பன்றி மேய்த்தேன்
பன்றியுடன் படுத்தேன்
பன்றி கறி சாப்பிட்டேன் , இப்படி வாக்கியமாக சொன்னால் மட்டுமே அதன் முழு வினை பொருளாகும் , செயலாகும்
தமிழர்கள் கலாச்சாரத்தில் " வணக்கம் " என்ற சொல் மற்றவர்களை பார்த்து சொல்வது ஒரு வாழ்த்து போன்றதே
வணக்கம் என்ற தமிழ் சொல்லுக்கு ஆங்கில அகராதியில் wishes , greetings என்றும் , வணக்கம் என்ற தமிழ்சொல்லுக்கு அரபி மொழி அகராதியில் - மர்ஹபா - அஹ்லன் , என்ற வாழ்த்து சொல்தான் அர்த்தமாக பதிவு செய்து இருக்கின்றனர்
வணக்கம் என்ற ஒற்றை சொல் - நான் உங்களை கடவுளாக வணங்குகிறேன் என்ற அர்த்தம் கொண்டது அல்ல
வணக்கம் என்பது ஒரு ஒற்றை வாழ்த்து சொல் மட்டுமே
நான் உங்களை கடவுளாக வணங்குகிறேன் என்பது ஆங்கிலத்தில் = I worship you as my God = أنا العبادة لك إلهي = அரபு மொழியில் = அனா இபாத் லிக் இலாஹி = அனா ஸல்லிம் இலைக் ஜெய்யல் இலாஹினா
வணக்கம் சொல்லலாமா கூடாதா என்று பெரிய நோபல் பரிசு கேள்வி போல சில அறியாதவர்கள் கேட்பதும் அதற்க்கு ஐஞ்சாம் கிளாஸ் தமிழில் பெயிலா போன அறிஞர்கள் பதில் சொல்லுவதும் பார்க்கும் போது தெரிகிறது
கேனப்பயல்கள் உள்ள வரை கேப்பையில் நெய் வடியதான் செய்யும்
இது போன்றே இரண்டு கைகளை கூப்பி மற்றவர்களுக்கு வணக்கம் ( Wishes / Greetings ) சொல்லும் இந்த கலாச்சாரம் கிழக்காசிய நாட்டு மக்களின் கலாச்சாரம்
இரண்டு கை கூப்பி வணக்கம் சொல்வது (wishes or greetings ) தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் , ஹிந்துக்களின் கலாச்சாரம் மட்டும் அல்ல , இந்த கலாச்சாரம் இந்த பண்பாடு பூட்டான் நேப்பாள் , இந்தியா , இலங்கை , பர்மா , தாய்லாந்து , கம்போடியா , சைகோன் , மலேசியா , இந்தோனேஷியா , பங்களாதேஷ் போன்ற எல்லா நாடுகளிலும் இரு கரம் கூப்பி வணக்கம் சொல்லும் பழக்கம் உண்டு , இதனை யாரும் கடவுள் வழிபாடாக கருதி செய்து கிடையாது
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேஷியா பங்களாதேஷ் மலேசியா போன்ற நாடுகளில் இந்த கலாச்சாரம் பழக்கம் உண்டு , இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டும் வழிபாட்டு தளங்களில் மட்டுமே இந்த இரு கரம் கூப்பி வணங்குவதை கடவுள் வழிபாடாக செய்கின்றனர் , தனி மனிதர்களை பார்க்கும் போது இருகரம் கூப்பி வணக்கம் சொல்லுவதை ஹிந்துக்களும் அதனை கடவுள் வழிபாடாக கருதுவது கிடையாது .
சில புது புது அறிஞர்கள் திடீர்னு தோன்றி
மொழி , கலாச்சாரம் , பழக்கவழக்கம் , பண்பாடு , கடவுள் வழிபாடு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பி தானும் லூசாக ஆகி மற்றவர்களையும் எளிதாக லூசா ஆக்கிடுறாங்க
குறிப்பு : திட்டுவோர் திட்டலாம் , எனக்கு பாடம் நடத்துவோர் கமெண்டில் பாடம் நடத்தலாம்
ஒரு விஷயத்தை எழுத விட்டுவிட்டேன். மறதியால் அல்ல. கவனக் குறைவால். இந்த பதிவு நண்பர் பஷீர் உடையது. அதை எடுத்து நண்பர் கையூம் வாட்ஸப்பில் பதிவு செய்திருக்கிறார்.
என்றாலும் நண்பர் பஷீருடைய, என்னுடைய, கையூமுடைய கருத்தும் இதுதான். இதில் மாற்றமில்லை.
முஸ்லிம்களைப் பார்த்து முஸ்லிம்கள் வணக்கமென்று சொல்லவேண்டும் என்று நாங்கள் சொல்லவரவில்லை. முஸ்லிமல்லாதவர்களைப் பார்த்து அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் அது திணிப்பாக இருக்கும். மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை என்று குர்’ஆன் கூறுகிறது (லா இக்ராஹ ஃபித்தீனி (2:256). அதே சமயம் அவர்கள் நம்மைப்பார்த்து வணக்கம் என்று கூறுவார்களேயானால் பதிலுக்கு வணக்கம் என்று சொல்வதில் தவறு எதுவுமில்லை. ஏனெனில் இறைவன் உங்களது இதயத்தில் உள்ளதைத்தான் பார்க்கிறான், உங்களது செயல்களையல்ல என்று பல இடங்களில் திருமறையும் நபிமொழிகளும் கூறுகின்றன.
கையோடு கை சேர்த்து கைகுலுக்கலாம். ஆனால் நண்பர் இரண்டு கைகளையும் கூப்பி நமக்கு மரியாதை செலுத்தினால் ஒரு புன்னகை பூக்கலாம். அல்லது வேறுவழியில்லாவிட்டால் நாமும் அதுபோல செய்யலாம். இங்கேயும் நோக்கமே பிரதானாமாகிறது.
சகோ அமீர்ஜவஹர் சொன்ன சட்டம், சாட்சி எதுவும் இங்கே வேலை செய்வதில்லை. They are out of context here. ஃபத்வாக்களைப் பற்றி யோசிக்கவேண்டியதில்லை.மார்க்கத்தில் மிக அரிய சேவை செய்த பலருக்கு ஃபத்வாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வாழ்நாள் பூராவும் இயங்கி அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை நிர்மாணித்த சர் சையத் அஹ்மத் கானுக்கு ஃபத்வா கொடுக்கப்பட்டது. திருமறையை முதன் முதலாக பாரசீக மொழியில் மொழிபெயர்த்த எங்களது முப்பாட்டனார் ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி அவர்களுக்கூட ஃபத்வா கொடுக்கப்பட்டது. சகோ பி.ஜெ. அவர்களுக்கும் ஃபத்வா கொடுக்கப்பட்டதாக செய்தி படித்தேன்.
இதில் நாம் எந்த ஃபத்வாவை இப்போது ஏற்றுக்கொள்கிறோம்?
சுன்னத் ஜமா’அத்தினர் அனைவரும் சகோ. பிஜே அவர்களுக்கான ஃபத்வாவை மட்டும் ஏற்றுக்கொள்வார்கள். தவ்ஹீத் ஜமா’அத்தினர் அதை எள்ளி நகையாடுவார்கள்.
தவறான புரிந்துகொள்ளலின் அடிப்படையிலும் ஃபத்வாக்கள் கொடுக்கப்பட்டதை வரலாறு காட்டுகிறது.
உண்மையான ஃபத்வாவை இறைவன் தான் நிர்ணயிப்பான். அதுவும் மறுமையில்தான். அல்லாஹ்வையும், ரஸூலையும், என்னையும், என் நண்பர்களையும் பொறுத்தவரை உங்கள் உள்ளத்தில் உள்ளது சரியாக இருக்கும் வரை எல்லாம் சரிதான்.
பாராட்டுகள்.
ReplyDeleteநல்ல கருத்தாக்கம் பகிர்வுக்கு நன்றி தோழர்
ReplyDeleteத.ம.
நன்றி தோழர்
Deleteஇப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கானுங்க:)
ReplyDeleteஎந்த மதத்திலும் அடிப்படைவாதிகள் உண்டு தோழர்.
Deleteநல்ல பகிர்வு.
ReplyDeleteஉண்மையில் பகிர்ந்தவர் எம்.எம்.அப்துல்லா
Deleteநான் மறுபகிர்வு செய்திருக்கிறேன்
வணக்கம் சொல்லக்கூடாதுன்னு சொன்னதால நல்லதொரு பதிவு கிடைத்தது. பதிவுக்கு நன்றி
ReplyDelete//வணக்கம் என்பது ஒரு ஒற்றை வாழ்த்து சொல் மட்டுமே//
ReplyDeleteமெக்டனல்ட்ஸ் கேஷியர் கூட இங்கே எந்த ஸ்டேட்ன்னு கேட்டு வணக்கம்னு சொல்றாங்க :) வணக்கம் தமிழருக்குரியது
இலங்கை தமிழர்கள் கடைக்கு போனால் ..வணக்கம் அக்கா அண்ணா என்றே வரவேற்பாங்க
நன்றி சகோ
Delete