உருப்படியான காரியங்கள் இரண்டு


விதைக்கலாம் இதுவரை ஆயிரத்து நூற்றி நாற்பது கன்றுகளை நட்டிருக்கிறது.  பெரும்பான்மையான கன்றுகள் இன்று வளர்ந்துவிட்டன, மலர்களை மலர்த்தியிருக்கின்றன.அப்படி ஒரு நிகழ்வின் பொழுது நண்பர் திரு.ஆனந்த் அவர்களின் பழனியப்பா ஸ்டோர்ஸ் அருகே ஒரு புங்கைகன்றை நட்டுத்தர கோரினார். புங்கை என்று வேறு எதோ ஒரு மரத்தை நட்டுவிட்டோம். இருப்பினும் நிழல் இருந்தால் சரி என அவர் அந்த சிறுகன்றை தொடர்  கவனிப்பின் மூலம் ஐந்தடிக்கு வளர்த்துவிட்டார்.

பிரச்சனை என்னவென்றால் கன்று கூண்டைத் தாண்டி வளர்ந்துவிட்டது. பெரிய அளவு கூண்டைக் கோரினார் ஆனந்த். எங்கே கிடைக்கும் என்கிற விவரம் இருந்தால் போதும் என்றும் சொல்லி வந்தார்.

ஒரு ஞாயிறு அன்று நிறையையும் மகியையும்
அழைத்துக்கொண்டு கூண்டு கடையில் ஆஜர். நான்கு கழிகள் ரூபாய் ஐம்பது, ஒரு மீட்டர் ஷாடோ நெட் அறுபதுரூபாய். நிறையும் மகியும் நீண்ட கழிகளைப் பிடித்துக்கொள்ள பொருட்களை நண்பர்  ஆனந்திடம் ஒப்படைத்தோம்.

மாலை ஒரு போன் கால், ஏய் நீ ஆரம்பிச்சு வைச்ச அதுனால இன்னும் மூன்று கன்றுகளை நட்டுவிட்டேன் என்றார். ஆம் புதிதாக மூன்று புங்கன் கன்றுகள்.

பலன்களை எதிர்பாராமல் செய்யப்படும் செயல்கள் ஒரு ரிப்பில் விளைவை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன்.

ஓர் அழைப்பு இளவல் மணிகண்டன் ஆறுமுகம், புதுகை தொல்லியல் கழகத் தலைவர்.

அண்ணே வீட்ல துறைத்தேர்வுகளை எழுதுறாங்க, நாம குட்டிசக் கூட்டிக்கொண்டு திருமயம் போய்ட்டு வந்துடுவோமா அங்கே ஒரு வேலை இருக்கிறது.

பொதுவாக தொல்லியல் ஆர்வலர்களோடு செல்வது சவாலான விசயம். அவர்கள் இருப்பது வேறு உலகு. அவர்களின் தேடலும், மெனக்கடலும் அசாத்தியமானது. மண்டையைப் பிளக்கும் வெயில் என்றாலும் பல சதுர கி.மிக்கள் நடந்தே அலைவார்கள்.
அப்படி ஒரு தேடல் பணிக்கு குழந்தைகளோடு செல்வது சரியா  என்று நினைத்தேன்.

மேலிடத்தில் இதுகுறித்து பேசியஉடன் இந்த அட்வென்சர் வேறு எப்போ குழந்தைகளுக்கு கிடைக்கும் என்றார். ஒகே.  டபுள் ஒகே.

வியப்பான விசயம் என்னவென்றால் தனது லாட்ஜியை  தானே செலுத்திக் கொண்டு வந்தார் மணிகண்டன். வெகு குறுகிய காலத்தில் காரைச்செலுத்துவதில்  நிபுணத்துவம் அடைந்திருந்தார்.
அண்ணே எதிர்பார்க்கலைல என்றார். உண்மையில் எதிர்பார்க்கவில்லைதான்.

நாங்கள் போன நேரத்தில் திருமயம் கோவில்கள் நடை சாத்தப்பட்டிருந்தன.

எனவே நேரடியாக கோட்டை.

கோட்டையில் இருந்த உயரே இருந்த ஒரு லிங்கத்தைப் பார்த்தோம்.
இதற்கு முன்னரே பார்த்திருந்தாலும் இம்முறை என்னை வியப்பில் ஆழ்த்திய லின்கேச்வர்.

சதுர ஆவுடையுடன்.


புதுகையில் நான் பார்த்த சதுர ஆவுடை கொண்ட லிங்கங்களுக்கு வேறு பெயர்கள் உண்டு. ஆட்டாத கல்லும் அரைக்காத அம்மி ... எவ்வளவு அடக்குமுறைகள் இருந்தால் ஒரு வழிபடப்பட்ட சிலையைக் கைவிடவும், அதுகுறித்து குறிப்புகளில் பேசவும் இந்த சமூகம் நிர்பந்திக்கப்பட்டிருக்கும்.

பொற்பனைக்கோட்டைப் பகுதிகளில் இருந்து சிதைக்கப்பட்ட லிங்கங்கள், சிருஞ்சுனை பகுதியில் கழட்டி எறியப்பட்ட லிங்கங்கள் நமது வரலாற்றில் மிஸ்ஸிங் லிங்க்குகள். கூன்பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாக உருவானபொழுது இவை சிதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமக்கு மாலிக்காபூர் இருக்கிறான். அவன் தலையில் போட்டால் போதும். பாண்டியக் கோவில்களை சிதைத்த சைவ நெறிகளைக் குறித்து நமக்கு தெரியப்போவதுமில்லை.
ஆதாரங்கள் எல்லாம் ஆடிப் பெருக்கில் ஆற்றிலோ குளத்திலோ  நம் மூதாதைகளால் எறியப்பட்டிருக்கும்.

இப்படி ஏனைய சதுர ஆவுடை லிங்கங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் திருமயத்தில் மட்டும் படிகளே இல்லாத மலையின் உள்ளே உள்ள குடைவரையில் இருப்பதால் தலைவர் தப்பிவிட்டார்.
வாவ் அனுபவம் அது.

அதைவிட வாவ் குட்டீஸ் செம திரில்லிங்காக இரும்பு ஏணிப்படிகளில் ஏறியது.

இந்த ட்ரிப்பில் என்னை வியப்பில் ஆழ்த்திய இன்னும் சில விசயங்களில் ஒன்று மணியின் மூத்த புதல்வன் திரு தொல்லியல் வடிவங்கள் குறித்து அறிந்துவைத்திருந்தது. (அரசுப் பள்ளி மாணவர்). நான் பெரிதும் ரசிக்கும் அப்துல் ரகுமனைக் கூட இன்னும் நிறைக்கு அறிமுகப்படுத்தவில்லை என்ற நினைவு எனக்கு எழுந்தது.

இரண்டாவது டிக்கெட் லோகேஷ்  சொன்ன வசனத்தில் மறக்க முடியாதது “அப்பா ரொம்பப் பேசுன அடிச்சுக் கொன்றுவேம்ப்பா” என்று ஊரையே மிரட்டிக் கொண்டிருக்கும் மணியைப் பார்த்துச் சொல்ல,  எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.


மைத்துனர் திருமண நிகழ்விற்கு அழைப்பிதழ் வைக்கும் பணியில் இருப்பதால் கொடை விடுமுறைக்கு வேறு எங்கும் செல்லவில்லை. குழந்தைகளுக்கு  பர்சேஸ் பயணங்கள்தான்.

சந்திப்போம்
அன்பன்
மது

Comments

 1. புதுக்கோட்டை பதிவர் சந்திப்பின் போது ,சர்ச் முன்னால் நட்ட கன்றுகள் வளர்ந்து விட்டனவா ?பார்க்கணும் போலிருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. படம் எடுத்துவிட்டேன் ஆனால் குவியலில் இருக்கிறது..
   பகிர்கிறேன்

   Delete
 2. அருமையான நிகழ்வுகள்! தொல்லியல் படங்கள் அழகாக இருக்கு இன்னும் கொஞ்சம் பெரிதா எடுத்துப் போட்டிருக்கலாம்ல...பல வரலாற்று உண்மைகள் இடைச் செருகலால் அகழ்வாராய்சிகளாகப் போய்விடுகின்றனதான்...க

  அட மைத்துநருக்குத் திருமணமா வாழ்த்துகள்.!!

  கீதா

  ReplyDelete
 3. விடுமுறையில் உங்களுடன் நாங்களும் சேர்ந்தது போலிருந்தது.

  ReplyDelete
  Replies
  1. சதுர ஆவுடைகள் குறித்தும் அவை சிதைக்கப் படுவது குறித்தும் நாம் பேசியிருக்கிறோம் அல்லவா.. நன்றிகள் அய்யா

   Delete
 4. படங்களுடன் பயண அனுபவங்களைப்
  பகிர்ந்த விதம் அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அய்யா

   Delete
 5. அப்படியே எங்கூரு பர்வத மலைக்கு விசிட் அடிங்க. ஒரு அடி உயரமுள்ள லிங்கத்தை தரிசிக்க உயிரை பணயம் வைக்கனும்.

  பர்வத மலையை பற்றி என் பதிவுல இருக்கும் படிச்சு பாருங்க. நான் போய் வந்திருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ...கேள்விப்பட்டிருக்கிறேன்

   Delete
 6. அருமையான நிகழ்வுகள்
  படங்களை இன்னும் கொஞ்சம் பெரிதாய் பதிவிட்டிருக்கலாம்

  ReplyDelete

Post a Comment

வருக வருக