மூடினாலும் தகறாரா?டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்து ஒரு தகவல்..

எங்கள் மாவட்டத்தில் அர்பணிப்போடு பணியாற்றும் தமிழாசிரியை ஒருவர் இருக்கிறார்.

காலை வீதிக் கூட்டத்திற்கு வந்த அவர் கொஞ்சம் சோகமாக இருக்கவும் காரணம் கோரினோம்.


பகிர்ந்தார்.

பதினாறு வயதிலேயே அவரது மாணவி ஒருவருக்கு திருமணமாகிஇருக்கிறது...

அவருக்கு இரண்டு வயதில், ஆறுவயதில், எட்டு வயதில் என மூன்று குழந்தைகள்.

இருநாட்கள் முன்னர் கணவர் தூக்கிட்டு இறந்துவிட்டார்.

காரணம்

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் சரக்கு வாங்க வழியில்லையாம்.

மது அடிமைத்தனம் ஒரு தகப்பனை எப்படிப் பொறுப்பற்று செயல்படவைக்கிறது என்பதை நினைத்து வேதனை ஒருபக்கம் இருந்தாலும்

அரசு உடனடியாக மீட்பு சிகிச்சை மையங்களை ஆரம்பித்தே ஆகவேண்டிய நிலையில் இருக்கிறது..

ஆனால் என்ன இதை சுப்ரீம் கோர்ட்தான் சொல்ல வேண்டும்.

அதுவரை தாலிகள் இறங்கிக் கொண்டுதான் இருக்கும் ...

#தமிழன் என்று சொல்வோம்

Comments

 1. ச்சே எவ்வளவு வேதனையான விசயம் இதையெல்லாம் அரசு உணருமா ?
  அவர்களுக்கு தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடாய் இருக்கிறதே தோழர்.

  ReplyDelete
  Replies
  1. வேதனைதான் தோழர்

   Delete
 2. இத்தனை நாள் தங்குத்தடையின்றி சரக்கை கிடைக்க செஞ்சுட்டு தடாலடியாய் மூடினா இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், அரசு உடன் இறங்கிசெய்ய வேண்டிய காரியம் அது

   Delete


 3. எப்படியோ தமிழகர்களை மக்களை நாசம் செய்துவிட்டார்கள் நம் தலைவர்கள் வேதனையாகத்தான் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் மைத்துனரே ...
   உண்மைதான்

   Delete
 4. இதுக்கு எல்லாமா தற்கொலை செய்து கொள்வார்கள் ?போனாலும் குடும்பத்தினர் வருத்தப் பட மாட்டார்களே :)

  ReplyDelete
  Replies
  1. இல்லைதோழர், வருத்தங்கள், வேதனைகள், அவமானங்கள் இருக்கத்தான் செய்யும்

   Delete
 5. வேதனைதான். மீட்பு சிகிச்சை மையங்கள் ஆரம்பித்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக பயன்படுத்தவேண்டுமே? எங்கள் வீட்டருகில் இவ்வாறான குடிமகன் ஒருவர் இருக்கிறார். அதிகம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று நல்ல நிலைக்குத் திரும்பியவர் மறுபடியும் குடிக்க ஆரம்பித்துவிட்டார். நாங்களும் எவ்வளவோ கூறிப்பார்த்துவிட்டோம். என்ன செய்வது? சிலர்தான் திருந்துகின்றார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சரியான கருத்து அய்யா

   Delete
 6. கொடுமையிலும் கொடுமை...

  ReplyDelete
 7. டாஸ்மாக் கடைகளை மூடுவது ஒரு புறம் இருக்கட்டும்...ஆனால் மதுவிற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க சைக்கலாஜிக்கல் கவுன்சலிங்க் + சைக்கியாட்ரி ட்ரீட்மென்ட் இரண்டுமே தேவைப்படலாம்..அது ஒவ்வொருவரைப் பொருத்து. இதற்கு அரசு என்ன செய்யும் எப்படி செய்யும்? எப்படி இதற்குத் தீர்வு கொடுக்கும்? அடிமையானவர்களை அவர்களது குடும்பம்தான் மீட்பு மையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான விழிப்புணர்வு இருக்கிறதா? மக்களிடம்?

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பிரச்சாரம் மூலம் உருவாக்க வேண்டும்
   விழிப்புணர்வை

   Delete

Post a Comment

வருக வருக