வாக்காளர் மனநிலை இப்படித் தான் இருக்குமோ?



பாண் ஷாப் கிரானிகல்ஸ்

பால்வாக்கர் நடித்த படம் அது ..

கிரானிக்கல் டைப் படம். 

பல்வேறு கிளைக்கதைகள் ஒன்றினையும் கதை.
அதில் ஒரு சைக்கோ கதை.
பெண்களைக் கடத்தி வன்கொடுமை செய்யும் சைக்கோவின் கதையும் .
அவன் பாணி கொஞ்சம் அதீதம். 

ஒன்றன் மீது ஒன்றாக அமைக்கப்பட்ட இரும்புக் கூண்டுகளில் பெண்களை நிர்வாணமாக அடைத்துவைப்பது அவன் வழக்கம்.
அதில் ஒரு ஒழுங்கு முறையை கையாள்வான். அதாவது அவனிடம் சரியாக நடந்துகொள்ளும் பெண் மட்டுமே உச்சியில் இருக்கும் கூண்டில் இருக்கலாம்.
தரவரிசையின் அடிப்படையில் அவர்களை கூண்டுகளில் மேலிருந்து கீழாக அடைப்பது அவன் பாணி.
விரித்து எழுதுவதால் ரொம்பவே அருவருப்பாக இருந்தாலும் காட்சி ஊடகம் என்பதால் சில செகண்டுகளில் இத்துணை விசயங்களையும் பார்வையாளர்கள் புரிந்துகொள்ள முடியும்.


மேலிருக்கும் பெண்களின் கழிவுகளில் உழலும் கீழ்க் கூண்டு பெண்கள் நாட்பட நாட்பட தங்கள் சுயம் மறந்து மேல் கூண்டுக்கு போவதை மட்டுமே வெறியாக மாற்றிக்கொள்வார்கள்.

எந்த அளவிற்கு என்றால் பல வருடத்தேடல்களுக்கு பிறகு தனது மனைவியை மீட்டுக் கொண்டுவரும் கணவனை கொன்றுவிட்டு மீண்டும் தன்னை அடிமைப்படுத்தியவனிடமே ஓடும் அளவிற்கு..

இந்த பி.ஜே.பி இத்யாதிகள் செய்யும் அதகளத்திற்கு பிறகும் அவர்கள் தேர்தல்களில் வெற்றிபெறுவதைப் பார்க்கையில் கூண்டுப் பெண்களின் மனநிலையில்தான் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது

---
தொடர்ந்து கொதிநிலையில் சமூகத்தை வைத்திருக்கும் அவலம் ஏன்?

மீத்தேன் எதிர்ப்பு என்றால் கைவிடப்படுகிறது என்று அறிவித்துவிட்டு ஹைட்ரோகார்பன் எடுக்கிறேன் என்கிறார்கள்..
கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றினால் குண்டாஸ்...
#மக்களாட்சி

Comments

  1. வாக்காளர் மனநிலை எப்படியும் மாறும் தோழரே...
    த.ம.1

    ReplyDelete
  2. தோழரே இதை நீக்கி விடவும்
    தலைப்பில் பிழை இருக்கின்றது

    ReplyDelete
  3. படத்தையும் வாக்காளர்களின் நிலமையையும் முடிச்சுப் போட்டு அட!!!

    துளசி, கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக