குரங்குகளின் கிரகத்திற்கான போர்


இரண்டாயிரத்து பதினொன்றில் மிக எளிய ஆரம்பமாக துவங்கிய படம். ரைஸ் ஆப் தி பிளான்ட் ஏப்ஸ், படத்தின் போஸ்ட் கிரடிட்டில் வைரஸ் மெல்ல மெல்ல உலகெங்கும்  பரவுவதைக் காட்டி முடித்திருப்பார்.ஒரு திடுக் இருந்தாலும் படம் ரொம்ப சிம்பிளான படம்தான்.

அடுத்தது 2014கில்   டான் ஆப் தி பிளான்ட் ஏப்ஸ் கொஞ்சம் வழவழா கொழகொழவாக இருந்தும் நல்ல படம்தான்.

ஆனால்
இப்போது வெளியாகி வசூல் சாதனை படித்துவரும்
 வார் பார் தி பிளானட் ஏப்ஸ் படுபயங்கர சர்ரியல் அனுபவம்.

மேக்கிங்கிங்கில் செதுக்கி மிரட்டிவிட்டார்கள்.

முதல் காட்சியில் ஏப்ஸ்கள் இருக்கும் இடத்தை நெருங்கும் இராணுவ வீரர்களின்  முதுகில் ஒட்டிக்கொண்டு ஏறி இறங்கி செல்லும் காமிரா ஒஹோ...

தொடரும் மோதல் செமை.

யாரு இயக்குனர் என்று முதல் காட்சியிலேயே கேட்க வைத்துவிடுகிறார், Matt Reevs, மனிதர் எட்டு வயதில் கேமிரா தூக்கியவராம், இந்தப் படத்தில் இவர் சென்றிருக்கும் உயரம் அனாயாசம்.

கதைப் படி ஒரு விபரீதமான வைரஸ் சோதனைக்கு  ஆட்பட்ட ஏப்ஸ்கள் (குரங்குகள்) மேம்பட்ட சிந்தனைத் திறன்களைப் பெற அதே வைரஸ் மனிதர்களின் திறன்களை மழுங்கடிக்கின்றது.

மனிதக் குரங்குகள் தமக்கான இடத்தைக் கோர, மனிதர்கள் அவற்றுடன் மோதுகிறார்கள்.

ஆனால் தியேட்டரில் ஒரு பயல் மனிதர்களுக்கு ஆதரவாக இல்லை. குரங்குகள் விடும் மனிதர்களை துவைக்கும் பொழுது விசில் பறக்கிறது.

வெகு நுட்பமான இடங்களில் கூட எழும் கைதட்டுகள், விசில்கள் ரசிகர்களின் ரசனை மேம்பட்டிருப்பதை உணர்த்தின.

ஒரு கதையை மூன்று திரைப்படங்களாக எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பது ஹாலிவுட்.

அந்த வகையில் மிக அழுத்தமான முற்றுப் படம் இது.

230 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு இதுவரை 710 மில்லியனைக் குவித்துவிட்டது. படம் வெளிவந்து ஒருவாரம்தான் ஆகிறது எனவே இது வெகு எளிதாக ஒன் பில்லியன் கிளப் படங்களில் இணைந்துவிடும்.

நடிகர்களுக்கு குரங்கு வேடம் இடுவது, காட்சிகளை படமெடுப்பது என அனைத்துமே கடும் சவால், ஒரு காட்சியில் செல்போன் கோபுரம்  ஒன்றின் மீது இருந்து சர சர என இறங்கும் குரங்கு ஒன்று குதிரையில் அமர்வது அசத்தல்.

மனித நடிகர் என்பதே தெரியாமல் அச்சு அசல் குரங்காகவே இருக்கும் உடல்மொழி.

மிரட்டல்.

அனிமேஷன், எக்ஸோ ஸ்கெலிட்டன் என பல தொழில் நுட்பங்களின் உச்சகட்ட திருவிழா படம்.

மனிதர்கள் தங்கள் மீது மார்க்கர்களை வைத்துக் வைத்துக்கொண்டு குரங்குகளாக நடித்திருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள் உங்களுக்காக இந்த காணொளி.


மரணிக்கும்தருவாயில் குரங்குகளின் முக தசை அசைவுகள் திரை நுட்பத்தில் ஒரு மைல்கல்.

ஒரு குரங்குப் பட்டாளம், அதற்கு மனித உணர்வுகள், சிந்திக்கும் திறன், மனிதர்கள் அழிவின் விளிம்பில் இருப்பதால் அவற்றை அழிக்க நினைக்கிறார்கள்.


இருவருக்கும் இடையே எழும் போராட்டம், அதில் அனல் பறக்கும் ஆக்சன், செண்டிமெண்ட், நகைச்சுவை என பல உணர்வுகளைக் கலந்துகட்டி விளையாடி வெற்றிப்படமாகிவிட்டனர்.

ஒருமுறையல்ல

வாய்ப்பிருந்தால் இரண்டுமுறையே பார்க்கலாம்.

எந்தக் கவலையும் இல்லாமல் நமது வணிகர்களும்,  தலைவர்களும்  பூமியின் வளங்களை சூறையாடுவதை பார்க்கும் பொழுது மனித இனம் பூமியில் வாழத்தகுதியுடையதா என்கிற கேள்வி எழுவது இயல்பே.

அதற்கான பதிலை திரைப்படம் வடிகாலாகத் தந்திருக்கிறது.

மனிதர்கள் டவுன் டவுன், குரங்குகள் வாழ்க என்கிற செய்திதான் படத்தை வெற்றிபெறச் செய்திருக்கும் என்று தோன்றுகிறது.

அன்பன்
மது 

Comments

 1. அருமையான விமர்சனம்
  அவசியம் பார்ப்பேன்

  ReplyDelete
 2. பார்க்க முயல்வேன் தோழர்
  த.ம.2

  ReplyDelete
 3. வழக்கம்போல நேரிலேயே திரைப்படத்தைப் பார்த்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். அவசியம் பார்ப்பேன்.

  ReplyDelete
 4. படம் பார்த்தாச்சு...நல்லாருந்துச்சு...

  கீதா: பார்க்கலை ஆனால் லிஸ்டில் இருக்கு...உங்கள் விமர்சனம் அருமை அதுவும் //எந்தக் கவலையும் இல்லாமல் நமது வணிகர்களும், தலைவர்களும் பூமியின் வளங்களை சூறையாடுவதை பார்க்கும் பொழுது மனித இனம் பூமியில் வாழத்தகுதியுடையதா என்கிற கேள்வி எழுவது இயல்பே.அதற்கான பதிலை திரைப்படம் வடிகாலாகத் தந்திருக்கிறது.// இதற்காகவே பார்க்கணும்...

  அன்றே இக்கமென்டை போட்டு போகலை போல என்னாச்சுனு தெரியலை...

  ReplyDelete
 5. Sir, The movie Planet of Apes gives me a feeling that, probably we were better off being apes rather than being humans. The so-called evolution has only left us devoid of the Nectar of divine qualities - love for humanity. Though, we - the humans -boast of scientific advancement and technological breakthroughs, we have paid a heavy price for achieving this delusion of a progress. We have left the humanity far behind. I guess it is time to travel back to our roots - the days of apes - and rediscover the virtues, characteristics of human beings

  P.S. - I am one of your silent admirers in yesterday's afternoon session of RMSA training.

  ReplyDelete
  Replies
  1. chaste English,
   diction is so matured
   wow
   thank you sir

   Delete
  2. The pleasure is all mine sir. I feel honoured to be in the elite of company of the members of this Blog. I only hope that my English doesn't sound jarring among the chaste Tamil notes of other distinguished members. :)

   Delete

Post a Comment

வருக வருக