காசு பணம் துட்டு மணி மணி


என் பார்வையில் தமிழக அரசியல் நிகழ்வுகள்
அதிமுகவை ஏதோ நேற்றுதான் பா.ஜா.கா கைப்பற்றியதாக நண்பர்கள் எழுதிவருகிறார்கள்.

உண்மையையைச் சொல்லப் போனால், மைக்கேல் டி. குன்கா தீர்ப்புக்கு பின்னரே கைப்பற்றியாகிவிட்டது. விசாரணைக்கு செல்லும் வரைக்கும் அம்மயாரிடம் இருந்த செயல்வேகம், விசாரணைக்குப் பின்னர் சுழியாகிவிட்டது.
அவர் செய்த குற்றங்களுக்காகத்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் தமிழக அரசியல் வரைபடத்தில் இருந்து திராவிடக் கட்சி ஒன்றை அழிப்பதற்காக நகர்த்தப்பட்டு முதல் மதவாத அசைவு அது.
தீர்ப்பு வழங்கும் அலுவலக அனுபவங்களுப் பிறகு ஜெயா முற்றாக மாறிப்போனார், அவரது உடல் நலிவு துரிதப்பட்டது, (அல்லது படுத்தப்பட்டது), தீர்ப்புகளை தமிழர் நலம் விரும்பிகள்( சூனா சானா உட்பட ) முன்னறிவிப்பு செய்தனர்.
இதையெல்லாம் மறந்துவிட்டு ஏதோ, அம்மையாரின் மறைவுக்குப் பிறகுதான் காவிப்படை இங்கே வந்தது என்ற ரீதியில் மட்டும் பேசுவது சரியல்ல,
அப்போ அதிமுக ?
கணிக்க முடியாத நகர்வுகள் இருக்கலாம்.
டிடிவி யின் முகம் இன்று பலர் பேசும் முகமாக மாறியிருக்கிறது.
கிராமங்களில் ஏய் இவன் அம்மா செத்தப்ப இல்லப்பா, இப்போதான் வந்தான் என்று பேசிவருகிறார்கள்.
இதுவரை சந்தித்த அதிர்ச்சி திருப்பங்களை டிடிவி புன்னகைத்து கடப்பதை ரசிக்கிறவர்களின் எண்ணிக்கை என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.
ஆட்சி தொடர்ந்து, அதிகாரம் நீடித்தால் அதிமுக இப்போது இருக்கும் இருவர் அணியாகத் தொடரும்.
ஆட்சி கலைந்து தேர்தல் வந்தால் மூன்று அணிகளாகத் தொடர்வார்களா அல்லது இன்னும் ஒரு அணியாக பிரிவார்களா என்பதே சந்தேகம்.
தேர்தல் வந்தால்?

மீதம் இருக்கிற திராவிடக் கட்சியில் கட்டமைப்புடன் இருந்தாலும், இருபெரும் அச்சுறுத்தல்களோடு இருக்கும் கட்சி தி.மு.க மட்டுமே.
ஏனைய கட்சிகளை மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என்பதை கடந்த தேர்தல் சொல்லிவிட்டது.

மாற்று அரசியல் குறித்த நம்பிக்கை ஒரு கேன்சர் செல் போல அரித்துத் தின்றவர்  உணர்ச்சிப்பிழம்பு ஜி.  இவர் தமிழக அரசியலில் பெட்டிக்காரர் வாக்குகளை பெறுவதில் குறிவைப்பதில்லை, அடுத்தவர்க்குக்கு வாக்குகள் போய்விடக்கூடாது என்பதில்தான் கவனம் குவிக்கிறார்.
துரதிஷ்டவசமாக உணர்ச்சிப்பிழம்பு  இந்த நிலைப்பாடு, வாக்காளர் மத்தியில் இரண்டு பெரும் கட்சிகளே  மாநிலத்தில் என்ற முடிவை எடுக்கவைத்துவிட்டது, மாற்றம் குறித்த நம்பிக்கைகளை உணர்ச்சிப்பிழம்பின்  நகர்வு ஆழமாக குழிதோண்டிப் புதைத்துவிட்டது.
ஆக எஞ்சி நிற்கிற ஒரே கட்சி தி.மு.க....
அதன் தமிழகம் அறிந்த முகம் ஸ்டாலின்.
நீண்ட நாட்கள் நம்பகமாக பணியாற்றினால் மட்டுமே கனிமொழி ஏற்றுக்கொள்ளப்படுவார்.
காந்திக்கு எங்க அப்பாதான் கைத்தடியை கொடுத்து சுதந்திரப் போராட்டத்துக்கு அனுப்பினார் என்கிற ரீதியில் பேசி கட்சியை மண்ணைக் கவ்வ வைக்கும் வித்தையில் கைதேர்ந்தவர் கவிஞர்.
ஊர்ல போற பார்சல் வண்டிகளை அபேஸ் செய்து, மக்களுக்கு வழங்குபவர் இன்னொருவர்.
இவர்கள் பக்குவமாக ஏதும் வாய்ப்பிருந்தால் தப்பிக்கும் தி.மு.க, இவர்களில் ஒருவரை பி.ஜெ.பி வளைத்துவிட்டால் மாநிலத்தில் மாபெரும் அரசியல் வெற்றிடம் ஏற்படும்.
`பொதுவுடமைக் கட்சிகள், நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கும் வரப்போகிற தேர்தல் சவால்தான்.

பொதுவுடைமை கட்சியினர் அதீத கொள்கை சார்பு உடையவர்கள்,
மொழிப்போராட்டத்தில் உயிரிழந்தோரை கொண்டாடிய நாம், இன்றய தேதிவரை பொதுப் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து உயிரிழந்து வரும் இவர்களை பற்றி பேசுவதுகூட இல்லை. நாம் பேசுவது இருக்கட்டும் தோழர்களே அவர்களின் முன்னோடிகளின் தியாகங்களை பேசமாட்டார்கள். தனிமனிதத் துதியாகிவிடுமாம்! கொள்கைகள்தான் முக்கியமாம்.
ஆமாங்க, இதையெல்லாம் இவர்கள் நடிகர்களுக்கு வாக்களிக்கும் சமூகத்தில்தான் செய்கிறார்கள். ஓவியா ஆர்மி வீரர்களிடம் பொதுவுடமை கொள்கைகளின் மேன்மையை சேர்க்கத் தவறி விட்டனர்.  தனிமனித ஆளுமைப் பலத்தை வைத்துக் கொண்டே ஆட்சியைப் பிடிக்கிற மாநிலமான தமிழகத்தில் தோழர்கள் இப்படி அரசியல் செய்வது தற்கொலை முடிவு என்பது தெளிபு.
ஒரு கட்சியில் சேரலாம், பொதுவுடைமை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம், போராடலாம், சிறை செல்லலாம், சாகலாம், ஆனால் புகழ் மட்டும் சாகிறவனுக்கு வரக்கூடாது என்பதில் தோழர்கள் ரொம்பவே தெளிவு.
(லீலாவதியின் வாரிசுகள் தற்கொலைக்கும் இதற்கும் முடிச்சுப்போட்டு குழம்பிக்கொண்டால் நான் பொறுப்பல்ல)
சிவப்புத் துண்டு தோழர்களை நறுக்கென்று கொட்டி ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறேன்.
சனியன்களா, உங்க ஆட்கள் எத்துணை பேர் இதுவரைக்கும் மக்கள் பிரச்சனைக்காக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை சொல்ல என்னடா வலிக்குது.
தொடர்ந்து சொன்னால்  விஜய்க்கும் அஜீத்துக்கும் விசிலடிக்கிறவன் பாதிபேர் உங்கட்ட வந்துருவானே. ஏண்டா ராசா பண்ண மாட்டேன்கிறீங்க? அப்படி என்ன சிகை புடுங்குற கொள்கை வெறி?
சரி இவ்ளோ செய்தும் ஒங்க தலைவர்களில் ஒருவர் போய் (கையை வைத்து மெய் பொத்திக்கொண்டு) அங்கே நின்றாரே என்றால் அதற்கும் பதில் இருக்காது.

சீமான்

பெரும்பாலான நேரங்களில் இவர் பேசுகிற எல்லாம் சரியாக இருக்கும். ஆனா எப்போ அந்தர் பல்டி அடிப்பார் என்று தெரியாது.

பெரியாரின் பெயரன் என்பார் அப்புறம் எங்கப்பன் முருகன் என்பார்.

இருப்பினும் சீமான் நம் சமூகத்தின் அறச்சீற்றம், தம்பிகள்மட்டுமே பலம்,

அமைப்புரீதியில் இன்னும் பரவாலாக்கத்தை செய்யவேண்டியிருப்பதும், கட்டமைப்பை நிறுவ வேண்டியதும் நாம் தமிழர் அமைப்பின் முன்னே நிற்கும் சவால்கள்.
அதீத தமிழ் உணர்வு இருப்பவர்களைத் தவிர ஏனைய மக்கள் வாக்களிப்பார்களா என்பதுதான் கேள்வி.
திமுக விற்கு அமைந்தது போல ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம், இவர்களுக்கு அமையாது ஒரு காரணம்.
நெடுஞ்செழியன் போன்றோரின் பேச்சைக் கேட்க ஒருரூபாய் நிதி தந்து கேட்ட கூட்டம் நம் முன்னோர்கள். அப்படி ஓவ்வொரு ரூபாயாக உணர்வுடன் தந்து வளர்ந்த அமைப்பு தி.மு.க.
இன்று உணர்வு ரீதியாக மக்களை ஒருங்கிணைக்க ஒரு பொதுப் பிரச்னையை புதிய கட்சிகள் மட்டுமல்ல திமுக வுமே தேட வேண்டியிருக்கிறது.
கீழ்கண்ட பிரச்சனைகளை நேர்மையான முறையில் கையாளும் கட்சிகள் தேறலாம்.

டெல்டா விவசாயத்தைக் காக்கும் பிரச்னை.
மணல்கொள்ளைக்கு எதிரான ஆறுகள் மீட்புப் பிரச்னை
மது ஒழிப்புப் பிரச்னை, குடிஅடிமை மீட்ப்பு பிரச்னை
நீட் தேர்வு

இப்படி மாநில மக்களை ஒன்றுதிரட்டி போராட எண்ணற்ற பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் வரட்டும் என்றே காத்திருக்கின்றனர் நம் தலைவர்கள்.
துரதிஷ்டவசமாக
நம் தலைவர்கள் ஒட்டுப் பொறுக்கிகள்,
நாம்
வாக்கு விற்பனையாளர்கள்
வேறு என்னத்தை சொல்ல

அன்பன்
மது 

Comments

  1. பணம் மட்டுமே முக்கியம்

    ReplyDelete
  2. அருமையான எண்ணங்கள்

    தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக