வாசிப்பு என்ன தரும் ?



நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது...?



பத்தாம் வகுப்பிற்கு முன்னால் என்று நினைவு குமுதத்தில் ஒரு அற்புதமான தொடர் வந்தது. ஒரு ஓய்வு பெற்ற வங்கியாளர் தொடர் ஒன்றை எழுதியிருந்தார்.

மிகச் சாதாரண ஆரம்பங்களில் இருந்து விண்முட்ட வளர்ந்துவிட்ட புதிய தலைமுறை தொழில் முனைவோர் குறித்த அனுபவப் பகிர்வு.

ஆர்க் லாம்ப் வெளிச்சத்தில் மது அருந்தும் ப்ராய்லர் பண்ணை முதலாளி, கவரிங் வளையல்களை செய்யும் அண்ணன் அதிலேயே கோடி ரூபாய்களை குவித்தது, சர்க்கரை ஆலையில் பணியாற்றிய என்ஜினீயர் புதிய தொழில் நுட்பத்தை கண்டறிந்தது அதன் மூலம் கொடிகளை குவித்தது என்று மிக அரிய தகவல்களை பகிர்ந்திருப்பார்.

அதில் ஒரு வாக்கியம் மறக்க முடியாதது.

எப்படி இருந்த தமிழினம் இப்படி ஆக காரணம் என்ன என்று கேட்டுவிட்டு எல்லாம் பக்தி இயக்கங்களால் வந்த வினை என்று சொல்லியிருப்பார். இன்னும் சொல்லப்போனால் பக்திப் பீடைகள்தான் பின்னடைவுக்கு காரணம் என்பார். உண்மைதானே.
இன்னும் கொஞ்சம் பின்னாலே போவோம்.

பல்வேறு உலக நாடுகள் தமிழகத்தோடு வாணிபத்தொடர்போடு இருந்தன. ஏன் அவைகள் தமிழரை சார்ந்து இருந்தன என்றால் தமிழர்கள் கடலோடுவதில் தனித்துவம் வாய்ந்தவர்கள். சரக்குப் போக்குவரத்துக்கு தமிழர்கள் உலகிற்கு ஆற்றிய பணிகள் இன்று அய்யா ஒரிசா பாலு அவர்கள் மூலம் வெளிவந்திருக்கின்றன.
இப்படி கடலோடிய தமிழர்களை அடக்க வேண்டும் என்றால் அவர்களின் பண புழக்கத்தை குறைக்க வேண்டும். பல்வேறு மிரட்டல்களை கையில் எடுத்து உலகம் சுற்றிய தமிழனை முடமாகியது பக்தி இயக்கம்.

குறிப்பாக திருமால் கடலில் இருப்பதால் அவரைத்தாண்டி போவது அபச்சாரம் என்பதுபோன்ற கருத்துருக்கள் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன.

கடல் அளந்த தமிழர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக அடங்கி ஒடுங்கியது இப்படித்தான்.

இப்போ பிளாஷ் பேக் ஓவர்.

சுத்தி என்ன நடக்குது.

மக்களை பணத்தை மக்கள் வங்கியில் போட்டால் அதற்கு கட்டணம் என்பதில் துவங்கி ஓவ்வொரு விஷயத்திலும் மக்களின் பண இருப்பை காலி செய்வதில் இந்துத்துவம் குறியாக இருப்பது மொத்த இந்தியாவையும் தாழ்த்தப்பட்டவர்களாக்கத்தான்.

காங்கிரஸ் அரசு உலக வங்கியின் நிர்பந்தத்திற்கு பயந்து நடந்தாலும் இப்படி உயிர்வாழ்தலையே கேள்விக்குறி ஆக்கவில்லை.
ஆனால், இந்துத்துவம் பேசும் இவர்கள் இஸ்லாமியரை மட்டுமல்ல, கிறிஸ்துவர்களை மட்டுமல்ல, இந்துக்கள் என்று சான்றிதழ் உள்ளவர்களையும் குறிவைத்து அடிப்பது எதற்காக ?

அசைவின்றி மடங்கி வீழ்ந்தால்தான் பிரமணியத்தை நிறுவ முடியும்.

எனவேதான் ரேஷன் கடைகளை மூடுவதில் அவசரம், மானியங்களை நிறுத்துவதில் அவசரம், விவசாயிகளை ஒழிப்பதில் அவசரம்.

இவ்வளவுக்கும் பின்னும் ஏ என்ன இருந்தாலும் நம்ம கட்சிப்பா என்று பேசும் இந்து நண்பர்கள் அங்கே உள்ளே என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
தனியொருத்தியாக நின்று பி.ஜெ.பி என்று கூவிக்கொண்டிருக்கும் தமிழிசை ஆகட்டும், பொன்னார் ஆகட்டும் இராணுவ அமைச்சர் ஆக முடிந்ததா?
ஒருகாலும் முடியாது.

இந்த ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டு பார்த்தாலே பி.ஜெ.பி அதன் பின்னால் இருக்கிற காவி வெறி பலிவாங்கப் போவது மாற்றுமதத்தை அல்ல.... நம்மைத்தான் என்பது புரியும்

மேலும்

அனிதா யார் ?

வேறு யாரும் அல்ல ....
நாம்தான்
அவள் நம்மில் ஒரு துளி...

Comments

  1. அலசல் நன்று தோழர்.
    த.ம.

    ReplyDelete
  2. "நம்மைத்தான் என்பது புரியும்" உண்மை அண்ணா.

    ReplyDelete
  3. சுருக்கமாக, அதே சமயம் பல செய்திகளைப் பகிர்ந்து அலசிய விதம் அருமை.

    ReplyDelete
  4. அருமையான அலசல் மது சார்...
    இந்தியா போகும் நிலை பாதாளம் என்றால் தமிழகம் அதாள பாதாளத்தில்...
    கொடுமைகள் கூத்தாட ஆரம்பித்துவிட்டன.

    ReplyDelete

Post a Comment

வருக வருக