ஜியோஸ்டார்ம் 2017 geostorm 2017

ஜியோஸ்டார்ம் இன்னொரு பேரழிவு ஸைபி. ஜெரார்ட் பட்லர் ஆக்சன் ஹீரோவாக அதகளம் செய்துவிட்டு விண்வெளி நிபுணராக அசத்தியிருக்கும் படம். 


நல்ல ஸ்டோரி லைன்.

கட்டுப்பாடு இல்லாத காலநிலையை மனிதர்கள் தங்கள் அறிவியல் திறமையை வைத்து கட்டுப்படுத்தி பருவநிலை மாற்றத்தை ரிமோட்டில் கட்டுப்படுத்தும் கதை. 


பல நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் பூமியைச் சுற்றி ஒரு சாட்டிலைட் வலைப்பின்னலை உருவாக்கி அதன்மூலம் பூமிக்கு வெப்பத்தையும் குளிரையும் தேவையான அளவிற்கு அனுப்பி காலநிலையைக் கட்டுப்படுத்தும் ஒரு விண்வெளி ஆய்வு நிலையத்தை உருவாக்குகிறார்கள். 

டச் பாய் என்ற செல்லப்பெயருடன் பூமிக்கு வெளியே விண்ணில் இருக்கிறான் அவன்!

டச் பாயை உருவாக்கிய ஜேக் (ஜெரார்ட் பட்லர்) பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டதற்கு பின்னர் நிகழும் இந்த விபத்துக்களை சரிசெய்ய அவரால்தான் முடியும் என்பதால் அவரையே மீண்டும் மேலே அனுப்புகிறார்கள். 

ஏண்டா ஒரு ஆக்சன் ஹீரோவை ஸைபியில் கொண்டுவந்தார்கள் என்பதற்கான நியாயத்தை செய்ய முயலும் காட்சிகள் தொடர்கின்றன. 

காலநிலை கட்டுப்பாட்டுப்  பொறுப்பை அமெரிக்கா தனது தோழமை நாடுகளுக்குத்தர இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் டச் பாய் விபரீதமாக செயல்படுகிறான். பாலைவனத்தின் மத்தியில் ஒரு கிராமத்தில் மட்டும் ஐஸ், கிர்மாவாசிகள் அனைவரும் பனிக்கட்டியாக உறைந்து போய்விட, விசாரணை துவங்குகிறது. 

இதைத்தொடர்ந்து ஹாங்ஹாங்கில் நெருப்பு மழை. 

அமெரிக்க அதிபர்தான் இந்த விபத்துக்களின் பின்னே இருக்கிறார், மலினமான அரசியல் காரணங்கள் என்று ஜேக் நினைக்க, பின்னணியில் இருக்கும் சூத்திரதாரியை கண்டறிந்து, களையெடுத்து உலகை காப்பாற்றும் கதை. 


இப்படி நிகழ வாய்ப்பு இருக்கிறதா ? 

பூமிக்கு என்னைக்கு இருந்தாலும் சங்கு ஊத்தப்போவது விண்கற்கள்தான் என்று ஒரு தியரி உண்டு. சாத்தியம் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் இருக்கிறது. 

பல ஆண்டுகளுக்கு முன்னரே நாசா இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்கிற ஆய்வில் இறங்கிவிட்டது. 

எந்த எந்த விண்கற்கள் பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனவோ அவற்றை இனம்கண்டு ஒரு ராக்கட்டையோ, லேசர் பீமையோ அவற்றின் மீது ஏவி அவற்றின் பாதையை மாற்றுவதே திட்டம். 

திடீரென நாசாவுக்கு ஏதோ இடிக்க திட்டத்தை கைவிட்டுவிட்டது. 

ஏன் ?

பூமியின் மீது மோத வரும் விண்கற்களை பாதைமாற்றுவது சாத்தியம் என்றால்,  சும்மா சுற்றிக்கொண்டிருக்கிற கற்களின் பாதையை மாற்றுவது அவற்றை எதிரி நாடுகளின் மீது விழச் செய்வது என்று இந்த தொழில் நுட்பம் வளர்ந்துவிடும் என்கிற ரெட் பல்ப் எரிய நாசா இந்த திட்டத்தையே கிடப்பில் போட்டுவிட்டது. 


நூற்றி நாற்பது மில்ல்லியன் செலவில் நூற்றி என்பது மில்லியன் பணத்தை வசூல் செய்திருக்கிறது ஜியோஸ்டார்ம். 

Comments

  1. அவர்களுடைய கதையும், தொழில்நுட்பமும் பிரம்மாண்டம். இத்திரைப்படத்திலும் அதனைக் காணமுடிந்தது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக