05/11/2015
பேலியோ குறித்து புதுக்கோட்டை பகுதியில் முதல்முதலில் பேசியவன் நான் என்றாலும் பேலியோ பக்கமே செல்லாமல் இருந்தேன். உணவுமுறை கட்டுப்பாடு என்பது எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பதுதான் காரணம்.
திடுமென மாணவர் ஒருவர் பேலியோவிற்கு மாறி அசத்த, புதுக்கோட்டையில் இருக்கும் பேலியோ குழுக்கள் பற்றி அறிந்தேன்.
சகோ கீதா அவர்கள் முழுநேர பேலியோ பிரச்சாரகராவே மாறிவிட்டிருந்தார்.
இளவல் இளம்கதிர் மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுவில் தீவிரமாக இருந்தார்.
இன்று க்ரீன் பேலஸ் மண்டபத்தில் மாநாடு பிரமாண்டமான முறையில் நடந்தது.
சங்கர் ஜி ஒரு எளிய அறிமுகத்துடன் அமர்ந்துவிட பின்னால் வந்த டாக்டர் ஹரிஹரன், குளுக்கோஸ் டப்பாக்களை வைத்து எவ்வளவு சர்க்கரையை நாம் ஒவ்வொரு நாளும் விழுங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கினார்.
இன்றைய நிகழ்வின் ஷோ ஸ்டாப்பர் ஹரிதான். நேர்த்தியான விளக்கவுரை.
தொடர்ந்த உரையில் சிவகங்கையில் இருந்து வருகைதந்திருந்த பாருக் சீட்டிங் செய்வோர், மது அருந்துவோர், புகைபிடிப்போர் பேலியோ பக்கம் வராமல் இருப்பதே நல்லது என்பதை தெளிவாக உணர்த்தினார்.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சை நிபுணர் கால்களை இழக்கும் சூழலில் மருத்துவமனை வந்த இருவருக்கு பேலியோ மூலம் தீர்வை தந்திருப்பதாக கூறினார். அடுத்தவார குமுதம் இதழில் இதுகுறித்த கட்டுரை வெளிவர உள்ளத்தையும் சொன்னார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பேலியோ ஆர்வலர்கள் மிக அருமையாக நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.
ஒரு பைசா கூட செலவில்லாமல் தங்கள் நேரத்தை மக்களுக்குத் தரும் மருத்துவர்களின் குழு பேலியோவின் பலங்களில் ஒன்று...
இதே வேகத்தில் போனால் சர்க்கரை நோய் தாக்கில் இருந்து பலபேர் புதுவாழ்வு பெற வாய்ப்பிருக்கிறது.
குழுவிற்கும், புதுகையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஆர்வலர்களுக்கும் நன்றிகள்.
நன்றிகள்
கண்ணன் வழக்குரைஞர்,
இளம் கதிர்,
முல்லை முபாரக்
சையது சலாம், எஸ்.எஸ்.மஹால்
பி.கு. இப்போதுதான் மொத்த நூற்களையும் வாங்கியிருக்கிறேன் படித்துவிட்டு பிறகு இணையவே விருப்பம்.
பாராட்டுகள்
ReplyDeleteஎனக்கும் பேலியோ டயட் பற்றி நிறையவே சந்தேகங்கள் உண்டு. உங்களுடைய அனுபவப் பூர்வமான பதிவை எதிர் பார்க்கிறேன்.
ReplyDelete
ReplyDeleteபார்த்து பார்த்து ரொம்ப டயட்டில் இருந்து இறுதியில் காத்தாடி ஆரம்பகால வடிவேலு மாதிரி ஆயிடாதீங்க அதுக்கு அப்புறம் எந்த போராட்டத்திற்கு போய் போராட முடியாதுவே
தற்போது அதிகமாக பேசப்படுவது பற்றிய பகிர்வு. நன்றி.
ReplyDelete