லட்சுமி இன்னொரு கோணம்

ஸ்ரீதர் சுப்பிரமணியனின் கேள்விகள்

சேகரிடம் சில கேள்விகள்
==========================

லட்சுமி பாத்திரத்தை நோக்கி ஆயிரம் கேள்விக்கணைகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் சேகரை கேள்விகள் கேட்டு ஒரு பதிவு, ஒரே ஒரு பதிவு, கூட இதுவரை நான் பார்க்கவில்லை. ஆகவே நான் கேட்கிறேன். இந்தக் கேள்விகள் சேகரை நோக்கியதாக இருப்பினும், திருமணமாக எல்லா ஆண்களும், லட்சுமி படத்தை கடுமையாக விமர்சித்த எல்லா ஆண்களும், தங்களையும் இதே கேள்விகளை கேட்டுக் கொள்ளலாம்:1. வீட்டில் இரண்டு பேருமே வேலைக்குப் போகிறீர்கள் ஆனால் ஏன் அவள் மட்டும் சமைக்க வேண்டும்? உன் மனைவிக்கு சமையலில் உதவக் கூட மாட்டேன் என்கிறாய்?

2. தின சமையலுக்கு உதவுவது இருக்கட்டும். அவளிடம் ‘இன்னைக்கு உனக்கு லீவு. நீ டிவி பாரு. நான் சமைக்கிறேன்!’ என்று கடைசியாக எந்த ஞாயிறு சொல்லியிருக்கிறாய்?

3. அவள் வீட்டுக்கு வந்ததும் எத்தனை முறை காஃபியோ, டீயோ போட்டுக் கொடுத்திருக்கிறாய்?

4. லட்சுமி சம்பாதிக்கும் பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதில் அவளுக்கு எதாவது பங்கு இருக்கிறதா?

5. கடந்த ஆறு மாதங்களில் எத்தனை முறை அவளை ‘ஏய்’ என்று கூப்பிடாமல் பெயர் சொல்லியோ அல்லது கண்ணம்மா மாதிரி அன்பு வார்த்தைகளில் அழைத்திருக்கிறாய்?

6. உனக்கு ஃபோன் பண்ணிய பெண் பெயரை ஏன் லட்சுமிக்கு சொல்லவில்லை? இதே மாதிரி வேறு என்னென்ன விஷயங்களை அவளிடம் இருந்து மறைத்திருக்கிறாய்?

இதே மாதிரி லட்சுமிக்கு ஒரு ஆண் ஃபோன் செய்து ‘யார் ஃபோன்ல?’ என்று நீ கேட்டு அவள் ‘உங்களுக்கு அவனை தெரியாதுங்க!’ என்று (நீ சொன்ன மாதிரி) அலட்சியமாக சொல்லி இருந்திருக்க முடியுமா? அப்போது அதனை எப்படி எதிர்கொண்டு இருப்பாய்? வீட்டில் எத்தனை சாமான்கள் உடைந்திருக்கும்? லட்சுமிக்கு எத்தனை உதைகள் விழுந்திருக்கும்? கூடவே அவள் ஃபோனை பிடுங்கி அந்த எண்ணுக்கு போன் போட்டு இருந்திருப்பாய்தானே? அந்த ஃபோன் ஆளுக்கு எத்தனை வசவுகள் விழுந்திருக்கும்?

7. குழந்தை வளர்ப்பில் தினமும் தேவைப்படும் வேலைகளில் எத்தனை வேலைகளை நீ லட்சுமியுடன் பங்கு போட்டுக் கொள்கிறாய்?

8. கலவரத்தில் லட்சுமி மாட்டிக் கொண்டு தவிக்கையில் நீ ஏன் பைக் எடுத்துக் கொண்டு அவளை பிக் அப் பண்ண போகவில்லை? உன்னிடம் பைக் இல்லா விட்டால் பக்கத்து, எதிர் வீடுகளில் இரவல் கேட்டிருக்கலாம். கொடுத்திருப்பார்கள்தானே?

9. பஸ்ஸுக்கு அவள் காத்திருந்த நேரத்தில் எத்தனை முறை ஃபோன் போட்டு கரிசனத்துடன் அவள் எப்படி இருக்கிறாள் என்று விசாரித்தாய்?

10. அவள் அம்மா வீட்டில் இரவு தங்கிக் கொள்கிறேன் என்றதும் உன் முதல் கவலை ஏன் காலை டிஃபன் பற்றி எழுந்தது? ‘நீ கவலைப்படாதே. நேராக ஆஃபீசுக்கு சென்று விடு. பையனுக்கு நான் தோசை வார்த்து கொடுத்து விடுகிறேன்,' என்று சொல்லி இருக்கலாம்தானே?

11. லட்சுமியிடம் வீட்டு விஷயங்கள் இல்லாமல் சினிமா, இசை, புத்தகங்கள், அரசியல் என்று வேறு விஷயங்கள் கடைசியாக எப்போது பேசியிருக்கிறாய்?

12. லட்சுமியின் பள்ளி/ கல்லூரியின் ஆண் நண்பர்கள் அவளோடு இன்னமும் தொடர்பில் இருக்கிறார்களா? அவர்களை வீட்டுக்கு டின்னருக்கு அழைப்பது, அவர்களோடு வெளியே போவது இதை அனுமதித்து இருக்கிறாயா? (நீயும் சேர்ந்து போவது பற்றிதான் கேட்கிறேன். அவள் தனியாக அவர்களோடு போவதை ஜீரணிக்கும் முதிர்ச்சி உனக்கு இன்னமும் வரவில்லை என்பது எனக்கு தெரியும்.)

13. உங்கள் திருமணம் பெற்றோர் பார்த்து வைத்தது என்று லட்சுமி சொன்னாள். திருமணத்துக்கு பிறகு அவளை தெரிந்து/புரிந்து கொள்ள இதுவரை நீ என்னென்ன முயற்சிகள் எடுத்து இருக்கிறாய்? அவளுக்கு பிடித்த புத்தகங்கள், சினிமா, இசை, எதிர்காலம் பற்றி அவள் கனவுகள் இவற்றை இருவரும் பேசி இருக்கிறீர்களா?

14. அவளுக்கு கடைசியாக நீ அன்புப் பரிசு (gift) வாங்கிக் கொடுத்தது எப்போது? இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் வாங்கித் தரும் பழக்கம் வீட்டில் இருக்கிறதா?

15. கடைசியாக அவளிடம் 'ஐ லவ் யூ' என்று நீ சொன்னது எப்போது?

Comments

 1. அனைத்து கேள்விகளும் நியாயமே தோழர்...
  கற்பு என்பது இருபாலருக்குமே.... இதுவே நீதி.
  த.ம.1

  ReplyDelete
 2. படம் பார்க்கவில்லை. கேட்கப்பட்ட கேள்விகள் நல்ல கேள்விகள்.

  ReplyDelete
 3. நீங்கள் என் வாழ்க்கை முறையை நேரில் பார்த்து இருக்கும் வாய்ப்பு இருந்தால் இப்படி கேள்வி கேட்டு இருக்கமாட்டீர்கள்....உங்களது கேளிவிகளில் கடைசி இரண்டு தவிர மற்ற அனைத்தையும் நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. கடைசி ரெண்டு செய்யணும்னு அவசியமேயில்லை அன்பிருப்பதால்தானே அது மேலேயிருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் யெஸ் சொல்ல முடிந்தது

   Delete
 4. ஆரம்பத்தில் விமர்சனங்களை மட்டும் படித்து அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தேன் அது தவறு என்பதை குறும்படத்தை பார்த்து பின்பு புரிஞ்சிக்கிட்டேன் ..

  ஒரே ஒரு சந்தேகம் நீங்க கேட்ட கேள்விகளை பற்றி .. 2017 இலும் இப்படியும் சிலர் இருக்கிறார்களா ?? அட்லீஸ்ட் ஒரு நட்பான பார்வை கூட தர மாட்டாங்களா மனைவியை நோக்கி :( ..பாவம் அந்த மனைவிகள் .

  நாய் பூனை கூட வீட்டுக்கு வந்ததும் உரிமையாளர் தன்னை தட்டி கொடுக்கணும்னு ஓடி வரும்

  ஏனோ இறைவி படத்தில் அஞ்சலி சொல்ல்வாரே இதுவரைக்கும் யாரும் ஐ லவ் யூ னு சொன்னதில்லை ஐ லவ் யூ சொன்ன முதல் ஆள் நீதான்னு பாபி யை பார்த்து //அது நினைவுக்கு வந்து போகுது .

  ReplyDelete
 5. நல்ல கேள்விகள்...
  சேகரைப் போல் பலர் இருந்தாலும் உங்கள் கேள்விகளுக்குப் பதிலாய் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  ReplyDelete
 6. Madhu:

  Let us look at this short film carefully..Let us not shoot questions to a character..

  The plot here is, make Sekar as villain. And give room for Lakshmi to justify what she does. That is the whole PLOT!

  When the writer/director plot itself like that, you are asking "Sekar" who is a "victimized" here. So, let us carefully look at this issue and not get carried away by "character blaming".

  If you recall, I never blamed "ponnaaL" in Mathorupaagan either. It was just a character created by the writer, your beloved "Murugan".

  Why should look at the guy who wrote the plot and see how dirty he is. We should ask Director Sarjun K.M. rather than sekar. Again he is also a MAN just like Perumal Murugan.

  We are going after the characters leaving the guy who wrote a plot to "screw up" the society.

  So, please ask questions to the moron Sarjun K.M.

  Was he like that in his filthy life? Did he treat his wife like trash and make her run away? If not, where and how did he discover this "sekar"?

  ----------------

  The pity is she is going after another "MAN" thinking that she is her soul-mate or whatever. He will make her feel great for a short time (one night or few nights in an uncommitted relationship like this). If you ask him to live with her for another 20 years, he (the soulmate) might become worse than sekar. Then, she will start looking for another MAN who appreciates her. Thats how it goes.

  Many married unhappy women think that there is a soulmate who will understand her and appreciate her for as long as they live. The pity is NO SUCH MAN exists in real world. These women are just foolish. They just need to wake up and see the real world. It is as simple as that.

  ReplyDelete
  Replies
  1. எங்கப்பா இருந்த இத்துணை நாளா மொமெண்ட்..
   செம்மையான பார்வை

   உண்மையில் செமையான என்று அடித்தேன். அது செம்மையான என்று வந்துவிட்டது.

   ஆனால் சிலர் மனைவியை ஏதோ ஒரு கருவி போலத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பொருளீட்ட, துணிதுவைக்க, சமைக்க, புணர இத்யாதி இத்யாதி...

   அந்த சிலரில் ஒருவனாகத்தான் சேகர் காட்டப்பட்டிருக்கிறான் ....

   கலர் பயன்பாட்டில் அவள் வாழ்வின் வண்ணமே அந்த சிற்பிதான் என்கிறமாதிரி அந்த போர்சன் மட்டும் கலரில்.

   பல விஷயங்கள் திகீர் என்று இருந்தாலும் ..

   இந்தக் கதை எனது உள்வட்ட நட்புக்கள் சிலர் வாழ்வில் நடக்கிறது வருண்.

   பெண்ணையும் ஆணையும் பிரித்துவைத்து வளர்க்கும் போக்கில் ஒரு பெண்ணை எப்படி அணுக வேண்டும் என்று கற்பிப்பதே இல்லை. அவள் ஒரு சதைத்துவாரம்தான் என்கிற புரிதலுடன் வளரும் ஆண்கள் ஒன்று டைவர்ஸ் செய்கிறார்கள், இல்லை தற்கொலை செய்துகொள்கிறார்கள். பிரச்னை பேரண்ட்டிங்தான் என்று நினைக்கேன். என்னுடைய மாணவர்கள் பத்துக்கும் அதிகமானோர் டைவர்ஸ் செய்திருக்கிறார்கள்.

   இன்னொரு விஷயம் வருண் இது ஆணின் படைப்பு. ஒரு பெண் என்ன செய்வாள் என்று ஆணின் மனம் யோசித்தால் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கேன்.

   எப்போதும் எதிர்கோணத்தில் இருந்து பேசினாலும் பேச வேண்டியதைத்தான் பேசுகிறீர்கள்.

   ஆனால் என் வட்டத்தில் இருக்கும் லட்சுமிகளை நான் அறிவேன் ... அது அவர்களின் பர்சனல் என்று அதுகுறித்து எதுவும் பேசுவதில்லை.

   எக்ஸ்ட்ராமாரிடல் குறித்து நிறைய பேசலாம் வருண் ... அது நம்ம நோக்கம் இல்லை.

   நிஜ வாழ்வில் நடந்ததை திரையில் பார்த்ததால் பகிர்ந்தேன். ஆனால் இத்துணை விவாத்திற்கு பிறகு இனி பகிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

   உங்களுக்குத்தான் நன்றிகளை சொல்ல வேண்டும்.

   Delete
 7. ***ஆனால் என் வட்டத்தில் இருக்கும் லட்சுமிகளை நான் அறிவேன்.**

  அது சரி, உங்க வட்டத்தில் யாரும் மலைச்சாமிகளே (முதல் மரியாதை சிவாஜி) இல்லையா?! :)
  மலைச்சாமிகள் குறைய விழுக்காடு என்றால் கண்டுக்க வேண்டியதில்லைனு நாம் விட்டுவிடுவதுண்டு.

  ப்ளாக்ஸ் அமெரிக்காவில் மைனாரிட்டி என்பதால் அவர்கள் பிரச்சினையை விட்டுவிடணுமா?? அதேபோல் மலைச்சாமிகளையும் நாம் மட்டுமல்ல பெண்கள் கவனிக்கணும். அதுதானே நியாயம்??


  ***இன்னொரு விஷயம் வருண் இது ஆணின் படைப்பு. ஒரு பெண் என்ன செய்வாள் என்று ஆணின் மனம் யோசித்தால் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கேன்.***

  இங்கேதான் பிரச்சினை. பெண் இப்படி நினைத்தால் என்ன நடக்கும்னு பெண்களே சொல்லட்டுமே?? ஏன் இந்த "எஸ்ட்ரோஜன்" இல்லாத ஆண்கள் முந்திரிக்கொட்டை மாதிரி பெண் உணர்வுகளை (பெண் இப்படித்தான் நினைப்பாள் என்று) போலித்தனமாக வெளிக்காட்டணும்??

  இது 21ம் நூற்றாண்டு. ஏன் இந்த "அரை வேக்காட்டு" ஆண்களே பெண்களுக்காக பேசிக்கொண்டு இருக்காங்க?

  சூர்ஜன் உடம்பில் எஸ்ட்ரோஜன் சுரக்குதா, என்ன? சூர்ஜன், இந்த சப்ஜெக்ட்டை பெண்களிடம் விடுவதுதான் நியாயம்? அவர்களிடம் இருந்து இதைப் பறிக்க வேண்டிய அவசியமே இல்லையே. இவருக்கு மட்டும் பெண் எப்படி நினைக்கிறாள், என்ன செய்ய எத்தனிப்பாள் என்று எப்படித் தெரியும்??? இந்த ஊருக்கு உபதேசம் செய்யும் ஆம்பளைகள் பத்தி நமக்குத் தெரியாதா என்ன? சூர்ஜன் வாழ்க்கையை பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்தால் பாலுமகேந்திராவை வாழ்வைவிட கேவலமான ஜந்துவாக இருக்கலாம் இவர் என்பது என் கணிப்பு. இந்த ஆண் பெண்ணியவாதிகள் பத்தி நமக்குத் தெரியாதா என்ன மது? சூர்ஜன் போன்ற ஆண்கள் பெண்களை ஏமாற்றலாம். ஆனால் ஆண்களை ஏமாற்றமுடியாது என்பது அவருக்குப் புரியணும். பாம்பின் கால் பாம்பறியும் என்பரே! :)

  ReplyDelete

Post a Comment

வருக வருக