விழியனோடு ஒரு சந்திப்புசில நாட்களுக்கு முன்னர் மலையப்பன் சார் விழியன் வருகிறார் நீங்க ஒரு காரை ஏற்பாடு செய்ய வேண்டும்  என்று சொன்னார்.என்னுடைய கார் அப்போது மணவையில் இருந்ததால் நாகுவிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தோம்.

எதிர்பாராத விஷயமாக விழியன் அவரது காரிலேயே பயணித்து வந்திருந்தார். குடும்பத்தினர் அனைவருமே ஆஜர், அவரது வாழ்க்கைத்துணை திருமிகு வித்யா, குழந்தைகள் குழலி மற்றும் செழியன் என நால்வரும் ஆஜர்.
செழியன் 

மாலை நான்கு மணி சுமாருக்கு விழியனை பிரின்ஸ் லாட்ஜ் வாசலில் சந்தித்தேன். ஒரு திரி பை போர்  பாண்டில் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட காலணிகளோடு விழிகள் சிரிக்கும் புன்னகையோடு அறிமுகமானார் விழியன்.

தமிழ் இலக்கிய உலகில் குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர். சைல்ட் லிட்டரேச்சர் குறித்து பலமுறை நானும் யோசித்தது உண்டு. தமிழில் வளர வேண்டிய துறைகளில் அதுவும் ஒன்று. பாவம் நம்ம படைப்பாளிகள் தமிழுக்கு சோறுபோடுவதில் பிஸியாகிவிட்டதால் இந்தமாதிரியான துறைகள் அதிகம் பயணிக்காத பாதையாகவே இருக்கிறது.

ஆசிரியர்கள் எப்படி லெஸ் எக்குவிப்டாக இருக்கிறார்கள் என்று விழியன் வருந்தினார்.

இந்த புள்ளியில் இயங்குவது மிகச் சவாலானது. தொடர்ந்து ஆசிரியர்களிடம் பேசிக்கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்துகொண்டு வகுப்பறை செயல்பாடுகளை மேம்படுத்த முயற்சிக்கும் விழியன் குறித்து பிரமிப்பு வந்தது.

அறிவியல் இயக்க தோழர்கள் சித்தன்ன வாசல் வரை போய்ட்டு வாங்க என்று உத்தரவிடவும் கிளம்பினோம்.

காரை விழியனின் வாழ்க்கைத்துணைவியரே செலுத்தினார். சித்தன்னவாசல் நோக்கி பயணம் தொடங்கியது. வழக்கம்போல ஓவியங்களை பார்க்க மலையப்பன் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்லவும் நான் விழியனோடு பேசத்துவங்கினேன்.

விழியன் அவரது காமிராவை இயக்கத்துவங்கினார்.  இந்தமாதிரியான லாண்ட்ஸ்கேப் குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் என்று சொல்லி  படங்களை எடுக்க ஆரம்பிக்க அவர் காமிராவில் அமைந்த பிரேம்கள் ஒரு வாவ் அனுபவமாக இருந்தது.

ஓவியங்களை பார்த்துவிட்டு நால்வர் குழு கீழே வர அடுத்து போட்டிங் போகணும் என்று அடம் பிடித்தான் செழியன். பெடல் போட்டுகள் என்றவுடன் எல்லாருமே டரியல் ஆனோம். மெல்ல நகர்த்திக்கொண்டு போய் இசை நீரூற்றின் அருகே நிறுத்தினோம்.

அதற்கு அருகே ஒரு வளாகம் மூடப்பட்டிருக்க என்ன என்று பார்த்தால் அத்தனையும் சிற்பங்கள்,  இன்றைய தொழில் நுட்பத்தில் செதுக்கப்பட்டிருந்தாலும் புதுகையின் வரலாற்றை துணிச்சலாக சொல்லின அவை.

குறிப்பாக சடையப்பரையில் ஒரு பெரும் சமண பள்ளி இருந்ததை இங்கிருந்த சிற்பம் வாயிலாகத்தான் அறிந்தேன்.

அதற்குள் விழியன் அவசரமாக அழைத்து அவரது நூல் ஒன்றை பரிசளித்தார்.

நான் காரை எடுத்து வெளியே பார்க் செய்துவிட்டு இசை நீரூற்றுக்கு சென்றேன்.
ஆளப்போறன் தமிழன் ...செழியன் 

இப்படி ஒரு இடம் புதுகையில்! அதை எனக்கு காட்ட விழியன் சென்னையில் இருந்து வந்திருக்கிறார்.

அற்புதமான இசை நீரூற்று அனுபவத்திற்கு பிறகு வெளியே வந்தோம். விழியன் காரில் ஒரு டென்ட்...

யாரோ காரை ரிவர்ஸ் எடுக்கும் பொழுது இடித்திருக்கிறார்கள்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கிளம்பினோம்.

வரும்பொழுது காரை செலுத்தியதைவிட புதுகைக்கு போகும் பொழுது விரைவாக செலுத்தினார் வித்யா. அதுவும் இரவில்.

சென்னையை கடந்தவுடன்  சாலையில் பயணிக்கும் பிற கார்களில் இருக்கும் ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று சொன்னார்.

ஒரு பலீரோ இவர்கள் காரை முந்துவதும், பிறகு பிந்துவதும் மீண்டும் முந்துவதும் என சேட்டை காட்டியிருக்கிறது.

பெண்கள் வாகனத்தை செலுத்தினாலே இப்படித்தான், சமயத்தில் பஸ் டிரைவர்களில் சிலரும் இதுபோன்று நடப்பது உண்டு என்றார்.

நேரே பழனியப்பா மெஸ் வந்து உணவினை முடித்துவிட்டு காலை சந்திக்கலாம் என்று சொல்லி பிரிந்தோம்.

மறுநாள் காலை இன்னொரு பணியில் முழுக்கவனமும் செலுத்த வேண்டியதாகிவிட்டது, விழியன் அதற்குள் ஞானாலயா  சென்றுவிட்டு  மதியம் அழைத்து பொற்பனைக்கோட்டை போலாமா என்றார்.

சென்றோம்.

புதிய தகவல்கள், தரவுகள் கிடைத்தன எனக்கு.

மீண்டும் திருக்கட்டளை சிவன் கோவில் வழியே வந்து புதுக்கோட்டைக்கு வந்தோம்.

இரவு ஆயிஷாவை சந்தித்தோம்.

ரபீக் சுலைமான் அமீரகத்தில் இருந்தாலும் அவசியம் என் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்து குடும்பத்தினரை சந்திக்க செய்தார்.

அதோடு இல்லாமல் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று வாட்சப்பில் படம் பார்த்துவிட்டு அங்கிருந்து பேசினார். இரண்டு நாட்களும் ரொம்ப மகிழ்வான நாட்கள்.

விழியனின் பயணத்திட்டங்கள் அலாதியானது, குறிப்பிட்டு எங்கேயும் கிளம்புவதில்லை, எங்கே செல்வது என்பதை பாதையில் தோன்றும் முடிவுகளை வைத்தே எடுக்கிறார்கள்.


இலக்குகள் ஏதுமின்றி சுற்றுகிறார்கள்.

ஏன் இப்படி என்றால்

நல்ல பேரெண்டிங் என்கிறார் விழியன்.


இதே போல லெப்ட் ரைட் என மாறி மாறி பயணித்து கேரளா அடைந்ததை புதுக்கோட்டை நண்பர் பத்மநாபன் சொல்லியிருக்கிறார். அவரது பாணியை சொன்னவுடன் சிரித்துக்கொண்டே சொன்னார்கள். ஆம் எங்கள் பாணியும் அதுதான். இப்படி பயணித்து கேரளாவை அடைந்து ஆளுக்கு ஒரு செவ்வாழைப் பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டு இறங்கியிருக்கிறார்கள்.

இப்படியும் பயணிக்கலாம்.

(மறக்கவே முடியாமல் எஸ்.ரா பயணித்த ஒரு காரின் ஓட்டுநர் அவருக்கு சொன்னதை நினைவில் எழுப்பியது என் மனசு)

மொத்தத்தில் விழியன் என்கிற எழுத்தாளரை சந்தித்தோம் என்றில்லாமல் விழியனின் குடும்பத்தை சந்தித்து, செழியனுக்கும், குழலிக்கும் பெரியப்பாவாக மாறிப்போனது இந்த ஆண்டின் மறக்கமுடியாத நல்ல விஷயங்களில் ஒன்று.

அனுபவங்கள் தொடரும்.


எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


அன்பன்
மது

படங்கள் அனைத்தும் எழுத்தாளர் விழியன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து உரிமையோடு சுடப்பட்டவை 

Comments

 1. நல்லதொரு அனுபவம். இலக்கில்லாத பயணம். எனக்கும் அப்படிச் செல்லும் ஆசை உண்டு. சித்தன்ன வாசல் செல்ல வேண்டும்.

  ReplyDelete
 2. அருமையான சந்திப்பு
  சிறந்த பகிர்வு

  இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
  எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
  அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

  ReplyDelete
 3. என்ன ஒரு அழகான அனுபவம்!!! வெங்கட்ஜி சொல்லியதைப் போலவே பயணங்களில் மிகவும் ஆர்வமுள்ள எனக்கும் இலக்கில்லாத பயணம் ஆசை உண்டு..ஆனால் பெண் என்ற ஒரு பெரிய தடைக்கல் இங்கு..அலைவரிசை உள்ளவர்கள் வேண்டும்...கொஞ்சமேனும்.சேமிப்பும் வேண்டும்..!!!! அது இல்லையேல் மிகவும் கடினம் தான் பயணம் என்பதே!..

  நல்லதொரு அனுபவம் கஸ்தூரி...பதிவும் தான்

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  கீதா

  துளசியின் வாழ்த்துகளும்!

  ReplyDelete
 4. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
  http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

  நன்றியுடன்
  சாமானியன்

  ReplyDelete

Post a Comment

வருக வருக