மாற்றத்தின்,நம்பிக்கையின் முகங்கள்

பேஸ்புக் நண்பர்களில் சிலர் ஆசிரியப்பெருந்தகைகள். இவர்களின் பலர் காட்டும் ஈடுபடும் முனைப்பும் கல்வி குறித்தும், இந்தியாவின் எதிர்காலம் குறித்தும் நம்பிக்கை கீற்றுகளை விதைக்கின்றன.

கலகலவகுப்பறை சிவா, வசந்த் கிரிஜா, சிகரம் சதீஷ் போன்ற இளம் ஆசிரியர்களின் செயல்பாடு மெச்சத்தகுந்ததாக இருக்கிறது. இந்த வரிசையில் ஆசிரியைகளும் இருக்கிறார்கள். சமீபத்திய வரவு கவிஞர் தேவதா தமிழ். தனது முகநூல் நண்பர்களின் மூலம் தனது மாணவிகளுக்கு வேன் பயணத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

இப்போது இந்த இற்றை...

திருமிகு ராஜா புஸ்பாவின் காலக்கோட்டில் இருந்து

மாற்றத்தை
ஏற்படுத்திப் பாருங்கள்...

பள்ளியில்
மாணவர்கள்
என்னை
அம்மா என்றுதான்
அழைப்பார்கள்......

ஆசிரியர் அனைவருக்கும்
இரு கரம் கூப்பி
வணக்கம்
செலுத்துகிறார்கள்....

பரோட்டா குஸ்கா
சாப்பிடுவதை நிறுத்தி
சத்துணவுக்கு
மாறியிருக்கிறார்கள்.....

வீட்டில்
பிளாஸ்டிக்
குடத்தில் இருந்த
குடிநீரை
மண் பானைக்கு
மாற்றியிருக்கிறார்கள்.....

குர்குரே
ரஸ்னாவை
நிறுத்தி
பொரி உருண்டை
தேன் மிட்டாய்க்கு
மாறியிருக்கிறார்கள்.....

பிறந்தநாளுக்கு
சாக்லெட்டை
நிறுத்தி
கடலை மிட்டாய்க்கு
மாறியிருக்கிறார்கள்......

குடிப்பழக்கத்தால் வரும்
தீமைகளை
பெற்றோரிடம்
பேசியிருக்கிறார்கள்.....

வெற்றிலை பாக்கு
போடுவதால்
உண்டாகும்
ஆபத்துகளை
தாயிடம்
விளக்கியிருக்கிறார்கள்.....

வீட்டில்
காய்கறி
தோட்டம்
போட்டிருக்கிறார்கள்....

புத்தகத்தை பரிசாக
பெறுவதால்
வாசிப்பதை
நேசிக்கிறார்கள்.....

ஒருவர்
மாறினாலும்
நமக்கு
வெற்றிதான்.......

"ஆர்வம் இல்லாத இடத்தில் மாபெரும் புதுமைகள் பிறப்பதில்லை" - ராக்மென்Comments

 1. விளம்பரங்கள் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் மனதில் பதித்து விட்ட எண்ணங்களை நீக்குவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல . மாறினால் நல்லதே

  ReplyDelete
 2. நல்லாசிரியர்கள்.... இவர் போல இன்னும் பலர் தேவை.

  மனம் நிறைந்த வாழ்த்துகள் அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கும்....

  ReplyDelete
 3. பெருமுயற்சி, பாராட்டுகள்.

  ReplyDelete


 4. தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

  ReplyDelete

Post a Comment

வருக வருக