செல்வரத்தினம் அண்ணாச்சி சிரித்தார்.

இது சரவணாஸ்டோர்ஸ் குறித்து முகநூல் நண்பர் திரு.எஸ்.பி.பி.பாஸ்கரன்அவர்கள் எழுதியது.
முகநூல் பகிர்வு ..



சரவணா ஸ்டோர்ஸ் ரங்கநாதன் தெருவில் ‘செல்வரத்தினம் அண்ணாச்சி’ ஆளுகையில் இருக்கும் போது அவரை சந்தித்து இருக்கிறேன்.





‘விளம்பரப்படத்தை 30000 ரூபாயில் எடுக்க வேண்டும்’ எனக்கூறினார்.

நான் ஐந்து லட்சத்தில் மட்டுமே படம் எடுப்பேன்.
அதற்கு குறைவான பட்ஜெட்டில் என்னால் எடுக்க முடியாது.
என மறுத்து வந்து விட்டேன்.

ஒரு ஷூட்டிங்கிற்காக 100 சேலைகள் தேவைப்பட்டன.
சென்னை மொத்த விற்பனை கடைகளில் விலை விசாரித்தேன்.
‘அஷிகா காட்டன்’ சேலைகள் மொத்த விற்பனைக்கடை விலையை விட சரவாணா ஸ்டோரில் 10 ரூபாய் குறைவாக இருந்தது.
இது எப்படி சாத்தியம்? என விசாரித்தேன்.

செல்வரத்தினம் அண்ணாச்சி மொத்த விலைக்கடையில் வாங்குவது இல்லை.

உற்பத்தி தொழிற்சாலையில் நேரடியாக பணம் கொடுத்து சல்லிசான விலைக்கு அடாவடியாக அடித்துப்பேசி குறைந்த விலைக்குப்பெற்று அதே குறைந்த விலைக்கு அதிக மக்களுக்கு விற்று அதிக லாபம் பெறுகிறார்.

இதுதான் இவரது தொழில் சூத்திரம்.
அவரைப்பொறுத்த வரை காளிமார்க் கம்பெனியும்,பெப்சி,கொக்கோ கோலாவும் ஒன்று.
‘விலையை குறைச்சு கொடு.

இந்தா பிடி ஒரே பேமெண்ட்’.
வெளிக்கடைகளில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் கோலா அவரது கடையில் 9.00 ரூபாய்க்கு விற்கப்படும்.
இந்த குறைந்த விலையை உணர்ந்த காரணத்தால்தான் மக்கள் ரேஷன் கடையில் வாங்குவதைப்போல சரவணா ஸ்டோர்சில் குவிந்தார்கள்.

எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

அவர் உடல் நலம் குன்றியதும் அண்ணன் மகன்கள் தலை தூக்கினார்கள்.

பாகம் பிரிக்கப்பட்டது.

அண்ணாச்சி தனது பாகத்தை ‘சரவணா செல்வரத்தினம்’ எனப்பெயர் மாற்றி தனது வியாபாரக்கொள்கையை கடைப்பிடித்தார்.

அவர் மறைவுக்கு பின்னர் அவரது மகன் அக்கொள்கையை கடைப்பிடிக்கவில்லை.

அண்ணன் மகன்கள் ‘பிரம்மாண்டம்’ ‘லெஜண்ட்’ ‘சூப்பர்’ சரவணா ஸ்டோர் என கடைகளை விரித்தார்கள்.

விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார்கள்.
பர்ச்சேஸ் பண்ணும் போது ஒரு வருடம் கழித்துதான் பேமெண்ட் என்றார்கள்.

சேட்டு வட்டி கணக்கிட்டு விலையை ஏற்றி சப்ளை செய்தான்.
விலையை பல மடங்கு உயர்த்தி விற்கப்பட்டது.

மக்கள் பழகிய தோஷத்தில் சரவணா என்றால் விலை குறைவு என்ற மூட நம்பிக்கையில் இன்னும் குவிகிறார்கள்.
கோடிகளில் லாபம் குவிகிறது.

நடிகர்களுக்கு கோடிகளை வாரி வழங்குகிறார்கள்.
அந்தப்பணத்தை விலையில் ஏற்றி பொது மக்கள் சுரண்டப்படுகிறார்கள்.

நேற்று என் பேத்திக்கு கோவாவில் மார்க்கெட்டில் 150.00 ரூபாய்க்கு வாங்கிய ஆடையை 214.00 ரூபாய்க்கு விற்கப்படுவதை பார்த்தேன்.
அதே பிராண்ட்...அதே சைஸ்.

வெளியில் வந்து வானத்தை பார்த்தேன்.
செல்வரத்தினம் அண்ணாச்சி சிரித்தார்.

Comments

  1. மதுரையில் நான்கு நீல் கமல் சேர் ஏழுகடல் பகுதியில் உள்ள மரியம் கடையில் 450 rs /piece வாங்கிவிட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சரவணா செல்வரத்தினம் கடைக்கு சென்றபோது அதே பிராண்ட் அதே மாடல் சேர் 545/piece விலை பார்த்து அசந்த போனேன். நீங்கள் கூறியது போல சரவணா என்றால் விலை சகாயம் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கை உள்ளது

    ReplyDelete
  2. எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஹ்ம்ம் இந்த சிரிப்பிற்குப் பஞ்சமில்லா நிலைதானே :(

    இனிய பொங்கல் வாழ்த்துகள் அண்ணா

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றி. (நான் முன்பு எழுதிய இதே கருத்துரை ( + த.ம.2) தொழில் நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகவில்லை)

    ReplyDelete

Post a Comment

வருக வருக