விவகாரத்து - லதா அவர்களின் கட்டுரை ஒன்று


திருமிகு லதா (எனது முகநூல் தோழிகளில் ஒருவர்) அவர்களின் விவாகரத்து குறித்த கட்டுரை ஒன்று.

விவாகரத்துக்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்று ஒரு வருத்தம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போது பலரிடம் காணப்படுகிறது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மை நடப்புகளை ஏற்றுக்கொண்டு தான் தீரவேண்டும். கலாச்சாரம் என்பது ஸ்திரமான ஒன்றல்ல என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். காலத்திற்கு ஏற்றவாறு நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கிறோம். எந்த நாட்டின் வரலாறை எடுத்துக் கொண்டாலும் அதுவே நிதர்சனம்.

பல நாட்டுப் பயணங்கள், வியாபாரங்கள் என உலகம் சுருங்கிக் கொண்டிருக்கையில் கலாச்சாரங்களும் இங்கிருந்து கொஞ்சம், அங்கிருந்து கொஞ்சம் என இடம் மாறிக்கொண்டு தான் இருக்கும். இதை யாரும் தடுக்க இயலாது. மாற்ற இயலாத விஷயங்களை ஏற்றுக் கொண்டு வாழ கற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம்.

அன்று பெண்கள் பண ரீதியாக சுதந்திரம் பெறவில்லை! பிடித்தோ, பிடிக்காமலோ, கணவனை சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். மேலும் அன்றைய சமுதாயத்தில் சமுதாயத்தின் ஏச்சு பேச்சிற்கு பயந்து, பிள்ளைகளை பெற்றுவிட்டோமே வேறு வழியில்லையே என பல காரணங்களுக்காக திருமணம் என்பதை ஒரு நிரந்தர சங்கிலியாக பாவித்து அதனுள்ளே அடைப்பட்டு கிடந்தார்கள்.

இன்றைய தலைமுறைக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்று ஆகிவிட்ட போதில், இது தான் தலையெழுத்து என்று வாழ தயாரில்லாதவர்களாக இருக்கிறார்கள். இதைத் தவறென்று யாரும் சொல்ல இயலாது. வாழ்வது ஒரு முறை, வாழ்வு முழுவதும் பிடிக்காத வாழ்வில் தன்னைத் தொலைத்துக் கொள்ளாமல் இருக்க ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிமை உண்டு.

திருமணம் என்பது இயற்க்கையான விஷயமல்ல. மனிதன் பல காரணங்களுக்காக உருவாக்கிய ஒரு ஸதாபனமே இது.

இக்கால கட்டத்தில் திருமணம் நிரந்தரத்தன்மை வாய்ந்ததாக தோன்றாத இளைஞர்கள் சேர்ந்து வாழ்வது என்ற ஒரு கட்டத்துக்குள் நுழைவதில் தவறில்லை. 2/3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து பார்த்துவிட்டு சரிவரும் தங்களுக்குள் என நிச்சயமாக தெரிந்தால், அதுவும் குழந்தை பெற்றுக் கொள்ளும் நோக்கமிருந்தால் மட்டுமே திருமணத்திற்குள் காலடி எடுத்து வைப்பதற்கான உரிமையை பெற்றவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும்.

உண்மையான அன்பென்பது நாளை சரிபட்டு வரவில்லை எனில் தங்கள் பாதையை அவர்கள் நிர்ணயிப்பதற்கான உரிமையை அவர்களிடம் வழங்க வேண்டும். எங்கள் கலாச்சாரம் என்ன ஆவது, குடும்ப கௌரவம் என்ன ஆவது என்று சொல்லி திருமண்திற்குள் தள்ளினால், ஒன்று தினத் தகராரில் வாழ்ந்து, குழந்தைகள் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் வாழயிலமால் மேலும் மேலும் கண்காணா மனநோய் கொண்ட சந்த்திகளையே உருவாக்குவோம். இல்லையெனில் வக்கீல், வழக்குமன்றம் என நடையாக நடந்து பாதி வாழ்நாளை வீண் செய்வோம்.

முக்கியமாக இந்தக் காலத்து இளைஞர்களுக்கு தேவை ஒரு நட்புணர்வுடனான துணை! உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் மனைவியின்/கணவனின் கடமை/உரிமை என்ற போராட்டங்களை சமாளிக்க அவர்களுக்கு நேரமும் இல்லை, திராணியும் இல்லை!

முதலில் அந்த நட்புணர்வு வளரட்டும், அதற்குப்பிறகு, திருமணம், குழந்தை பெறுதல் என்ற விஷயங்களுக்குள் போகட்டும். இதுவே இனி ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்கும்.

இது எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கான பதிவில்லை!

மனமுதிர்வுடனான பிள்ளைகளை வளர்ப்போம். அவர்கள் முடிவை அவர்கள் கையில் கொடுப்போம். அவர்கள் இப்படி வாழ நினைத்தால், தடையாக நாம் நிற்காமல் இருப்போம்.

நம் கலாச்சாரத்தை அவர்கள் மேல் திணிக்காமல் இருந்தாலே, விவாகரத்துக்கள் குறையும்.

இதை பலர் ஏற்காமல் கழுவி ஊற்றுவார்கள் என்னை என்று எனக்குத் தெரியும். நடக்கட்டும்.

-லதா

முகநூல் பின்னூட்டங்கள் 

பாரிசாகரன் ஏன் தாயி
நல்லாத்தானே சொல்லிருக்கீங்க
ஏன் கயுவிஊத்தணும்
Krishnan Narasimhan அற்புதமான பதிவு .புரிந்து கொள்ளவும் இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும் நிச்சயம் ஒரு பக்குவம் வேண்டும் .நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்

தியா பிரகாஷ்
  சூப்பர் மேம். கணவன் மனைவி மட்டுமல்ல, தாய் மகன், தந்தை மகள், அண்ணன் தங்கை, அக்கா தம்பி என எந்த ஒரு பிணைப்பிலும் நட்பு என்ற அடிப்படையில் புரிந்துணர்வுடன் தத்தம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் சூழல் வரும்போது பிரிவு என்ற வாய்ப்புக்கு இடம் இருக்காது... கலாச்சாரம், சம்பிரதாயம் எல்லாம் அவர் அவரது எண்ணம் போல் மட்டுமே என்பது என் எண்ணம்

Suresh Samith அவரவர் வாழக்கையை முடிவு செய்ய வேண்டியது அவர்களின் கையில்தான் உள்ளது எல்லாவற்றையும் சகித்து கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல ..

Nellai Sathiya மறுபரிசீலனை செய்யலாமே???

ஏனென்றால்,...See More

தியா பிரகாஷ் 
Latha நான் ஆழ்ந்து யோசிக்காமல் எதையும் சொல்வதில்லை! விவாகரத்து ஆகிவிட்ட குடும்பங்களில் வளரும் பிள்ளைகள் எல்லோருடைய எதிர்காலமும் கேள்விக்குறி ஆவதுமில்லை! ஒத்துவராத தம்பதிகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு எதிர் காலம் வீணாகிப்போன பிள்ளைகளும் அநேகர் உண்டு. பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்று அவர்களே முடிவு செய்யும் திறனை வளர்ப்பது தான் பெற்றோரின் கடமை! அவர்களை பொம்மையாக வளர்த்து நாம் பொம்மலாட்டம் விளையாடுவது கடமை அல்ல.

Shahul Hameed ஆழ்ந்த ..ரொம்ப அலசி ஆராய்ந்து ...தெள்ளத்
தெளிவா...
அனுபவங்களை reference ஆக..citation ஆக.....See More

Jayaraman Ayyasamy எந்த ஒரு சமுக அமைப்பிலும் அதில்உள்ள பொ.ருள் உற்பத்தி முறையில் எத்தகைய உற்பத்தி முறை நிகழ்கிறதோ, அது நாளடைவில் சமுகத்தில் பிரதிபலிக்கும்.இன்றைய பொருளுற்பத்தி முறையில் , பயன்படுத்துவது, பயன் இல்லை என்றால்எறிந்து விடுவது என்ற முறை உள்ளது.நிச்சயம் அது சமுகத்திலும் பிரதிபலிக்கும்

Murali Ramakrishnan Ganapathi இறந்தாலும் பரவாயில்லை,புகுந்த வீட்டை விட்டு வராதே - அக்கால பெற்றோர்

இக்காலத்தில் சிறு பிரச்சினை என்றாலும் ஊதி விவகாரத்திற்கு கொண்டு வரும் பெற்றோர்....See More
Janu Indhu நானிருக்கேன் லதா... மாற்றங்களை ஏற்றுத்தான் ஆக வேண்டும். உங்களின் இந்த கருத்தோடு நூறு சதவீதம் ஒத்துப் போகிறேன் தோழி

Rathan Chandrasekar சுபர்ப் லத்தா...

Asokanga உண்மை சரியான வரம்பு
மேகலா முருகேஷ் அருமையான பதிவு மேம் 

திருமிகு லதா குறித்து, 

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் ஒரு வலைப்பதிவர், நாவல் ஆசிரியர், காத்திரமாக எழும் பெண்குரல்களில் ஒருவர். 



திருமிகு லதா 
லதா அவர்களின் நாவல்

Comments