ராம்பேஜ் -மிருகவேட்டை 2018


ஹாலிவுட் திரைப்படங்களின் வசீகரங்களில் ஒன்று அவை எடுத்தாளும் அறிவியல் பின்புலம். தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மிருகவேட்டை என்கிற திரைப்படமும் இப்படி ஒரு அறிவியல் பின்ணனியில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது.எப்படி ஜுராசிக் பார்க் வந்த பொழுது ஜுராசிக் யுகம் குறித்தும், அனிமேட்ரானிக்ஸ் குறித்தும் பரவலாக பேசப்பட்டதோ அதேபோல இந்த திரைப்படம் ஜீன் எடிட்டிங்கை அறிவியல் நுட்பத்தை  பரவாலாக்கியிருக்கிறது.

கிர்ஸ்பர் எனும் அறிவியல் நுட்பத்தின் மூலம் ஜீன் இழைகளை எடிட் செய்ய முடியும். மரபணு நோய்கள், கான்சர் போன்ற வியாதிகளுக்கு இந்த அறிவியல் நுட்பம் நிரந்தரத் தீர்வைத்தரமுடியும் என்று ஜீன் ஆராய்ச்சி அறிஞர்கள் நம்புகிறர்கள்.

உண்மையில் சில கிரிஸ்பர் கருவிகள் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கின்றன, பல முன்னணி நாடுகள் இந்த ஆய்வை பல்வேறு நோக்கங்களுக்காக நடத்திவருகின்றன.

ஐஸ்வர்யாவின் அழகு, ஐன்ஸடீனின் அறிவு, ரவிவர்மாவின் கலை நுட்பம், என ஒவ்வொரு மரபுப் பண்பாக நாம் பார்த்து பார்த்து கோர்த்து குழந்தைகளை உருவாக்கும் வாய்ப்பை இந்த நுட்பம் தரும் என்கிறது ஆய்வுக்குழு.

இப்படி ஒரு பின்னணியை வைத்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறது ராம்பேஜ் குழு. கிரிஸ்பர் ஒரு பேரழிவுக் காரணி என்பதால் தடை செய்யப்பட்ட நாட்களில் துவங்கும் கதை நேரே விண்வெளியில் ஒரு அழிந்துகொண்டிருக்கும் விண்கலத்தில் துவங்குகிறது. மாபெரும் விண்கலத்தில் துரத்தும் ஒரு மிருகத்திடம் இருந்து தப்ப விரும்பும் ஒரு பெண் ஆய்வாளர் தப்பித்தல் கலத்தை அடைகிற பொழுது அதன் கதவைத்  திறக்கமறுக்கிறது தரைக் கட்டுப்பாட்டுக் குழு, ஆய்வுப் பொருட்களை எடுத்துவந்தால்தான் தப்பலாம் என்று ஈவிரக்கம் இல்லாமல் நிபந்தனை விதிக்கிறது தரையில் இருந்து ஒலிக்கும் பெண் குரல்.

வேறு வழியே இல்லாமல் உயிர் நடுங்க ஆய்வுப் பொருட்களை எடுக்கிறார் அந்த பெண். எதிர்பார்த்த மாதிரியே ஒரு டாட்டா ஏஸ் சைஸ் எலி அவரை துரத்துகிறது.

அவரது கலனுக்குள் சென்ற பிறகும் அதன் கண்ணாடி மேற்பரப்பில் வெறிகொண்டு தாக்குகிறது எலி. கண்ணாடி சிறிது சிறிதாக விரிசல் விடுகிறது, சரியான நேரத்தில் தப்பித்தல் கலம் வெளியேறுகிறது. தான் பணிபுரிந்த விண்கலம் தன் கண் முன்னால் வெடித்து சிதறுவதை பார்த்துக்கொண்டே பூமியின் வளிமண்டலத்தில் நுழைகிறார்.

எதிர்பார்த்தபடியே கலத்தின் விரிசல் விழுந்த கண்ணாடி வெடிக்க எரிந்துபோகிறது கலம். படம் இப்போது பூமிக்கு வருகிறது, ப்ரைமேட்டாலஜிஸ்ட் டேவிஸ் ஓக்கேயி வயோமிங் பகுதியில் இருக்கும் ஒரு வன உயிர்காப்பகத்தில் இருக்கிறார். சைகை மொழியில் அங்கே இருக்கும் கொரில்லாக்களுடன் பேசுகிறார். ஜார்ஜ் எனும் பிரமாண்டமான அல்பினோ கொரில்லா ஒன்று அவருடன் வெகு நட்பாய் இருக்கிறது.

இந்த சூழலில் அந்த பகுதியில் விண்வெளியில் எரிந்து விழுந்த மரபணு குடுவைகள் மூன்று உயிரினங்களை பாதிக்கின்றன.

தண்ணீரில் இருக்கும் ஒரு முதலை, புல்வெளியில் இருக்கும் ஓநாய் மற்றும் ஜார்ஜ் கொரில்லா.

மருந்தின் வேகத்தில் இவை பன்மடங்கு பெரிதாக வளர ஆரம்பிக்கின்றன எல்லாவற்றையும் வேட்டையாடுகின்றன.

ஜார்ஜ் மட்டும் வித்தியாசமாக ஜான் சொல்வதை கேட்கிறது. ஆனால் சூழல்களின் அழுத்தத்தில் யார் என்ன என்று பார்க்காமல் வெறிபிடித்து அலைகிறது.

வில்லி மலீன் அக்கர்மென், காட்டுக்குள் இருக்கும் இராட்சத மிருகங்களை நகரின் மையத்துக்கு ஈர்க்கும் வகையில் ஒரு குறைந்த அலைவரிசை ரேடியோ சிக்கனலைஇயக்க, காட்டுக்குள் இருக்கும் மிருகங்கள் நகருக்குள் நுழைந்து அதகளம் செய்கின்றன.

வேறு வழியே இல்லாமல் மதர் ஆப் ஆல் பாம்ஸை சிகாகோவின் நடுவே வெடிக்க முடிவு செய்கிறது இராணுவம்.

டேவிஸ் ஓகேயே, டாக்டர் கேட் கிளாட்வெல்(நயோமி ஹாரிஸ்-பைரேட்ஸ் ஆப் தி கரிபியன்) இருவரும் நகரை பாதுகாக்க முடிவெடுக்கிறார்கள்.

டேவிஸ் தன்னுடைய கொரில்லாவிற்கு மாற்று மருந்தைக் கொடுத்து அதை தன்வசப்படுத்த, அது அவன் சொற்படி மற்ற இரண்டு விஸ்ரூப விலங்குகளையும் வேட்டையாடுகிறது.

மான்ஸ்டர் படங்களை போல மான்ஸ்டரின் மரணத்தில் முடியாமல், மான்ஸ்டர் மனிதர்களுக்கு உதவுவது போல முடித்திருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் படத்தில் ஒரு நிர்வாணக்காட்சியோ, லிப்லாக் காட்சியோ இல்லாத படம் நம்பி திரையரங்கிற்கு செல்லலாம். 

Comments

 1. ஒன்றுமே இல்லாததுபோல இருக்கும். ஆனால் அதே சமயத்தில் அனைத்தும் இருப்பதுபோல இருக்கும். அதுதான் இவை போன்ற திரைப்படங்கள்.

  ReplyDelete
 2. நல்ல அறிமுகம். பார்க்க முயல்கிறேன்.

  ReplyDelete
 3. அருமையான அறிமுகம்

  ReplyDelete
 4. நன்றாகவுள்ளது. https://e-kalanchiyam.blogspot.com/ இதனையும் பாருங்கள்

  ReplyDelete
 5. நல்ல அபிப்ராயம்.. வாழ்த்துக்கள்

  வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete

Post a Comment

வருக வருக