ஒலிம்பிக் கனவின் சிறு விதை


அற்புதமாய் ஒரு ரோட்டரி நிகழ்வு



சில வாரங்களுக்கு முன்னர் திரு.எஸ்.லோகநாதன் அவர்களைச் சந்தித்தேன்.

லோகு சாரை தெரியாத தடகள வீரர்களோ, உடற்கல்வி ஆசிரியர்களோ புதுக்கோட்டையில் இருக்க முடியாது.

கவிநாடு யூத் ஸ்போர்ட்ஸ் கிளப், என்கிற உடல்திறன் வளர்ப்பு மையத்தை திரு.பி.வி.ஆர் சேகரன் அவர்களின் உதவியோடு நிறுவி கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்.

நீண்ட தூர ஒட்டப்பந்தயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

இதுவரை தேசிய அளவில் 150 வெற்றிப்பதக்கங்களையும், சர்வதேச அளவில் 25 வெற்றிப் பதக்கங்களையும் இந்திய ஒன்றியத்திற்காக வென்றெடுத்திருக்கிறார்கள் இவரது மாணவர்கள்.

ஒவ்வொரு முறை ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் வெளியாகும் போது ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் அதை கடக்கும் நமக்கு புதுக்கோட்டை போன்ற ஒரு மாவட்டத்தில் ஒருவர் ஒலிம்பிக் நோக்கி இயங்கிக் கொண்டிருப்பது தெரியாது.

எல்லா சர்வதசே போட்டிகளிலும் கலந்துகொண்டாயிற்று இனி ஒலிம்பிக்தான் சார், உயிரோடு இருப்பதற்குள் அதை அடைந்துவிட வேண்டும் என்கிறார் லோகு.

இந்த நிலையில் தஞ்சை சாலையில் புதுகை மருத்துவக்கல்லூரி அருகே இச்சடி என்கிற குக்கிராமத்தில் பத்து ஏக்கர் நிலத்தை தானமாக பெற்று அதில் முழு டிராக்கையும் உருவாக்கிவிட்டார்.

அங்கே பயிற்சியில் பங்குபெறும் மாணவர்களுக்கு உணவுதயாரிக்க ஒரு எரிவாயு அடுப்பும் எரிவாயு இணைப்பும் தேவை என்று கேட்க

புதுகை கிங் டவுன் ரோட்டரியின் முன்னாள் தலைவர் திரு.கான் அப்துல் கபார் கான் அவர்களிடம் விஷயத்தை சொன்னேன்.

அவர் ஒரு சங்க கூட்டத்தில் இதை முன்மொழிய செயல்வேகம் மிக்க தலைவர் முனைவர் ஏ.வி.எம்.எஸ்.கார்த்திக் அவர்கள் புயல் வேகத்தில் செயல்பட்டு திட்டத்தை சாத்தியப்படுத்தினார்.

முன்னாள் தலைவர்களும், உறுப்பினர்களும் இவ்வளவு விரைவாக ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

எரிவாயு உருளைக்கான வைப்புத் தொகையை உறுப்பினர் திரு.ஸ்ரீதரன் (சிந்தாமணி கணபதி காஸ் ஏஜென்சியின் உரிமையாளர்) ஏற்றுக்கொண்டுவிட்டார்.

எனக்கு ஏற்பட்ட சங்கடம் என்னவென்றால் சங்கத்தின் வேகத்திற்கு நான் நேரத்தை ஒதுக்க முடியவில்லை..

தேர்வுகள் என்பதால் காலை எட்டு மணிக்கு பள்ளிக்கு சென்று இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவேன்.

லோகு சாரை அழைக்கக்கூட நேரமில்லை. ஒருவழியாக சிந்தனை புரட்சிக்கு வித்திட்ட என்னுடைய பாடத்தின் தேர்வுகள் முடிந்தவுடன் லோகுஸாரிடம் அடுப்பும் சிலிண்டரும் மூன்று வாரங்களாக சங்கக் கட்டிடத்தில் காத்திருப்பதைச் சொன்னேன்.

நன்றிகள் என்றார்.

தாமதப்பட்ட நிகழ்வாக இருந்தாலும் சிறப்பாக நிகழ்ந்தேறியது.

ரோட்டரி மாவட்டம் மூவாயிரத்தின் ஆளுநர் ரோட்டேரியன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் கரங்களால் திரு லோகு சாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன பொருட்கள்.

காலை அழைத்து கேட்டபொழுது

உங்க கவர்னர் நன்றாக பேசினார், அவரிடம் சொல்லுங்கள் அடுத்த சர்வதேச பதக்கத்தை எங்கள் மாணவர்கள் வாங்கும் பொழுது ரோட்டரியின் பங்கை நிச்சயம் சொல்வேன்.

ஆக, இன்னும் ஒரு பத்து ஆண்டுகளுக்காவது கிங்க்டோரியன்கள் நினவுகூரப்படுவார்கள் என்பது மகிழ்வு ..

ஒலிம்பிக் கனவு நனவாக ஒரு சிறு விதையாக ரோட்டரியின் உதவி நினைவுகூறப்படும்.

நிகழ்வைச் சாத்தியமாக்கிய முன்னாள் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றிகள் பல

Comments

  1. வாழ்த்துகள் மது.....

    ReplyDelete
  2. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வாழ்த்துகள். தேவையான பதிவு. நேரமிருந்தால் https://tamil-enoolaham.blogspot.com/ என்பதைப் பாருங்கள். நன்றி

    ReplyDelete

Post a Comment

வருக வருக