#இந்துத்துவ_புரட்டுகள்_சீரிஸ்_ 1 2018


தமிழுக்கு சோறுபோடும் கவிஞர் ஒருவர் ஒரு காணொளியில் கிருஸ்துவர்கள்தான் கல்வியை பொதுமைப்படுத்தினார்கள் என்று பேச


சங்கீகள் பொங்கிவிட்டார்கள் பொங்கி

இந்தியா அப்புடி கல்வீலே இப்புடி என்றெல்லாம் கூவுகிற கூவலுக்கு இடையே ஒரு செய்தியை ஒரு வரியில் சொல்லி கடக்கிறார்கள்.

அந்த ஒரு வரிதான் எனக்கு கோபம் வரக் காரணம்.

நாங்க உலகத்துக்கே பல்கலை கழகம் நடத்திவதில் முன்னோடிகள்..."

ஐயாயிரம் வருசத்துக்கு முன்னாலேயே நாங்க பல்கலைக் கழகம் நடத்தினோம் என்கிறார்கள் ...

இதையும் நெட்டிசன்கள் பகிர்கிறார்கள்

உண்மை என்ன என்பது சுலபமாக மறக்கடிக்கப்படுகிது

நாளந்தா பல்கலை ஒரு பவுத்த பல்கலைக்கழகம்

உலகின் மாபெரும் மதங்களில் ஒன்றான பவுத்தம் எப்படி அது துவங்கிய நாட்டில் இருந்து காணாமல் போனது?

இவர்கள் பீற்றிக்கொள்ளும் நாளாந்த ஏன் அழிக்கப்பட்டது?

துருக்கிய படையெடுப்பின் பொழுது அழிக்கப்பட்டது என்கிறது பொதுவெளியில் பரப்பப்படும் வரலாறு.

இதற்கு ஆதாரமாக அவர்கள் முன்வைப்பது பெர்ஷிய வரலாற்று அறிஞர் மினாஜி சிராஜ் எழுதிய குறிப்புகளை.

முகமது பாக்தியார் என்கிற துருக்கிய போர்படைத்தளபதி அரண்மனை என்று கருதி நாளந்தாவை அழித்தான் என்கிறது இவரது குறிப்புகள்.

ஆனால்

இன்றய ஆய்வுகள் வேறுமாதிரி சொல்கின்றன 17ம் நூற்றாண்டு வரை நாளாந்த செயல்பட்டது என்றும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களை தயாளர்களாக காட்டிக்கொள்வதற்காக இப்படி ஒரு கருத்தை உருவாக்கினார்கள் என்று சொல்கிறார்கள். சொல்வது ஆய்வறிஞர் ஜொஹான் எல்வேர்ஸ்காக்.

ஆக, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியில் இருக்கும் அடிமைகளை ஒன்றிணைத்துவிடாமல் இருக்க பயன்படுத்திய பிரித்தாளும் யுக்திகளில் ஒன்றுதான் இஸ்லாமிய கொடுங்கோலர்கள் நாளந்தாவை எரித்தார்கள் என்னும் கருத்தியலை பரப்புரை செய்தார்கள்.

அதையே அழுத்தமாக பிடித்துக்கொண்டு அலறும் சங்கீகள், போகிற போக்கில் ஏதோ இந்துத்துவம்தான் பல்கலைக்கழகங்களை நிறுவினார்கள் என்கிறமாதிரி பேசுவது வரலாற்று புரட்டு.

ஒரு சூத்திரன் வேத பாராயணத்தை கேட்க நேர்ந்தால்
அவனை குருடாக்கி, அவன் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்று சொன்ன அத்வைத வேதத்தை போற்றும் இந்துமதம் அதன் புகழ்பாடும் சங்கிகள் வைரமுத்து மீது பாய்வது ஏன் ?

அவர் என்ன இவர்களை போல சரித்திர புரட்டைச் செய்தாரா ?

கிருஸ்துவ கல்வி நிறுவனங்களின் சேவை இல்லாமல் இந்திய இந்த நிலைக்கு முன்னேறியிருக்குமா ?

வைரமுத்து மிக சரியாக பேசிய வாக்கியங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது.

அவ்வளவே.

(விஷயம் தெரியாமல் பலர் இங்கே மண்டையை ஆட்டிக்கொண்டு, ஆமால்ல என்று சொல்லிக்கொண்டு இருப்பதை பார்ப்பதுதான் எரிச்சல்)

Comments

  1. ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே இந்தியாவின் கல்வி விகிதம் 30% யாம், அப்போது அவர்கள் நாட்டில் 12% யாம். படிச்சிட்டு ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சு.....

    ReplyDelete
  2. வாய்லயே வடை சுடுறதுல நம்மளை மிஞ்ச முடியாது

    ReplyDelete

Post a Comment

வருக வருக