இற்றை ஒன்று
முகநூல் நண்பர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தை பள்ளியின் மூத்த ஆளுமை ஒருவரின் (கோவிந்தாச்சார்யாவின்?) வயர்ட் இதழ் பேட்டியை குறிப்பிட்டிருந்தார்...
ஒற்றை இந்தியா
ஒற்றை மதம்
என்கிற
புள்ளியை நோக்கிய நகர்வை
எந்த விலைகொடுத்தாவது அடைவோம் என்பதாக தெளிவாக சொல்லியிருந்தார் அவர் ...
இந்திய அரசியல் சாசனத்தை திருத்துவோம் என்று சொல்லியிருக்கிறார்
இந்த பெட்டியை நண்பர் ஒருவர் பகிர்ந்து
இரண்டு ஆண்டுகள் இருக்கலாம்
இப்போது கர்நாடகாவில் அதற்கான இறுதி கட்ட வேலைகள் நடக்கின்றன
இற்றை இரண்டு
இந்துத்துவம் சரியான திசையில் போகிறதா ?
இந்துத்துவத்தின் பலமே பல்வேறு ஜாதிப்பிரிவுகள்தான்
பல்வேறு அடுக்குகளில் மனிதர்களை பிரித்து வைத்து அவர்கள் தங்களுக்கும் அடித்துக்கொண்டு சாவதை உறுதி செய்து..ஒரு சாரர் மட்டுமே பிழைக்கும் அமைப்பு என்றே நான் புரிந்து வைத்திருக்கிறேன்
இதற்காகத்தான் பண்டைய அரசர்கள் இந்துவத்தை பேணினார்கள் ..
மக்கள் தங்களுக்குள் சச்சரவில் இருக்கும் பொழுது மன்னன் பாதுகாப்பாக இருக்கலாம்
புலவர்களை வைத்து நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக கவிதைகளை எழுதி ஒரு இமேஜ் பில்ட் அப் தரலாம்
இப்படிதான் எப்போதுமே இந்தியா இருந்து வந்திருக்கிறது
குறிப்பாக சமூகத்தின் ஆன்மா வர்ணப்படுத்தப்பட்டு விட்டது
தனி மனிதர்களின் ஆன்மா வர்ணப்படுத்தப்பட்டு விட்டது
சில தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு சாலையில் சிறுவன் ஒருவன் சீறி வரும் காளைமாட்டிற்கு பயந்து ஓடிவருகிறான், காளை அவனை விடமால் துரத்துகிறது ..
தெருவில் இருக்கும் அனைவரும் காளை மாட்டைக் கல்லால் எறிகிறார்கள்
திடுமென அங்கே வந்த ஒருவன் எதோ சொல்ல சிறுவனை காப்பாற்ற முன்வந்த கிராம மக்கள் விலகிவிடுகிறார்கள்
காளை சிறுவனை முட்டி தூக்கி எறிகிறது
இறந்துபோகிறான்
தனிமனித ஆன்மா எவ்வளவு தூரம் வர்ணம் படிந்து அசிங்கமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறதா
இந்த மொத்த சம்பவத்தையும் பார்த்துகொண்டிருந்த ஒருவர் அந்த கூட்டத்தில் ஒருவனை அழைத்து ஏன் பாதியில் விட்டீர்கள் ..
சிறுவன் செத்துப் போயிட்டானே என்று கேட்க
அவன் துப்புரவு தொழிலார்கள் வசிக்கும் சேரிப் பையன்
என்கிற பதில் கிடைக்கிறது
கல் எறிந்தவர்கள் இந்துக்கள்
காளையால் கொல்லப்பட்டவன்
சிறுவன்
இந்து
இதை பார்துகொண்டிருதவர் பிந்தேஸ்வர் பதக், ஒரு பிராமணர்,
அதே குடியிருப்புக்கு அவர் குடி புகுந்ததும்
துப்புரவு தொழிலாளர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை அவர் கொண்டுவந்ததும், சர்வதேச விருதுகளை வாங்கி குவித்ததும் இந்த இற்றையின் ஒரு பகுதியே, சுலப் அமைப்பை அறித்தவர்கள் இவற்றை அறிவார்கள்
பிந்தேஸ்வர் போல தன்னுடைய சுய அறிவினால் எல்லோரும் இயங்குவதில்லையே
இருப்பினும்
நிகழ்வுக்கு வரலாம்
ஆக ஆங்காங்கே
தங்களுக்குள் சச்சரவிட்டுக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் திரள்தாள் இந்துத்துவ கொடுங்கோன்மை சர்வதிகார ஆட்சிக்கு அடிப்படையாக இருக்கும் ...
ஆனால் இவர்கள் போவது
சரியான திசையாக இருக்குமா என்பதுதான் கேள்வி
அரசியல் ரீதியில் மாநிலங்களைக் கைப்பற்றி, ஒற்றை இந்தியா என்கிற புள்ளியை நோக்கி நகர்வது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காலம் மட்டுமே சொல்ல வேண்டும்
இற்றை மூன்று
இந்து மதத்தின் ஆகச்சிறந்த விசயங்களில் ஒன்று ...
யாரை கீழான ஜாதி என்று சொல்கிறதோ அவர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் கீழே உள்ளவர்களை சொல்வார்கள்
அடுக்கில் யாரோ ஒருவர் கீழே இருக்கிறார் என்கிற உணர்வுதான் இந்துமதம்
மேலே இருப்பவர்கள் தலையில் சிறுநீர் கழித்தால் கூட கவலைப்படமாட்டார்கள் ...
நான் இன்னொருவன் தலையில் நிற்கிறேன் என்பதே இங்கே செலுத்தும் சக்தி ...
இதுதான் மதம்
இதுதான் சிறப்பு 1
இற்றை நான்கு
இந்துமதத்தின் சிறப்புகள் ...
இந்து ஒய்
இந்து எக்ஸ்
இந்து இசட்
என்று மூன்று ஜாதிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்
இவர்கள் தங்களை உயர்ந்த சாதிகள் என்று சொல்கிறார்கள் என்றே வைத்துகொள்வோம் ...
இந்த சாதிகளை இரண்டு விதமாக நாம் அழைக்கலாம்
குரலில் ஏற்ற இறக்கங்களோடு ..
தம்பி அவரு இந்து ஒய்டா
என்ற பயம் கலந்த மரியாதையோடு சொல்லும் பொழுது ஒய்களுக்கு இனிக்கும்
அதே வேறு தொனியில் வேறு மாதிரியான ஏற்ற இறக்கங்களோடு சொல்லும் பொழுது
டேய் ஒய்டா அவன் ..என்கிற மாதிரி
ஒ ஒய்யா என்றும் சொல்கிற பொழுது யாராக இருந்தாலும் அவமானத்தால் சிறுத்துப் போவார்கள் ...
எப்படி எதிர்வினைகளை செய்கிறார்கள் என்பது அவர் அவர் பக்குவத்தை பொறுத்ததாக இருந்தாலும்
இந்துக்களில் எந்த சாதியையும் அடுத்த சாதி மக்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை என்பதே உண்மை
#இந்துமத சிறப்புகள் 2
இற்றை ஐந்து
இந்து மதத்தின் இன்னொரு சிறப்பு
இதில் பிறக்க மட்டுமே முடியும் ...
வெளியார் யாரும் இங்கே வருதல் கடினம்
என்ன பிரச்னை என்றால் எந்த சாதிப் பிரிவில் அவர்களை வைப்பது
பஞ்சமர் என்றா ?
ஆக, நம்மவர்கள் ஏன் மதங்களை பிரசாரம் செய்வதை வெறுக்கிறார்கள் என்பது புரிகிறதா ?
மந்தை மந்தையாக அழைத்துவர முடியாது ...
பூர்வ ஜென்மத்தில் உங்கள் கர்மா நன்றாக இருந்தால் மட்டுமே நீங்கள் இந்துவாக அவதரிக்க முடியும்
#இந்துமத சிறப்புகள் 3
இற்றை ஆறு
இந்து மதத்தை காக்க விரும்புவர்கள் என்ன செய்ய வேண்டும்
உடனடியாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
போலியான கருத்துக்களை கைவிட்டு
எல்லா இந்துக்களும் சமம்
யார் வேண்டுமானாலும் அர்ச்சனைகளை செய்யலாம்
பூஜைகள் செய்யலாம் என்கிற நிலையை நோக்கி முன்னேறுதல் வேண்டும்
உனக்கு வந்தால் தக்காளி சட்டினி என்கிற மனநிலையை கைவிட வேண்டும்
மதத்துக்குள் எம்பதி வரவேண்டும்
பிறன் வலியை தன் வலியாக உணர்தல் அவசியம்
இவற்றை நோக்கி இந்துக்களை நகர்த்தும் புதிய மடங்களை நிர்மாணிப்பதும்
பொதுப் பிரார்த்தனைகளை முன்னிறுத்தும் பொது கோவில் வடிவமைப்புகளை செய்வதும் மறுமலர்சிக்கு அவசியம்
இவற்றையெல்லாம் செய்யாமல்
பழைய வடிவங்கள் அப்படியே தொடர வேண்டும்
சாதிய பிரிவினைகள் அப்படியே தொடர வேண்டும் என்றெல்லாம் நீங்கள் பேசும்வரை
தொடரும் மத மாற்றங்கள்
அதை குறித்து ஒப்பாரி வைக்க எந்த இந்துவுக்கும் யோக்கியதை இல்லை.
இற்றை ஏழு
தமிழகத்தில் இந்துத்வா எப்படி நிலைபெற்றது?
ஆதிநாதர்
ஆதிசிவன்
போன்ற கடவுளர்களை வழிபட்ட மக்கள் தொகுதி அடர்ந்த பகுதி தமிழகம்
பாண்டியர் வணங்கிய சிவனுக்கும்
சோழர்கள் வணங்கிய சிவனுக்கும் வேறுபாடுகள் உண்டு
பாண்டிய நாட்டில் அனைவரும் சமம்
சோழ நாட்டில் சாதிய கட்டுமானங்கள் அழுத்தமாக உண்டு
பாண்டியர் சிவன் சதுர வடிவ ஆவுடை
சோழர் சிவன் வட்ட வடிவ ஆவுடை
பாண்டியர்கள் சோழர்களை ஓட ஓட விரட்டிய பொழுது சோழர் படையினர் ஆங்காங்கே இருந்த சிவ ஆலயங்களில் தஞ்சமடைந்து, பாண்டியர்களை எதிர்த்து போரிட்ட தகவல்கள் வரலாற்றில் இருக்கின்றன
ஒரு கட்டத்தில் பாண்டியர் கை ஓங்கிவிட்டால் தங்கள் அடைக்கலம் புகுந்த சிவ ஆலயங்களை தாங்களே உடைத்துப் போட்டுவிட்டு அதை செய்தது பாண்டியர்கள் என்று நிறுவிவிட்டு ஓடியிருக்கிறது சோழப்படை
இவ்வளவிற்கு பிறகும் வெகுமக்கள் செல்வாக்கில் இல்லை இந்து மதம்
இறுதியாக அவர்கள் எடுத்த ஆயுதம்தான்
தமிழ்
மாற்று மதத்தில் உள்ள முனிவர்கள், சித்தர்கள், தத்துவஞானிகள் தமிழில் பேசுவதால் மக்கள் செல்வாக்கோடு இருப்பதை பார்த்த இந்துத்துவ செயல்பாட்டாளர்கள்
தமிழைக் கையில் எடுத்தார்கள்
தோடுடைய செவியன் என்று துவங்கினார்கள்
சோலி முடுஞ்சுது
அப்புறம் சித்தர்கள் என்ன ஆனார்கள் ?
ஞானிகள் ?
அவர்களை பல்வேறு மிரட்டலுக்கு உட்படுத்தி தங்களின் வர்ணம் பின்பற்றும் சிவ மதத்திற்கு மாற்றினார்கள்
அறுபத்தி மூவரில் பலர் இப்படி வந்தவர்களே
நாயன்மார்கள் திருவிளையாடலில் சிவன் பிராமண அவதராம் எடுத்ததை சரியாக நிறுத்திப் பாருங்கள் .
ஆக ஆங்காங்கே இருந்த மாற்று மத பள்ளிகளை கைப்பற்றி அவற்றை தடமில்லாமல் அழித்தார்கள்(புதுக்கோட்டையிலே பல சமய பள்ளிகள் இருந்திருக்கின்றன, திருவப்பூர் அருகே சடைய பள்ளி என்று ஒன்று இருந்திருகிறது இப்பகுதி மக்கள் இன்றும் சடையன் என்கிற பெயரோடு இருக்கிறார்கள், ஏன் மாணவர் ஒருவரின் தாத்தா சடைக் கவுண்டர், அவன் பெயர் சடை யாரவது அழைத்தால் மூஞ்சியில் குத்துவான், பேரின் பின்னால் இருக்கிற தொன்மத்தின் மரியாதை தெரியாமல் போனதால் வந்த வினை)
(இன்னொரு சமயப் பள்ளி கவிநாடு கண்மாய் உள்ளே இடிந்து போய் கிடக்கிறது ...)
ஆக பல நாயன் மார்களின், ஆழ்வார்களின் பூர்வாசிரமம் பிராமணர்களால் நல்வழிப்படுத்தப்பட்ட கதையைத்தான் சொல்கின்றன ...எனில் என்ன நிகழ்ந்திருக்கும் ?
சரி இப்படி நிறுவப்பட்ட தங்கள் வருணாசிரம இந்து மதத்தை பிற்பாடு இன்னும் கொஞ்சம் சீர் செய்து கொண்டார்கள்
முக்கியமாக
தங்கள் பணிகள் முடிந்தவுடன்
தமிழை நீச பாசை என்று என்று சொன்னார்கள் ...
சம்ஸ்கிருதத்தை தேவ பாசை என்று சொன்னார்கள்
இன்றுவரை தமிழ் உள்ளே நுழைய முடிவில்லை
வரலாறு நமக்கு பல்வேறு தரவுகளை தந்திருக்கிறது
நமக்குதான் வரலாறே பிடிக்காதே
தொடர்வோம்
அன்பன் மது
அலசல் பிரமிக்க வைக்கிறது.
ReplyDeleteஉங்களின் ஆதங்கம் புரிகிறது.
ReplyDeleteநல்ல ஆரோக்கியமான அலசல்
ReplyDeleteஅருமையான கண்ணோட்டம்
ReplyDeleteதொடருவோம்