பால் ஹோம்ஸின் கவிதை ஒன்று


இளவல் தயா யோவ் சும்மா சினிமா பத்தி எழுதிக்கிட்டு இருக்காம கொஞ்ச பாடத்தையும் பற்றி எழுது என்று சொன்னதால். அப்படியே பாடத்திட்டத்தை இங்கே எழுத முடியாது.



இருந்தாலும் பியூட்டிபுல் இன்சைட் என்கிற பால் ஹோம்ஸின் பாடலுக்கு சொன்ன சில செய்திகள் பயனுடையதாக இருந்தால் பயன்படுத்தலாம்.

கற்றல் கருவிகள்.

டாக்டர் முத்துலெட்சுமியின் படம் ஒன்று, முடிந்தால் காமராஜ் மற்றும் கக்கன் படங்களும்

பாடலின் கரு

உருவத்தைப் பார்த்து எடைபோடுதல் தவறு.

"செவப்பா இருக்கவன் பொய்சொல்ல மாட்டான்" போன்ற கருத்துருக்கள் எவ்வளவு தவறானவை என்பதற்கான பாடல்.

மருத்துவர் முத்து லெட்சுமி ரெட்டியின் படத்தைக் காண்பித்துவிட்டு, இவர் யார்? என்றால் பல பதில்கள் வரும் சமயத்தில் மிகச்சரியான பதிலும் வரும்.

முகமெல்லாம் எலும்புகள் துருத்திக்கொண்டு நிற்கும், கிட்டத்தட்ட காச நோயால் பீடிக்கப்பட்ட பெண்மணி போல் இருக்கும் இவர் செய்ததில் ஒரு விஷயத்தை கூட இன்று நாம் செய்ய முடியாது.

ஒரு சித்தாள் போன்ற தோற்றத்தில் இருக்கும் டாகடர் முத்து லெட்சுமியை நாம் அவரது உடல்தோற்றத்தை கொண்டு அவரது திறமைகளை முடிவுசெய்தோம் என்றால் எவ்வளவுதூரம் அது சரியாக இருக்கும்?

அம்மையாரின் சாதனைகள் சில

ஆண்கள் மட்டுமே உயர்கல்விக்கு போகலாம் என்றிருந்த நிலையில் புதுகை மன்னரின் சிறப்பு அனுமதியுடன் உயர்கல்விக்கும் தொடர்ந்து மருத்துவக்கல்விக்கும் சென்றவர்.

இந்த ஒரு சாதனையே பெரும் சாதனை என்கிற பொழுது ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடக்கக்கூடாது என்கிற நாட்களில் இவர் காந்தியாரிடம் அரசியல் பயின்றார்.

பிறகு சென்னை சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்ட மேலவையில் இவர் வாதிட்டு முன்மொழிந்து கொணர்ந்ததுதான் தேவதாசி தடைச்சட்டம். இதைவிட பெரிய சமூக சேவையை யார் செய்துவிட முடியும்?

இவர் துவங்கியதுதான் அடையாறு புற்றுநோய் மருத்துவ ஆய்வுக் கழகம். இவர் தொடங்கியதுதான் ஆதரவற்ற பெண்கள் வாழ்வாதரம் பெரும் அவ்வை இல்லம். இவை ஓவ்வொரு நிகழ்வுகுக்கும் பின்னர் ஓராயிரம் கதைகள் இருக்கின்றன. வலிநிறைந்த, முட்கள் அடர்ந்த பாதைகளில் அவர் நடந்தார்.

இப்போது சொல்லுங்கள் எது அழகு. அக அழகா புற அழகா ?

மதர் தெரசாவின் சுருக்கங்கள் நிறைந்த முகம் பேரழகு இல்லையா ?

இது உள்ளீடின் ஒரு பகுதிதான் தயா விரும்பினால் விரித்து சொல்லலாம்.


மழைத் துளிகள் எப்படி ஒரு கற்பாறையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து அதனுள் இருக்கும் ரத்தினக்கற்களை வெளிபடுதினவோ அதே போல கல்வி மிக சாதாரண மக்களை பண்படுத்தி மேன்மைபெற வைக்கிறது.

எனவே உருவத்தை கொண்டு யாரையும் கேலி செய்வது தவறு.
மனிதர்களின் புறஅழகைக் கொண்டல்ல அவர்களின் அக அழகைக்கொண்டே  நாம் அவர்களை அணுக வேண்டும்.


Comments

  1. அருமையான எடுத்துகாட்டுகள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக