உதவி கேட்டு கதறி அழுத சட்ட மன்ற உறுப்பினர் சாஜி செரியன் |
ஒ.பி.எஸ்ஸின் தம்பிக்கு விரைந்த ஹெலிகள் கேரளமக்கள் முன்னூறு பேர் பலியான பிறகும் வரவில்லை.
சிலைகளுக்கு ஆயிரம் கோடிகளை ஒதுக்கிய மத்திய அரசு இந்த இயற்கை பேரிடருக்கு ஐநூறு கோடிகளை நிவாரண நிதியாக அறிவித்திருக்கிறது.
ஏன் இந்த பாராமுகம் ?
கம்யூனிசத்திற்கு ஆதரவளித்து இவ்வளவு பெரிய குற்றமா ?
அல்லது பெரும்பாலோனோர் இஸ்லாமியர்கள் என்கிற இளக்காரமா?
இந்தியாவின் முதல் விடுதலைப் போர்களில் ஒன்றை முன்னெடுத்த மலையாளிகளுக்கு இந்திய ஒன்றியம் செலுத்தும் நன்றி, இதுவா? வெட்கக் கேடு. (மலபார் கலவரம், மாப்ளாஸ் கலவரம் குறித்துப் படிக்கவும்)
எனது நட்பு வட்டத்தில் முதல் முதலாக களம் இறங்கியவர் கவிஞர் ஆன்மன், முதல் ஆளாக கேரளாவுக்குச் சென்ற இவர் இன்றுவரை மீட்பு பணிகளில் இருக்கிறார். இன்னும் திரும்பவில்லை.
ஒவ்வொரு நாளும் இவர் வெளியிடும் கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படுகின்றன. சுல்தான் பத்தேரியில் துவங்கிய மீட்பு பணிகளை கல்பெட்டா வரை நீட்டித்திருக்கிறார்.
இவரது கோரிக்கைகளை உடன் நிறைவேற்ற ஒரு நட்புப் படை. குறிப்பாக பெரியவர் ஷாஜகான் அவர்கள். புது டெல்லியில் இருந்து இவர் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கினைக்கிறார்.
மேலும் மூளைக்கு பதிலாக மலம் நிரம்பிய சங்கிகளின் இற்றைகளை பொருட்படுத்தாதீர்கள் என்று கூறி நண்பர்களின் கவனம் முழுதையும் மீட்ப்புப் பணிகளில் குவிக்கிறார்.
குறிப்பாக மலமூளை கொண்ட ராஜீவ் மல்ஹோத்ரா, இந்துக்களுக்கு இந்துக்கள் உதவுங்கள், இதுபோலத்தான் மற்றவர்கள் தங்கள் இனத்துக்கு மட்டும் உதவிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இந்துக்கள் நம் அமைப்பிற்கு உதவினால் இந்துக்களுக்கு உதவுவோம் என்று ட்வீட் செய்திருக்கிறார்.
ராஜீவ் எவ்வளவோ தேவலை, ஏதோ ஒரு கெய்க்வாட் மாட்டுக்கறி துன்ற பசங்களுக்கு யாரும் உதவ வேண்டாம். என்று. இது போன்ற இழி பிறவிகள் தாங்கள் சார்ந்த மதத்தை எவ்வளவு இழிவு செய்கிறோம் என்பதைக் கூட அறியாத மூடங்கள்.
இன்னும் ஒரு பிரிவினர் சுப்ரீம் கோர்ட் பெண்களை சபரிக்கு அனுமதித்தால்தான் கேரளாவுக்கு இந்த கண்டம் என்று பரப்புரை செய்கிறார்கள்.
ஆமா, தமிழ் நாட்டுல 7000 சாமி சிலைகளை காணோமே, என்னடா பண்ணார் கடவுள் என்றால் பதிலைக் காணோம்.
ஆக சங்கிகள் தாங்கள் சாணியடிப்பது தங்கள் கடவுள்கள் மீது என்பதை கடைசிவரை உணர்வதே இல்லை.
குருமூர்த்திகள், கெய்க்வாட்கள், பேடிகள் நிறைந்த உலகில் நம்பிக்கை தீபங்களை ஏற்றுவது நண்பர்களின் நற்செயலே.
ஆன்மனின் ஓவ்வொரு இற்றைக்கும் லார்களில் நிறையும் மீட்புப் பொருட்கள் மானிடம் உயிர்திருப்பத்தின் சுவடுகள்.
பேடிகள் அரசாள பிணம் குவிக்கும் பேரிடரை வெல்ல இந்த மனிதம் நிரம்பிய நண்பர்களின் சேவைகள் இப்போது நமக்குத் தேவை.
மீனவ நண்பர்கள்
குறிப்பிடப் படவேண்டிய செய்தி என்றால் கேரளாவின் மீனவர்களின் அசுர சாதனைதான்.
இராணுவமே வராத வேளையில் அதீத ஆபத்தான பகுதிகளில் தங்கள் படகுகளை செலுத்த முயன்று தோற்றவர்கள், சூழலை நன்கு ஆய்ந்து தங்கள் படகுகளை இரட்டை எஞ்சின் படகுகளாக மாற்றி, ஒவ்வொரு படகுக்கும் செலுத்த ஒருவர், துடுப்புக்கு ஒருவர், தேர்ந்த நீச்சல் வீரர்கள் இருபது பேர் என்று சென்று ஒருமுறைக்கு இருபது பேர் வீதம் ஒரே நாளில் ஐம்பதாயிரம் பேர்களை மீட்டு சாதனை செய்திருக்கிறார்கள். வெள்ளம் வடிந்ததற்கு பிறகு இவர்களின் மீட்பு முறைகளை ஆவணப் படுத்துவது குறித்து இப்போதே பேசிவருகிறார்கள் நண்பர்கள். அப்படி என்றால் இது உலகின் முன்னோடி மீட்பு செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கும்.
முதல்வர் பிரணாய் ராய் விஜயன் சும்மா சொல்லவில்லை
எங்கள் மீனவர்கள் எங்கள் ராணுவம்
இந்த பேரிடர் காலத்தில் பிரணாய் ராய் விஜயன் ஒரு நல்ல தலைமை என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்திருக்கிறார்.
நிறைய வெறுப்புடனும்
கொஞ்சம் நம்பிக்கையுடனும்
மது
கேரள வெள்ளம் - வேதனை.
ReplyDeleteமீனவர்களின் செயல் போற்றுதலுக்கு உரியது
ReplyDelete