டெல்லி மோதி மார்கெட்டில் என்ன நடக்கிறது?



கன்வாரியாக்கள் மூன்று இடத்தில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்..



இவற்றில் ஒன்று போலிஸ் ஜீப்பின் மீதான தாக்குதல்.

தாக்குதலில் ஈடுபடும் கன்வாரியாக்கள் எதைபற்றியும் கவலைப்படாமல் புகுந்து புறப்படுகிறார்கள்...ஒரு காரை கரப்பான் பூச்சியை கவிழ்ப்பதுபோல கவிழ்த்து, போலிஸ் ஜீப்பை உடைத்து, பொது சொத்தை சூறையாடி..தடம் பதித்திருக்கிறார்கள்.

போலிஸ் என்ன செய்கிறது?

அமைதிகாக்கிறது.

மீரட் பகுதியின் ஏடிஜிபி ஒருவர் ரோஜா இதழ்களை கண்வாரியாக்கள் மீது ஹெலியின் மீதிருந்து தூவுகிறார்.

யார் அப்பன் வீட்டுக் காசு என்று இந்தியா டுடே கதறுகிறான்.

சரி கன்வாரியாக்கள் யார்?

தங்கள் கிராமங்களில் இருந்து கங்கைக்கு பயணித்து புனித நீரை எடுத்து வந்து சிவராத்திரிக்கு தங்கள் கிராமத்தில் இருக்கும் சிவலிங்கங்கள் மீது அர்ச்சிப்பது கடந்த 1980 ஆம் ஆண்டுமுதல் பக்தர்களால் நடத்தப் பெற்று வருகிறது.

மிக குறைவான எண்ணிகையில் பயணிக்கும் பக்தர்களால் தொடங்கப்பட்ட இந்த பயணம். இன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்களால் பின்பற்றப்படுகிறது.

சம்பவம் நடந்த மோதி மார்கெட்டில் ஒரு காரில் வந்த தம்பதியினர் கன்வாரியா ஒருவர்மீது மோதியிருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து பக்தர்கள் கடும் வார்த்தைகளால் காரில் வந்தோரை அர்சித்திருக்கிறார்கள். காரில் இருந்த ஆண் காரை விட்டு இறங்கி தடித்த வார்த்தை பேசிய பக்தருக்கு ஒரு அறை கொடுத்திருக்கிறார்.

காரை துவம்சம் செய்து கரப்பான் பூச்சியை போல புரட்டிப் போட்டுவிட்டார்கள்.

இதேபோல இன்னொரு இடத்தில் காவலர்களுடன் வாக்குவாதம் தொடர்ந்து காவல்துறை ஜீப்பை நொறுக்கிவிட்டார்கள்.

இப்போது காவல்துறை எப்.ஐ.ஆர் மட்டும் போட்டிருக்கிறது.

யார்மீதும் நடவடிக்கை இல்லை.

இதைவிட சோகம் என்னவென்றால் பக்தர்களை மலினப்படுத்தும் குண்டர்கள், லாரிகளில் அலறியபடி பாடல்களை ஒலிக்கவிட்டு,  கண்ணில்படுபவர்களை  துவம்சம் செய்கிறார்கள் என பிரச்சனையை திசைதிருப்புகிறார்கள்.

பிரச்சனையின் மூலம் அதீதமான எண்ணிக்கையில் இருக்கும் கன்வாரியக்கள்தான்.

பெரும் கூட்டமாக இருப்பதால் கட்டுப்படுத்தவோ, நடவடிக்கை எடுக்கவே முடியாது என்பதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு கும்பல் மனப்பான்மையில் அழிவு செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இந்த தருணத்தில் லண்டன் மாணவர் பிரச்சனையை நாம் நினைவில் கொண்டால் தீர்வு கிடைக்கும். நியாயமான கோரிக்கையான கல்விக் கட்டண குறைப்பை கோரி எட்டாயிரம் மாணவர்கள் பங்குபெற்ற பேரணியில் சில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு கடைகளை சூறையாட, முன்னெடுத்த போராட்ட தலைவர்களை கைது செய்து தண்டித்துவிட்டார்கள்.

டெல்லியில் இதை செய்தால் அடுத்த ஆண்டு வன்முறை இருக்காது.

எது எப்படியோ இது...

புதிய இந்தியா பிறந்ததின் கொண்டாட்டம் போல தெரிகிறது.

அனைவர்க்கும் வாழ்த்துகள்

Comments

  1. மக்கள் சிந்திக்க மறுக்கும்வரை இன்னல்கள் தொடரும்...

    ReplyDelete
  2. கடவுளின் பெயரால் நடப்பெதெல்லாம் வேதனை

    ReplyDelete
  3. கட்டுப்பாடற்ற செயலின் விளைவு மோசமாக அமைந்துவிடும்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக