புயலில் சுழன்ற கவிதை தேவதா தமிழ்


ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை என்ன செய்யலாம்?

உங்களுக்கே தெரியும், ஆனால் வெகு சில ஆசிரியர்களே அவர்களின் சொகுசு வட்டத்தை தகர்த்து வெளியே வருகிறார்கள்.



கீதா அவர்களில் ஒருவர்.

கவிஞராக, சமூக ஆர்வலராக, பெண்ணியம் பேசும் கவிதைகளை தருபவராக, இவற்றோடு கூடவே பொறுப்புமிக்க ஆசிரியராகவும் இருக்கும் கவிஞர்.

சைக்கில் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சிக்கு பிறகு அதிகம் பகிரப்பட்ட "அப்பான்னு சொன்னேன் அசிங்கமா..." என்கிற கவிதையை எழுதியவர் இவர்தான். உங்கள் கட்செவியில், முகநூல் பக்கத்தில் அடிக்கடி இந்த கவிதையை நீங்கள் பார்க்கலாம், ஆனால் இவர் பெயர் மட்டும் இருக்காது.

கஜா தாண்டவமாடிய நாட்களில், டெல்டா கற்காலத்தில் இருந்த அந்த இருண்ட நாட்களில் இவர் முன்னெடுத்த விசயங்கள் இன்னொரு கோப்பை மனிதம்.

கஜா நிவாரணக் குழுவின் அச்சாணிகளில் ஒருவராக நிதியை கையாண்டவர், கோரிக்கை எழும் பகுதிகளுக்கு தன்னார்வலர்களிடம் பொருட்களை கொடுத்து அனுப்புவது, யாருக்கு எங்கே என்ன என்ன பொருட்கள் போகின்றன என்று பதிவேட்டை நிர்வகிப்பது என சுழன்று சுழன்று இவர் செய்த பணி எல்லோருக்கும் ஒரு உந்துதல்.

இவ்வளவு சேவைகளையும் தன் மகளின் பிரசவத்திற்கு முதல் நாள்வரை செய்தது பெரிய விஷயம்.

கஜா நிவாரணக் குழுவின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு மூன்று நாட்கள் முன் வரை தன் சேவையை குழுவிற்கு தந்தவர்.

உண்மையில் புதுகையில் இயங்கும் வீதி, புதுகை கணினித் தமிழ்ச் சங்கம் என எந்த அமைப்பாக இருந்தாலும் நிதி பரிபாலனம் கவிஞர்தான்.

வரும் நாட்களில் இன்னும் இருக்கிறது இவர்களின் விஸ்வரூபம்.

இன்று புதிதாக பிறந்த தன் பெயரனை கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.

பெயரனின் பெயர் என்ன தெரியுமா ?

அசுரன்...

சும்மா அதுருதுல்ல.

கஜா ஆளுமைகளின் அணிவகுப்பு தொடரும் ...

அன்பன்
மது

Comments

  1. ஆகா தம்பி என்ன சொல்ல.... மேலும் இயங்குகிறேன் உங்கள் அன்பால்.

    ReplyDelete
  2. எப்பொழுதும் சமூக சிந்தனையில் செயலாற்றும் இனியவர்
    கீதா ..பதிவிற்கு நன்றி அண்ணா

    ReplyDelete
  3. நிதி பரிபாலன நிபுணர்... வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. ஆஹா.... அவரது செயல் எப்போதும் சிறப்பு. எனது வாழ்த்துகளும்....

    அவ்வப்போது பதிவுகள் எழுதுங்கள் மது.... இப்படி விலகியே இருப்பது நன்றாக இல்லை. என்னதான் முகநூல் உங்களுக்கு இப்போது பிடித்ததாக இருந்தாலும் வலைப்பூ தான் ஆதார ஸ்ருதி என நினைக்கிறேன்.

    ஆங்கில சினிமாக்கள் பற்றிய உங்கள் பதிவுகள் நான் விரும்பிப் படிப்பவை. பல விஷயங்களை உங்கள் பதிவுகள் மூலம் அறிந்து கொண்டதுண்டு. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  5. இவரைப் போன்ற உழைப்பாளிகளை வளர்ந்து வருவோர் முன் உதாரணமாகக் கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை.

    ReplyDelete
  6. சும்மாவா?
    எங்களின் வேலுநாச்சியார்ல?
    இலக்கிய வாதிகளில் பலர் களப்பணியாளராக முன்வருவதில்லை, அவர்களிலும் பெண்கள் மிகவும் அரிதாகிவிட்ட இக்காலத்தில் எங்கள் கணினித் தமிழ்ச்சங்கம் மட்டுமல்ல, வீதி குழு மட்டுமல்ல, புதுக்கோட்டையின் முற்போக்கான செயற்பாட்டாளர்களில் முக்கியமான பெண் ஆளுமை எங்கள் கவிஞர் மு.கீதா! அவரைப்பற்றி “இயல்பு நவிற்சி அணி”யாக எழுதிய மதூ! உங்களுக்கு என் சிறப்பான நன்றிகள் பல!

    ReplyDelete

Post a Comment

வருக வருக