ஷாஜகான் அன்பின் விதை - கஜா கமாண்டர்

மழை மனிதர், மண்ணின் உப்பு என்று எந்த பதம் கொண்டும் அழைக்கலாம் இவரை.விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து எழுதிய பொழுது, ஒரு பின்னூட்டம் வந்தது இவரிடம் இருந்து. இவர் யார் என்றெல்லாம் தெரியாது அப்போது.

கவிஞர் வைகறை புதுகையில் ஒரு மாபெரும் கவிஞர்கள் சந்திப்பை ஏற்படுத்திய பொழுது நந்தன் எனும் நண்பர்  புதுகைக்கு வந்திருந்தார்.  அவரை சந்தித்த பொழுது சொன்னார் ஷாஜகான் சார் உங்களுக்கு கமென்ட் போடுறது பெரிய விசயம். தொடர்ந்து கட்டுரைகளை நேர்த்தியாக எழுதி ஒரு நூலாக வெளியிடுங்கள் என்றார் நந்தன்.

அதன் பிறகு கூடுதல் கவனத்துடன் தொடரும் முகநூல் நட்பு அய்யா ஷாஜகான்.

உடுமலையில் துவங்கிய பயணம் இன்று டெல்லியில் நிலைகொண்டிருக்கிறது. சக்கரக் காலன் என்ற பட்டம் பெற்ற இவர் பயணங்களின் காதலர்.

பயணங்கள் மூலம் இவர் அடையும் அனுபவங்களை மனிதநேயப் பார்வையில் எழுத்தில் வடித்தார் என்றால் படித்துக் கொண்டே இருக்கலாம்.கல்வி உதவிகளைச் செய்துவிட்டு போகும் வழியெல்லாம் அன்பை விதைப்போம் என்று அமைதியாக கடப்பார்.

என்னுடைய மாணவிகளில் ஒருவர் இவர் உதவியால் இன்று பட்டதாரியாக இருக்கிறார்.  இதைக் குறித்து எழுதியைதைப் படித்த புதுகை தன் ஆர்வப் பயிலும் வட்டத்தினர் போட்டித் தேர்வுகளுக்கு பயில போக்குவரத்துக்கு பணம் கொடுத்து அழைத்திருக்கிறார்கள்.

அய்யாவின் செயல்பாடுகளை பார்க்கும் பொழுது எனக்கு தோன்றுவது இதுதான் கடவுள் தன்னுடைய பிரதிநிதிகளாக சிலரை இங்கே விட்டு வைத்திருக்கிறார். அவர்களில் ஒருவர் ஷாஜ் ஜி.

கடந்த முறை சென்னை தத்தளித்த பொழுது சென்னை மீட்ப்புப் பணிகளில் மதிய அரசிடம் இருந்து ஐந்து பெரும் சலுகைகளை பெற்றுத் தந்தார். ஒருலட்சம் பாட்டில் குடிநீர் துவங்கி மொபைல் வங்கி சேவை வரை செய்ய முகநூலில் பலர் இவர் படத்தை தங்களுடைய முகப்புப்  படமாக வைத்திருந்தார்கள்.

கடந்த கேரள வெள்ளத்தின் பொழுது ஆன்மன் மற்றும் குழுவினருடன் இவர் இணைந்து சுழன்றது மறக்க முடியாது.

இந்த நிலையில் தமிழகத்தை கஜா துவைத்த பொழுது இவர் களத்தில் இறங்காமல் இருப்பாரா?

இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக இவருடைய காலக்கோட்டிற்கு சென்று நவம்பர் மாதத்தை பார்வையிட்டேன்.

படங்களைப் பார்க்கப் பார்க்க மனசு ரணமாகியது.

இணைப்புக்களை நீங்களே பாருங்கள்


 இவரும் இவர் குழுவினரும் டெல்டா பகுதிகளில் செய்த சேவைக்கு பத்ம விருதுகளே கொடுக்கலாம்.

நாயகர்களின் அணிவகுப்பு தொடரும்

அன்பன்
மது 

Comments

 1. கடவுளின் பிரதிநிதிகள் என்பதில் மறுப்பேதும் சொல்ல முடியாது. மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் இவர்களால் மனிதம் வாழ்கிறது

  ReplyDelete
 2. இனிய காலை வணக்கம் மது...

  ஷாஜகான் ஜி.... நல்ல மனிதர். அவர்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி. சத்தமில்லாமல் பல சீரிய செயல்கள் புரிபவர்.

  ReplyDelete
 3. வாப்பா 💕

  ReplyDelete
 4. பாராட்டப்படவேண்டிய மாமனிதர்.

  ReplyDelete
 5. என் வாழ்வில் நான் நேரில் கண்ட மாமனிதர்..... மிகமிக எளிமையான எல்லோருடனும் பழகக்கூடிய ஆனால் அறச்சீற்றமும் சமூகப் பொறுப்பும் அக்கறையும் கொண்ட மனிதர். வெற்று முகநூல் போராளியாக நிற்காமல் களத்தில் இறங்கி சாதித்தவர். இவருக்கு வலதுகரமாக இருந்து உதவியது எழுத்தாளர் 'நான் ராஜாக்கள் ' எனும் தேன்மொழி அண்ணாதுரை

  ReplyDelete

Post a Comment

வருக வருக