புதுகையின் ஈரமிகு மனிதர்கள் கஜா தினங்களில்

புதுகை செல்வா

புதுகை செல்வாவுடன் எனது நட்பு முப்பது ஆண்டுகளைக் கடந்தது. எழுதுவது என்றால் எழுதிக் கொண்டே இருக்கலாம். புதுகையின் பொது அத்துணை நிகழ்வுகளிலும் குடும்பத்தோடு கலந்து கொள்ளும் தோழர். இவரது இளவல்கள் கௌதம், மற்றும் சங்க மித்திரையை புதுகையின் எல்லா இலக்கிய விழாக்களிலும் சந்திக்கலாம்.கஜா தினங்களில் இவர்

அய்யா பஷீர் அலி

ஐக்கிய  மக்கள் நலக் கூட்டமைப்பின் புதுகை அலுவலர், புதுக்கோட்டை நாணயவியல் சங்கத்தின் நிறுவனர், தலைவர் வருடத்தின் முன்னூற்றி அறுபத்தி ஐந்து நாட்களும் மனிதநேயப் பணிகள்.

விதைக்கலாம் கடலூர் வெள்ள நிவாரணத்தை முன்னெடுத்த பொழுது இவர் தந்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது.

தொடர்ந்து மக்கட் பணியில் இருப்பதால் நிவாரணப் பணிகளின் பொழுது மிக லாவகமாக இயங்குவார்.

ரோட்டரியன் பார்த்தீபன்

ரோட்டரி சங்கத்தின் ஆற்றல் மிகு ஆளுமைகளில் ஒருவர். இவர் பணித்ததால்தான் ரோட்டரி நிவாரணப் பணிகளில் ஈடுபட முடிந்தது. குறிப்பாக அருணா அலாய்ஸ் அண்ட் ஸ்டீல்ஸ் நிறுவன ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை நிவாரணப் பொருட்களாக மாற்றி வந்த பொழுது அவர்களை மாவட்டத்தின் இரண்டு பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல முடிந்தது.

ரோட்டரியின் பெரும் சேவைக்கு பின்னே ஓசையின்றி இருக்கும் பலரில் ஜெய் பார்த்தீபன் ஒருவர்.


Comments