டாட் இஸ் மை ஹீரோ - மாணவி ஒருவரின் அசத்தல் கட்டுரை


இரண்டு வகுப்புகளை இணைத்து பார்த்துக்கொள்ளும் பணி சில நாட்களுக்கு வாய்க்கும். அதுபோன்ற ஒரு வகுப்பில் மாணவர்களை மை டாட் இஸ் மை ஹீரோ என்கிற தலைப்பில் எழுதச் சொன்னேன். 

பிள்ளைகள் எழுதியதில் அசத்தல் கட்டுரை ஒன்று இங்கே என்ன முதலிடம் இரண்டாம் இடம்.. இதுவும் முதலிடமே ...

 என் வாழ்க்கையின் முதல் HERO my Dad. என்னுடைய அப்பா ஒரு விவசாயி. அவரு விவசாயம் செய்துதான் எங்களைப் படிக்க வைக்கிறார்.அவருக்கு மனதில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அத எங்ககிட்ட காட்டிக்க மாட்டார். ஒவ்வொருவர் வாழ்க்கைக்குப் பின்னும் ஒருவர் இருப்பார். அது போல என் வாழ்க்கையின் பின்னால் என் அப்பாதான் இருப்பார்.


 ஒரு நாள் எனக்கு மிகவும் உடல் நிலை சரியில்லை. என் அப்பா எனக்காக அன்று சாப்பிடவே இல்லை. மணி 1:30 அப்போ என்னால காய்ச்சல தாங்க முடியவில்லை. அப்போ உடனே ஓரு கார் எடுத்துக்கொண்டு வந்து மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார். மருத்துவ செலவுக்கு போதிய பணமில்லை என்றவுடன் தன் கையில் இருந்த மோதிரத்தை அடகு வைத்து மருத்துவமனைக்கு பணம் கொடுத்தார். இதுபோல பல நிகழ்வுகள். நான் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லமாட்டார்.


 என் அப்பாவிற்கு வண்டி ஓட்டத் தெரியாது, அதனால் ஊரில் பலரும் அவரை கிண்டல் செய்தனர். அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. "நீங்களும் என்னை மாதிரி இருக்காமல் நல்லா படிக்கணும், நல்லா வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்" ஒருநாள் என் தம்பி வண்டி ஓட்டனும். வண்டி வாங்கித் தாங்க என்று கேட்டான்.

 இரண்டாம் நாள் அப்பா ஒரு வண்டியை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.


 என் அப்பா எப்போதும் வேட்டி சட்டையைத் தவிர வேறு எதையும் அணிய மாட்டார். நான் "அப்பா, ஒருநாளாவது பேண்ட் ஷர்ட் போடுங்க" என்றால் "முடியாது அது நம்ம தமிழ் பாரம்பரியம் இல்லை" என்பார்.

 என் அப்பாவிற்கு ஒரு மாடி வீடு கட்ட வேண்டும் என்று ஆசை. நான் அதை நிறைவேற்றவேண்டும் என்று சொல்வார்

" நான் என் அப்பா ஆசையை நிறைவேற்றுவேன். அப்பா சொல்வார்

"உங்களையெல்லாம் படிக்க வைக்க நாங்க இருக்கோம், எங்களை படிக்க வைக்க அப்போ யார் இருந்தா?" ஏன் என்றால் என் அப்பாவின் அம்மா, (அப்பத்தா) என் தாத்தாவின் இரண்டாவது மனைவி. 

இரண்டாவது மனைவியின் பிள்ளை என்பதால் என் அப்பாவை தாத்தா படிக்க வைக்கவில்லை. சின்ன வயதில் ஒரு நாள் என் அப்பா ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது சோறு இல்லாமல் பசியில் தவித்தாராம். அப்பாவின் வேதனையை பார்த்துப் பாட்டி பக்கத்து கிரமத்தில் இருந்து உறவினர் வீட்டிற்கு சென்று சோறு வாங்கிவந்தாராம். அப்படியெல்லாம் கஷ்டப்பட்ட எங்க அப்பா எங்களை ஒரு நல்ல நிலையில் பார்க்க ஆசைப்படுகிறார். அதுக்கு நான் நிறைய கடைமைப்பட்டிருக்கிறேன்.


 என் வீட்டில் என் அம்மாவிடம் இருந்ததை விட அப்பாவிடம் அதிக நேரம் இருந்திருக்கிறேன். அவரிடம் நிறய அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் ஒரு விசயமாக எனக்கு தோணல. அவற்றை என் அப்பாவின் அறிவுரையாகத்தான் எடுத்துக்கொண்டேன்.

இவ்வுலகில் கடவுள் இருக்கிறார் என்றால் அது என் அப்பாதான். அம்மாதான். எல்லோரும் கடவுளைத் தேடி கோவிலுக்கு போவார்கள். வீட்டிலேயே அவர்கள் இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

 என் அப்பாதான் என் வாழ்வின் முதல் ஹீரோ. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதில் என் அப்பா எனக்கு மகனாக வரவேண்டும். அப்போதுதான் என் கடனை அடைக்க முடியும்.

Comments

  1. நல்லதொரு கட்டுரை..... அந்த மாணவிக்கு எனது பாராட்டுக்கள்..... அவரது வாழ்வில் முன்னேற வாழ்த்துகள்........

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள்
      வாழ்துக்களை சேர்பிக்கிறேன்

      Delete
  2. பெரும்பாலும் எல்லோரும் அம்மாவைப் பற்றி மட்டும் பேசி அப்பாவை சொல்ல மாட்டார்கள். அப்பாவைப் பற்றிச் சொல்லச் சொன்ன உங்களுக்குத் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தமிழகப் பள்ளிகளில் இது வழமையானதுதான்
      நன்றிகள் வருகைக்கு

      Delete
  3. அந்த மாணவிக்கு பாராட்டுக்கள். படிப்பறியா தந்தையை வெட்கப்படாம மதித்து பெருமிதப்படுத்தி இருப்பதற்கே அவளுக்கு முதல் பரிசு கட்டாயம் குடுக்கணும்

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பெண் ரொம்ப அக்கறையாகப் படிக்கக் கூடிய பெண் ...
      அக்கறை எங்கிருந்து வருகிறது என்பது இந்தக் கட்டுரையை படித்த பின்னர்தான் எனக்கு புரிந்தது.

      Delete
  4. நெகிழ்ந்தேன். என்னைப் போல மகளைப் பெற்றிராத அப்பாக்கள் அதிகமே இதனை ரசித்திருப்பர் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் வருகைக்கு ...

      Delete
  5. துளசிதரன்: ஆங்கில ஆசிரியரே (என் வர்க்கமாச்சே!!!!!) உங்கள் பணி அருமை! அழகான தலைப்பு கொடுத்திருக்கின்றீர்கள். நான் பள்ளி ஆசிரியராக இருந்தவரை இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்ததில்லை வகுப்பில்.

    மாணவியின் கருத்துகளும் அருமை. மிக மிக சிம்பிளாக ஆனால் தன் எண்ணங்களை அழகாகப் பதிந்திருக்கிறார் வாழ்த்துகள் மாணவிக்கும் ஆசிரியருக்கும். (இப்போது என் மனதில் தோன்றும் எண்ணம் என் மகள் என்னை ஹீரோவாக மனதில் கொண்டிருப்பாளோ இப்படி ஒரு தலைப்பை அவளிடம் கொடுத்தாள் என்ன எழுதுவாள் என்னைப் பற்றி என்ற எண்ணம் ஓடுகிறது!!)

    கீதா: கஸ்தூரி முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்!!! டாட் இஸ் மை ஹீரோ என்ற தலைப்பு கொடுத்து எழுத வைத்தமைக்கு! (நீங்கள் ஓர் ஆசிரியராக எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமான சிந்தனையில், தலைப்பில் வகுப்பு எடுப்பீர்கள் என்று உங்கள் பதிவுகளின் மூலம் அறிந்ததுண்டே!!!...இதற்கு துளசியின் கருத்து என்னவாக இருக்கும் என்று அவர் கருத்து வரும் வரை காத்திருந்ததில் கருத்து பதிய தாமதம்...!!!!!!!!)

    மாணவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள்! கட்டுரை நெகிழ்ச்சி! தன் தந்தை ரொம்ப சிம்பிளாக இருந்தாலும், அவளை அடித்திருந்தாலும் கூட மனதில் தந்தையைப் பற்றி எத்தனை உயர்வான எண்ணங்கள்!

    அவர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கனவு எல்லாம் நிறைவேற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

    பொதுவாகவே பெண்குழந்தைகளுக்குத் தங்கள் அப்பாவிடம் கொஞ்சம் கூடுதல் பிரியம் இருக்கும் என்று உளவியல் சொல்லுவதுண்டுதான். அது போல மகன் களுக்கு அம்மாவிடம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

    என்றாலும் மகள் கூட தங்கள் அம்மாவைப் பெருமைப்படுத்தி பேசுவது போல் கவிதை வடிப்பது போல் அப்பாவைப் பெருமைப்படுத்திப் பேசியது வெகு அபூர்வம் என்றே தோன்றும். அப்பாவைப் பெருமைப்படுத்தியும் பேசிய ஒரு கட்டுரை வெளி வந்தமைக்கு உங்களுக்கும் மாணவிக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!!! ( இரு செல்லங்களுக்கும் நீங்கள் ஹீரோதானே!!! அப்படித்தான் இருக்கும்!!! பெருமைப்படுங்கள் கஸ்தூரி! அதைப் பொக்கிஷப்படுத்துங்கள்!)

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பேராசிரியருக்கும்
      தோழமைக்கும்

      Delete
  6. உண்மையான பதிவு

    ReplyDelete

Post a Comment

வருக வருக