கவிஞர் சுகன்யா ஞானசூரி திருச்சி தனியார் மருத்துவ மனை ஒன்றில் பணியாற்றுகிறார். வீதி கலை இலக்கிய களத்தின் மூலம் அறிமுகமானவர்.
இந்த கஜா தினங்களில் களத்தில் சுழன்றுகொண்டே இருந்தார். கஜா கமாண்டர் ஷாஜ் ஜி, மற்றும் தளபதி ஆன்மன், தோழர் இனியன், கார்த்திக் புகழேந்தி, டெல்லி குமரன், நான் ராஜாமகள் ஒன்றிணைத்த தஞ்சை மையம் தன் சேவைகளை எம் மாவட்டத்திற்கு இவர் மூலம்தான் வழங்கியது.
அம்மையம் தன் சேவைகளை நிறைவு செய்ய பொழுது இறுதி இருப்பின் ஒரு பகுதிப் பொருட்களை கவிஞரிடம் ஒப்படைத்து தொப்புக்கொல்லை முகாமிற்கு வழங்கப் பணித்தது.
இந்த சேவையை எவ்வளவு மன மலர்ச்சியோடு செய்தார் சுகன்யா என்பதை நேரில் பார்த்தவன் நான்.
போப்ஸ் நியாஸ் மற்றும் நவீனோடு சுகன்யாவை கஜா நிவாரணக் குழுவின் அலுவலகத்தில் சந்தித்தேன். இடர் நிறைந்த நாட்கள் என்றாலும் சுகன்யாவின் மகிழ்வு என்னைத் தொற்றத்தவறவில்லை.
தொடர்வோம்
அன்பன்
மது
வாழ்க வளமுடன்.... ஞானசூரி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteஅன்பும் நன்றிகளும் ஐயா.
Deleteதோழர் அன்பும் நன்றிகளும் என்றென்றும். கொஞ்சம் மிகையாக இருக்கிறதோ எனும் வெட்கம் ஒருபுறம், இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் மறுபுறம் என கொஞ்சம் அச்சமாக இருக்கிறது. நம்பிக்கையோடு பயணிக்கிறேன்.
ReplyDeleteஅப்படி இல்லை தோழர்..
Deleteஉங்கள் பணியை நீங்கள் செய்த பொழுது காட்டிய அக்கறை அர்பணிப்பு பதிவுக்குரியது
தொடருங்கள் தோழா
சுகன்யா ஞானசூரி அவர்களின் பணி தொடர வாழ்த்துகள்
ReplyDeleteஅன்பும் நன்றிகளும் தோழர்
Delete