என்ட்கேமில் போஸ்ட் கிரெடிட் சீன் எதுவும் இல்லை ஆனால்..


மார்வல் படங்கள் முடிந்த பின்னர், ரன்னிங் டைட்டில் பாதி
ஓடிக்கொண்டிருக்கும் பொழுது திடுமென ஒரு காட்சி வரும். அந்த காட்சி அடுத்து வரும் திரைப்படங்களை இணைக்கும்.தோர் ராக்னோராக் முடிவில் தானோஸ் அஸ்கார்டிய விண்கலத்தை மறிப்பதில் துவங்குகிறது அடுத்து வந்த அவன்ஜர்ஸ் இன்பினிட்டி வார்ஸ்.

இன்பினிட்டி வார்ஸில் வரும் போஸ்ட் கிரெடிட் சீன் காப்டன் மார்வலை அறிமுகம் செய்ய, ஒரு முழுநீளத்திரைப்படமே வந்தது.

காப்டன் மார்வல் போஸ்ட் கிரடிட் நேரே அவன்ஜர்ஸ் என்ட் கேமில் இணைந்தது.

காப்டன் மார்வல் என்ட் கேமில் சிறிய பகுதியை செய்திருந்தாலும் அவைதான் திரைப்படத்தின் அச்சாணியான நிகழ்வுகளை கட்டமைக்கின்றன.

எங்கோ வெகு தொலைவில் காற்றின்றி இறந்து கொண்டிருக்கும் அயர்ன் மேனை மீட்டு பூமிக்கு கொண்டுவருவதும், கடைசி ரணகள அதகள சண்டையில் தானோஸின் பெரும் விண்கப்பலை ஒரு ஆளாக சுக்கு நூறாக்குவதும் காப்டன் மார்வலின் தீபாவளி.

தானோஸ் கையில் காண்டுலேட்டை கழட்டும் முயற்சியில் அவனது சக்தியை குறைத்து அயர்ன் மேனுக்கு முயற்சியை எளிதாக்குவதும் காப்டன் மார்வல்தான்.

சரி,  போஸ்ட் கிரடிட் சீனில் ஏதாவது சொல்வார்கள் என்று பார்த்தால் முதல் முறையாக போஸ்ட் கிரடிட் ஆடியோ வருகிறது.

இந்த ஆடியோ ஒரு இரும்பின் மீது சுத்தியல் அடிப்பது போலவும், பாகங்கள் இணைவது போலவும் இருக்கிறது.

மிக சரியாக சொல்ல வேண்டும் என்றால் முதல் முதலில் ஆப்கானிஸ்தானில் டோனி சிறைபட்ட பொழுது அவனது முதல் அயர்ன் மேன் சூட்டை அவன் ரெடி செய்த பொழுது இருந்த பின்னணி இசை.

ஆக, இன்னொரு அயர்ன் மேன் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறது இந்த ஆடியோ.

அதே போல அயர்ன் மேன் தன் மகளிடம் பேசும் பொழுது மூவாயிரம் என்றும் சொல்கிறார்.

அடுத்து வருகிற எடர்னல்ஸ் திரைபடத்தின் ஒரு கதாபாத்திரமாக மூவாயிரம் இருக்கக்கூடும்.

எடர்ணல்ஸ் திரைப்படத்தில் ஒரு பாத்திரமாக புதிய அயர்ன் மேன் இருக்கக்கூடும் என்கிற ஊகங்களை தருகிறது இந்த ஆடியோ.

யார் கண்டது அயர்ன் லேடியாககூட இருக்கலாம்.

பெப்பர் பாட்ஸ், வார் மெஷின் தவிர புதிய அயர்ன் சூட் ஒன்று தயாராவதைத்தான் இந்த ஆடியோ சொல்கிறது.

அன்பன்
மது
(மார்வெல் பதிவுகள் தொடரும்) 

Comments

 1. ஹை அட கஸ்தூரி ப்ளாக் சூப்பரா இருக்கு வடிவமைப்பு! செம...ரொம்ப வித்தியாசமா இருக்கு

  கேம் அண்ட் சினேமாவா? ஆடியோ பற்றியதா நிறைய செய்திகள் தெரிஞ்சுக்கறேன் கஸ்தூரி. புதுசா இருக்கு இது எல்லாமே..

  கீதா

  ReplyDelete
 2. புதிய புதிய தகவல்கள் தருகின்றீர்கள். இதில் முதலில் புரியவில்லை அப்புறம் புரிந்தது.
  துளசிதரன்

  ReplyDelete

Post a Comment

வருக வருக