நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்


நாற்பத்தி எட்டுப் பக்கங்களில் ரபேல் ஊழல் குறித்து விரிவான ஒரு நூல் திரு.விஜயன் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது...

மிக விரிவான ஆய்வுநூல்.

நமது நாட்டின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதி ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே போய் 2018-19ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அது ரூ 3,59,854 கோடியைத் தொட்டது.

இந்த ரூ 3,59,854 கோடியில் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக கணிசமான பகுதி செலவிடப்படுகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. (2017-18ல் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக ரூ 86,529 கோடி ஒதுக்கப்பட்டது, உண்மையில் ரூ 1,46,526 கோடி தேவைப்படுவதாக பாராளுமன்ற நிலைக்குழு டிசம்பர் 2017ல் சமர்ப்பித்த அறிக்கை கூறுகிறது). இதைச் செலவிடும் அதிகாரம் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் உள்ளதால் இந்தத் துறைக்கு அமைச்சராக வருபவர் முக்கியமானவராக கருதப்படுகிறார். இந்தப் பெரும் தொகையில் ஒரு சிறிய அளவு (fraction) கமிஷனாக சென்றாலும் அது பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும்.

இந்த பாராவைத் தாண்டும் பொழுதே ரபேல் போன்ற ஊழல்கள் நமது விழிப்புணர்வு மிக்க சமூகத்தில், ஜனநாயக நாட்டில் ரபேல் ஊழல் நடக்கவே செய்யும். மேலும் நூல் இதற்கு முன்னர் நடந்த ஊழல் பேரங்களையுமே பேசுகிறது.

நமக்கு ரபேலுக்கு பிறகும் ஊழல் இருக்கும் என்பது புரிகிறது.

இந்த ஊழல் தவிர்க்கவே முடியாத ஊழல் என்றுதான்படுகிறது.

ஊழல் நடந்தது உண்மை என்றாலும் அதை செய்த விதம் தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வண்ணம் இருக்கிறதை பட்டியலிடுகிறது நூல்.

தேன் எடுக்கிறவர்கள் புறங்கையை நக்குவது ஒகே ஆனால் இங்கே முழு அடையையுமே ஆட்டையைப் போட்டுவிட்டார்கள்.

முழுக்க முழுக்க முதலாளித்துவ நாடாக மாறியாகிவிட்டதை உணர முடிந்தது.

மோடி ஆர்.எஸ்.எஸ்சினால் ஊதப்பட்ட ஒரு பலூன், அவர்கள் அடுத்த தேர்தலுக்கு இன்னொரு பலூனை ஊதுவார்கள்.

ஆனால் இவர்களைவிட ஆபத்தானவர்கள், இந்த தேசத்தை புற்றுக்கிருமிகளாக ஆக்கிரமிதிருப்பவர்கள் அம்பானி, அதானி வகையறாக்கள்தான்.

தேர்தல் வரும்

மோடிகள் கூட வீழ்த்தப்பட்டுவிடுவார்கள்.

ஆர்.எஸ்.எஸ் போல அம்பானியும் அதானியும் எப்போதும் இருப்பார்கள்.

நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தளவாடங்களை செய்து கொடுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் சங்கு ஊதப்பட்டிருக்கிறது.

பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் நான் ஆசிரியராக வருகிறேன் என்று வரிசை கட்டும் இளம் சமூகம் இருக்கும் இந்த நாட்டில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தை மூடுவது என்பது எத்துனை வேலை வாய்ப்புகளை பறிக்கும் என்பதையும் உணர வைக்கிறது.

இன்னொரு அபாயமாக நாட்டின் சுயேச்சையான அமைப்புகளான நீதித்துறை, தணிக்கைத் துறை, தேர்தல் ஆணையம் போன்றவற்றை காவி பயங்கரவாதிகள் தங்கள் வீசி எறியும் எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும் நாய்களாக்கிவிட்டார்கள் என்பதையும் இந்த நூல் தோலுரிக்கிறது.

ஹாட்ஸ் ஆப் விஜயன்.

இதுதான் நான் புரிந்து கொண்டது.

நன்றிகள் விஜயன்.
நன்றிகள் துவாரகா சாமிநாதன்

கடந்த இரண்டு நாட்களாக எல்லா வாட்சப் தகவல்களிலும் இந்த நூல் பி.டி.எப் வடிவில் வந்ததால் நான் பகிரவில்லை.


அன்பன்
மது 

Comments

 1. இந்தியாவில் மக்களாட்சி என்பது இழிவான வார்த்தை ஆகிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்

   Delete
 2. அரசியலில் ஆர்வமில்லை. ஆனாலும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான விசயங்குறதால படிக்கனும்ன்னு ஆர்வம் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்
   லட்சம் கோடிகள் புழங்கும் பணி என்பதால் ஊழல் தவிர்க்கப்பட முடியாது...
   நம்ம மக்களின் விழிப்புணர்வு அப்படி

   Delete
 3. நூலினை்த தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நாற்பத்தி எட்டு பக்கங்கள்தானே படியுங்கள் தோழர்

   Delete
 4. எளிமையாக வைத்து விட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி உண்மையானவரே

   Delete

Post a Comment

வருக வருக