என்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 2


விடைபெற்றுவிட்ட நேசதிற்குரிய உறவுகள் குறித்து எல்லோருக்கும் ஒரு ஆசைஇருக்கும்.


அவர்களை மீண்டும் ஒருமுறையாவது சந்திக்க மாட்டோமா, பேச மாட்டோமா என்று ஒரு சிறுபிள்ளைத்தனமான ஏக்கம் இருக்கும்.

அவன்ஜர்ஸ் என்ட் கேம் இயக்குனர்கள் வெற்றிபெற்றது இத்தகைய ஆசைகளைக் கொண்ட கதாபாத்திரங்களை கடந்த பல ஆண்டுகளாக உருவாக்கி இந்த படத்தில் அந்த பாத்திரங்கள் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அனுமதித்ததுதான்.

இந்தப் பதிவில் என்னுடைய ரசனையில் உணர்வுகளைக் கிளரும் பாசமலர் காட்சி வரிசையில் இரண்டு.

2. தோர் அஸ்கார்டில்

இடி மின்னலின் கடவுள் தோர் அவன்ஜர் சீரிஸில் கடும் இழப்புகளைச் சந்தித்த ஒரு கதாபாத்திரம்.

அம்மா, அப்பா, இருவரும் அண்ணன் சதியால் போய்ச்சேர, அக்கா ஹெலாவை ரக்னராக்கிடம் மாட்டிவிடுகின்ற அனுபவம், தொடர்ந்து தானோஸ் மீதம் இருக்கும் ஆஸ்கார்டியன்களை இனஅழிப்பு செய்வது  என தோருக்கு நிகழ்ந்தது அவன்ஜர் சீரிஸில் வேறு எந்த சூப்பர் ஹீரோவுக்கும் நிகழவில்லை.

ஆனால் என்ட் கேமில் மீண்டும் பழைய உறவுகளைப் பார்க்கும் தோர் உடைந்து போவது நெகிழ்வு.


டைம் ஹீஸ்ட் மூலம் நேரடியாக ஈதரை (இன்னொரு கல்)  எடுக்க செல்லும் அவன் அரண்மனை உள்வழிகளில் செல்லும் பொது அரண்டு நிற்கிறான்.

எதிர்புறம் இன்னொரு பாதையில் போவது இறந்துபோன அவனது அம்மா.

கடவுளாவது ஒன்னாவது என்று நினைக்கும் அளவிற்கு கதறி அழுகிறான், ராக்கெட்  ஓங்கி ஒரு அப்பு அப்பி அவனை நிகழ்வுக்கு கொண்டுவருகிறான்.

இருந்தும் அம்மா பின்னால் ஓடிவிடுகிறான்,  இருவருக்குமான உரையாடலில் அம்மா அவனை மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ ஆக்குகிறாள். மனதளவில் சோர்ந்திருந்த அவனை மீண்டும் உயிர்ப்பிக்கிறாள்.

அம்மாவைப் பார்த்தவுடன் நெகிழ்வது, பீர் தொப்பையை மறைத்துக் கொள்வது, விழுந்து அழுவது எனத் தோராக நடித்திருக்கும் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் தூள் கிளப்பியிருக்கிறார்.

செமையான பாசமலர் காட்சி.

பின்னர்  படத்தின் இறுதியில் தன்னுடைய ராஜ்யத்தை வால்கியரியிடம் தோர் அளிப்பதற்கான காரணமும் இந்த சந்திப்புதான்.

சரி, தோர் என்ன ஆகிறான்?

கார்டியன்ஸ் ஆப் தி காலக்சி குழுவில் இணைந்துவிடுகிறான்.

அநேகமாக அடுத்த கார்டியன்ஸ் ஆப்தி காலக்ஸி படத்தில் தோர் மறுபடி மின்னலும் இடியுமாக வரலாம்.

படம் ரெடியாகிகிட்டே இருக்கு நைனா.

அன்பன்
மது.

Comments