கழுகுமலை 💜 #வெட்டுவான்கோவில்

வழக்குரைஞர், நடிகர் வள்ளிநாயகம் அவர்களின் முகநூல் பக்கத்தில்  இருந்து


வள்ளிநாயகம் சுட்கி
11 மணி நேரம் ·
#கழுகுமலை 💜
#வெட்டுவான்கோவில்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோவில்பட்டி, சாத்தூர், இங்க இருக்க மக்களுக்கெல்லாம் ஒரு இனிப்பான சேதியும் மத்த மாவட்டத்துகாரனுக்கு சாதாரன சேதி ஒன்னும் கொண்டு வந்திருக்கேன். இப்ப பள்ளிகூடம் லீவு விட்டு புள்ள குட்டிங்களாம் உங்க உசுற வாங்கிட்டு கெடக்கும்னு தெரியும். கரெக்டா திருநெல்வேலியில இருந்து ஒரு மணி நேரம் தான் ட்ராவல் நம்ம கழுகுமலை இருக்கு. உங்க வாழ்க்கையிலயே பாக்காத ஒரு அருமையான வரலாற்று இடம். ஒரு மலையிலயே குடைந்து சமணர்கள் சமண கோயிலை கட்டி வச்சிருக்காங்க.


மிஞ்சி போனா ஒரு ஒரு மணி நேரம் ட்ராவல் ஆனா ஒரு நாள் கன்பார்ம் என்ஞாய்மென்ட்க்கு நான் கியாரண்டி. தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்க்கு கீழ செயல் பட்டு வருது, இந்த மலையில இருக்க கோயில சுத்தி பாக்க பத்து பைசா கூட டோக்கன் கிடையாது என்பது கூடுதல் சந்தோஷம்.

உண்மையாவே சமணர்கள் புத்கர்களோட சிற்பங்கள் எல்லாம் ரொம்ப அற்புதமா இருக்கு. உங்களுக்கும் என்ஜாய்மென்ட் ஆச்சி புள்ளைங்களுக்கும் வரலாறு பத்தின அறிவ கொடுத்த மாதிரி ஆச்சி, ஒவ்வொரு சிற்பமும் தனி தனி கல்லில் செதுக்காமல் மலையிலேயே செஞ்சி வச்சிருக்காங்க அதான் சிறப்பே. நானே பெரிய ஊர் சுத்தி கழுத என் கண்ணுல கூட இம்புட்டு நாள் மாட்டல, அதான் உடனே உங்ககிட்ட சேர் பன்றேன்.

குடும்பத்தோட தாரளமா போகலாம் பாதுகாப்புக்கு பிரச்சனை இல்ல, காதலர்கள் கூட போகலாம் காதலை வளர்க்க நல்ல இடம் கூட, நண்பர்கள் கூட போனா செம என்ஜாய்மென்ட் பண்ணலாம், மலை ஏறும் போது குடிக்காம இருந்து இன்னும் சிறப்பு, சரக்கு பாட்டில மேல கொண்டு போகாம இருந்தா அத விட சிறப்பு, உங்கல பாத்து குடும்பத்தோட சந்தோஷமா என்ஜாய் பண்ண வந்தவன் வருத்தப்படுவான். அது உங்களுக்கு இப்ப தெரியாது நீங்க எங்கயாவது குடும்பத்தோட போகும் போது இப்டி அனுபவம் கிடைக்கும் போது தெரியும். அதனால குடிச்சிட்டு மலையும் ஏற வேணாம். அது உங்களுக்கும் உங்கல சுத்தி இருக்குறவங்களுக்கும் கேடு.

அதேபோல கழுகுமலை மற்றும் அதுக்கு கீழ ஒரு பெரிய கோயிலும் உள்ளது. அதும் நல்லாயிருக்கு. மொத்த ஏரியாவும் நல்லாயிருக்கு. சாப்பிடுற பொருட்கள் விலைகள் கம்மி தான். ஒரு டீ 6 ரூவா 7 ரூவா தான். அதனால குறைந்த செலவில் ஒருநாள் டூர் போட சிறந்த இடம் நம்ம கழுகுமலை.

குறிப்பு: போகும் போது தண்ணீர் கேன் ஒன்னு எடுத்து போட்டுக்கோங்க, மலையின் மேல் குடிக்க தண்ணீர் கிடையாது, குழந்தைங்கள கூட்டிட்டு போனா ஆளுக்கொரு வாட்டர்கேன்ல தண்ணி கொண்டு போய்டுங்க. முடிஞ்சி வீட்ல சமைச்சி மேல எடுத்திட்டு போய் குடும்பத்தோடயோ இல்ல நண்பர்களோட வட்டமா உட்கார்ந்து சாப்பிட்டு பாருங்கயா, வாழ்க்கையில வேற என்ன சந்தோஷம் வேணும் இது போல அமையனும்னு தோனும். நன்றி நமக்கும்.
Comments