மரபு நடை 2019

மலரும் நினைவு பதிவு 1
ஒரு நல்ல நாளில் இளவல் மணிகண்டன் அழைத்து அண்ணே மரபு நடை புதுகையின் பொறுப்பாளர் நீங்கள் இருவரும்தான் புதுகை செல்வா அண்ணனுடன் இணைந்து செய்யுங்க என்றார்.

மாதம் ஒரு நிகழ்வு என்று செய்துவிடத்தான் ஆசை. ஆனால் இதுவரை மூன்று மரபு நடை பயணங்களை மட்டுமே ஏற்பாடு செய்ய முடிந்திருக்கிறது.


 இவ்வாண்டும் இதேபோல திடுமென ஒரு நாள் அண்ணே மரபுநடை போகிறோம் அமைப்புக் குழு விவாதம் இருக்கு வா என்று அழைக்கவே கூட்டத்திற்கு சென்றேன்.

மேமாதத்தில் ஒரு நாள் புதுகையின் சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டையில் துவங்கி இரும்பு உருக்கு ஆலைகளை பார்த்துவிட்டு, நேரே கண்ணனூர் கோவில் செல்வதாக திட்டம். கண்ணனூர் கோவில் செல்லும் வழியில் ஏழாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நெடுங்கற்களை பார்த்துவிடுவது என்றும் திட்டம். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மலைக்கோவில் வழியே பூலாங்குறிச்சி பிரமாண்டக் கல்வெட்டைப் பார்த்துவிட்டு பொன்னமரவதியில் இருக்கும் சிறு கற்றளி ஒன்றைப் பார்ப்பதும் பின்னர் அங்கிருந்து கொடும்பாளூர் சென்று குடிமியான்மலை செல்வதும் திட்டம்.

புதுகையை அறிந்தவர்களுக்கு இந்த திட்டத்தில் இருக்கும் சவால் புரியும். மாவட்டத்தின் கிழக்கே துவங்கி தெற்கு எல்லைக்கு சென்று மீண்டும் மேற்கு எல்லைக்கு சென்று திரும்பும் சவால்.

மாபெரும் சவால் இது.

புதுகை செல்வா தோழர் அரசுப் பள்ளி பாதுகாப்பு இயக்கத்தை செய்பவர். இது இல்லாமல் நண்பன் அறக்கட்டளை மூலம் ஏப்பு நோய் வந்த குழந்தைகளுக்கு சிறப்பு முகாம், கஜா நிவாரணம் என பல்வேறு சமூகப் பணிகளில் முழு நேரமும், குறைந்த நேரம் குடும்பத் தலைவராகவும், அதைவிட குறைந்த நேரம் வருவாய் ஈட்டும் பணிகளையும் செய்பவர். ஏதோ தங்கை புண்ணியத்தில் (தங்கச்சி வீடு வீட்டு முறை குழம்புகள் என்ற கடையின் மூலம்) குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.


பல கட்டங்களில் கூட்டங்கள் நடந்தன. பொறுப்பாளர்களில் ஒருவரான இயற்கை மணிகண்டன் ஒருமுறை எல்லா தொல்லியல் இடங்களுக்கும் நாமே ஒருமுறை சென்றுவந்து நேரத்தை திட்டமிட்டால்தான் சரி என்று சொல்ல களப் பயணங்கள் இரண்டுமுறை திட்டமிடப்பட்டன, செயல்படுத்தப்பட்டன.

புதுகையின் மூத்த தொல்லியல் அறிஞர் திரு ராஜ முகமது, திரு முத்தழகன் அவர்களும் கரம் கோர்க்க குழுவிற்கு தெம்பு வந்தது.
புதுகை மரபு நடை 2019 மே heritage walk Pudukkottai 2019




புதுகை மரபு நடை 2019 மே heritage walk Pudukkottai 2019

புதுகை மரபு நடை 2019 மே heritage walk Pudukkottai 2019
Add caption

புதுகை மரபு நடை 2019 மே heritage walk Pudukkottai 2019
Add caption

புதுகை மரபு நடை 2019 மே heritage walk Pudukkottai 2019
சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் உயர்திரு சாமி சத்யமூர்த்தி அவர்கள் நிகழ்வு பொறுப்பாளர்களையும், சிறப்பு அழைப்பாளர்களையும் சிறப்பித்த பொழுது 

புதுகையின் புகழ்வாய்ந்த ஆர்.எம்.ஜே.கே பால் நிறுவனத்தில் பங்கேற்பாளர்களுக்கு வழங்க மோர் கொடையாகப் பெறப்பட்டது.

இப்படி பல்வேறு முன்னேற்பாடுகளுக்கு எங்கள் முன் இருந்த மாபெரும் சவால் பங்கேற்பாளர்களை கண்டறிவது! தேதியை முடிவு செய்துவிட்டு நகரின் புகழ்வாய்ந்த கல்வி நிறுவனமான வைரம்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் வாகன உதவியைக் கோரிய பொழுது தாளாளர்களில் ஒருவரான வில்சன் ஆனந்த் அவர்கள் உதவினார்.

புதுகை மரபு நடை 2019, மே heritage walk Pudukkottai 2019
பொற்பனைக்கோட்டையில் புரவலர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் 

பிரச்னை என்னவென்றால் பங்கேற்பாளர்கள் எத்துனைபேர் என்று உறுதியாக நிலையில் ஒரு பேருந்தை மட்டுமே கேட்டோம்.

அப்போதே இயற்கை மணி நம்ம ஆட்களுக்கு ரிசர்வ் செய்யும் பழக்கமெல்லாம் கிடையாது ஆனால் நீங்கள் பேருந்தைக் கேட்டது தவறு என்றார்.

ஏன் என்றபொழுது ஒரே பேருந்து நம் திட்டத்திற்கு போதாது என்றார். பதிவு செய்து பணம் செலுத்திய பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை பத்தைக்கூட தொடவில்லை.

ஒருவழியாக நிகழ்வைத் துவங்குவோம் என்றபொழுது பேருந்தின் அத்துணை இருக்கைகளும் நிரம்பி இன்னொரு வேன் தேவைப்பட்டது.

மீண்டும் திரு.வில்சன் ஆனந்த் அவர்களை கேட்க விருப்பம் இல்லை. ஒரு வேன் அமர்த்திக் கொண்டோம். (அதற்கு நிகழ்ந்த சுவாரஸ்யமான அனுபவங்கள், மனிதர்களின் இயங்கரசியல் குறித்த புரிதல்கள் ஒரு சிறுகதை எழுதுமளவிற்கு சுவையானவை)
புகைப்பட உதவி கண்ணன் - திருக்கட்டளை கோவிலில் 

திருக்கட்டளை கோவில் வளாகத்தில் பங்கேற்பாளர்கள்

முகநூல் வழியே பயணத்தை அறிந்த சென்னை நண்பர் ஒருவர் தன் மகன் சரவணன் புகழ்மணியை அனுப்பிவைத்தார். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு இளவல் இளம் கதிரின் வங்கிக் கணக்கு பயன்பட்டது.

குழுவின் பயணம் திட்டமிட்டபடி துவங்கி முதல் நிறுத்தமான பொற்பனைக் கோட்டையை அடைந்தது. மதில் சுவரில் ஏற இயலாத வண்ணம் இருந்த முட்களை முதல் நாளே இயற்கை மணி தன்னுடைய புதல்வனோடு வெட்டி சீர் செய்திருந்தார்.

தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து வந்த பங்கேற்பாளர்கள் புதுகையின் தொல்லியல் அடையாளம் ஒன்றை பாதம் தேய நடந்து பார்த்தார்கள்.


கோட்டையின் மிக பரந்த உட்பரப்பை தவிர்த்துவிட்டு இரும்பு தாது உருக்கிய உள்ளடங்கிய பகுதி ஒன்றிற்கு சென்றோம். இதற்கு நடுவே குழுவினர்க்கு காலை உணவை வழங்கிய அய்யா மருத்துவர் ராமதாஸ் (புதுகையின் புகழ்பெற்ற சிறார் நல மருத்துவர்) களத்திற்கு வந்து சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி, புதுகையின் கல்வெட்டுகளின் நடமாடும் தகவல் சுரங்கம் அய்யா கரு.ராஜந்திரன் அவர்களிடம் ஆசி பெற்றார்.

இங்கே பூசணி பானம் ஒன்று வழங்கப்பட்டது, இயற்கை மணியின் ஏற்பாட்டில்.

கோட்டையின் தெற்கே இருக்கும் இரும்பு உருக்கைச் செய்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு திருக்கட்டளை கற்றளிக்கு சென்றோம்.

தொல்லியல் மணிகண்டனால் அடையாளப்படுத்தப்பட்ட இரும்பு உருக்கு ஆலைகள்

இங்கே காலை உணவை முடித்துவிட்டு, கண்ணனூர் நோக்கி தொடர்ந்தோம்.

சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் இங்கே அரங்கேறின. புதுகையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருக்கட்டளை கோவில் காலத்தில் பிற்பட்ட கோவில் என்றும் அதனால்தான் பள்ளத்துக்குள் கிடப்பதாகவகும் சொன்னார். ங்கே என்று விழிப்பதைத்தவிர வேறு நல்ல பதிலை அவருக்குச் சொல்லிவிட முடியுமா என்ன!

கண்ணனூர் செல்லும் வழியில் இருந்த எழாயிரமாண்டு பழமையான மென்கிர்களை (நெடுங்கற்கள்) கண்டுவிட்டு கண்ணனூர் கற்றளியை அடைந்தோம்.
தொல்லியல் சின்னம் ஒன்றிற்கு அன்பு மருமகள் இலக்கியாவின் முத்தம்

மாதவன் என்கிற பையனிடம் நொங்கு கொண்டுவரச் சொல்லியிருந்தோம். காலை ஆலைபேசியில் பேசியபொழுது வருகிறேன் என்றான். களத்தில் ஆளைக் காணோம்!

நொங்குக்கு பதில் அங்கே இருந்த ஐஸ் வண்டி பலரின் ஆபத்பாந்தவனாக இருந்தது.
கண்ணனூர் கற்றளியில் குழுவினர்


ஒருவழியாக கிளம்பி ராங்கியம் சென்று ஒரு கேன் மோரை தூக்கி வண்டியில் போட்டுகொண்டு பூலங்குறிச்சி நோக்கி பயணித்தோம். நடுவில் வந்த மலைக்கோவிலை நேரம் கருதி தவிர்த்தோம்.

பூலங்குறிச்சி கல்வெட்டு பராந்தகனின் கல்வெட்டு, இந்தியாவின் மிகப் பரந்த பரப்பில் இருக்கும் கல்வெட்டு இது. இன்று கேட்பார் இல்லாமல் கிடக்கிறது.

இந்தியாவின் மிகப் பரந்த கல்வெட்டை பார்வையிட்ட பொழுது


நம் தமிழ்பற்றெல்லாம் புலனத்திலும், முகநூலிலும் இற்றை இடுவதில்தான் இருக்கிறது. தொல்லியல் சின்னங்களை சிதைப்பதில் நம்மவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார்கள். 

பிறகு அங்கிருந்து புறப்பட்டு பொன்னமராவதியைக் கடந்து ஏனாதி சென்று மிகச் சிறிய கற்றளியை கண்டுவிட்டு அங்கேயே உணவருந்தினோம்.
ஏனாதி கற்றளி 

பிறகு அங்கிருந்து புறப்பட்டு கொடும்பாளூர் பயணம் செய்தோம். மதுரை திருச்சி நெடுஞ்சாலையைப் பிடித்து பயணித்து கொடும்பாளூர், மூவர் கோவில்.

இந்த வளாகம் அவ்வளவு அருமையாக இருந்தது. தொல்லியல் சின்னங்கள் கண்ணுக்கு விருந்து என்றால், இருந்த வளாகம் (பள்ளத்துக்குள்தான் கிடக்கிறது, காலை திருக்கட்டளையில் பேசிய நண்பர் புதுகை திரும்பிய பொழுது விடைபெற்றுவிட்டார்), அதன் பராமரிக்கப்பட்ட பரந்த புல்வெளி வாவ். ஒரு இலக்கியக் கூட்டத்தையே நடத்தலாம்.


மூவர் கோவில் கொடும்பாளூர் 

பிறகு அங்கிருந்து புறப்பட்டு குடுமியான்மலை வந்து இசைக்கல்வெட்டுகளைப் பார்வையிட்டு புதுகை வந்தடைந்தோம்.

காலை ஆறுமணிக்கு துவங்கிய பயணம் மாலை எட்டு மணிக்கு நிறைவுற்றது.

சவால்களை எழுப்பி
அவற்றை எதிர்கொண்டு
இன்னும் நேர்த்தியாக செய்வது எப்படி என்று புரிந்துகொண்ட நிகழ்வு இது.

நிகழ்வின் அமைப்புக் குழு

மங்கனூர் மணிகண்டன், நிறுவனர் புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம்.

கரு.ராஜேந்திரன், தலைவர் புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம்.

கஸ்தூரி ரெங்கன், ஒருங்கிணைப்பாளர் மரபு நடை
புதுகை செல்வா, ஒருங்கிணைப்பாளர் மரபு நடை

இயற்கை மணிகண்டன், பொறுப்பாளர்
மாதவன், யாஊயாகே
ஜான்சி பங்கேற்பாளாராக வந்து பொறுப்பெடுத்துக் கொண்டு செயல்பட்டவர்

 நன்றிக்குறியோர்

புரவலர்கள்
மருத்துவர் ராம்தாஸ்
வில்சன் ஆனந்த், தாளாளர் வைரம் பள்ளி
உரிமையாளர், ஆர்.எம்.ஜே.கே பால் நிறுவனம்

சேவையாளர்கள்
பேருந்துப் பொறுப்பாளர் மற்றும் ஓட்டுனர்கள்.
வேன் ஓட்டுனர்
மா.மு கண்ணன் புகைப்படக்காரர், மக்கள் பாதை பொறுப்பளார், பத்திரிக்கையாளர்
பிரவீன் ஒளிப்பதிவாளர், மக்கள் பாதை

நிகழ்வின் பிற படங்கள்
























மக்கள் பாதை

வைரம் பள்ளியின் பேருந்து ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்ட பொழுது - மணிகண்டன் மற்றும் சுகவன முருகன் அவர்கள் 
எமது குழுவை நன்கு புரிந்து கொள்ளவும், அவர்களின் திறன்களை அறியவும் இயன்றதுதான் இந்த பயணத்தின் அனுபவம் தந்த கொடை.

Comments

  1. அருமையான பதிவு

    இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அற்புதமான பயணம் மது. மரபு நடை நல்ல விஷயம். இது போன்ற நிகழ்வுகளில் பங்குபெற முடியாதது மனதிற்கு வருத்தம் தான். சூழல் அப்படி!

    தொடரட்டும் உங்கள் பயணங்கள். மரபு நடை பயணத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. பயணச்சித்தருக்கு ஒரு, சிறப்பு பயணத்தை ஏற்பாடு செய்தால் பேn ச்சு

      Delete
  3. படங்களும் பதிவும் அருமை
    மரபு நடை தொடரட்டும்

    ReplyDelete

Post a Comment

வருக வருக