ரோட்டரி சமுக பொருளாதார மேம்பாட்டுப் பயிற்சி

மலரும் நினைவுப் பதிவு - 3


ரோட்டரி நிறுவனம் ஆண்டுதோறும் செயல்படுத்திவரும் முக்கியமானத் திட்டங்களில் ஒன்று சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பயிற்சி. 

இளையோர் மேம்பாட்டுக்கான பொறுப்புவாய்ந்த திட்டம் இது. திட்டத்தின் பொறுப்பை ரோட்டரியன் பிரபுவிடம் வழங்கியிருந்தார் தலைவர் சத்யமூர்த்தி. 

நிகழ்வின் செய்திக் குறிப்பு 

புதுக்கோட்டை செப் 17

புதுக்கோட்டை கிங் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தசவதார திட்டத்தின் மூன்றாம் திட்டமான நம்மவர் திட்டத்தின் மூலம் 120 இளையோருக்கு பொருளாதார மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது.

நிகழ்வின் இயக்குநர் ரொட்டேரியன் பிரபு, தலைவர் சத்தியமூர்த்தி செயலர் கணேஷ் குமார் மாவட்டம் 3000தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஆனந்த் மாவட்ட துணை ஆளுநர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் கோபால் மற்றும் ரோட்டேரியன் ஜெயம் செல்வா நிகழ்வைத் திறம்பட ஒருங்கிணைத்தனர்.

நிகழ்வின் வழிகாட்டிகளாக லீட் வங்கியின் வீரப்பன் மற்றும் டிக் நிறுவனத்தின் பொது மேளாளர் திரிபுரசுந்தரி அவர்களும் கலந்து கொண்டு மாவட்டத்தின் எட்டு கல்லூரிகளின் மாணவர்களுக்கு தொழில் முனைவுப் பயிற்சியை வழங்கினர்.

மிக முக்கியமான செய்தியாக டிக் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் திருமிகு திரிபுர சுந்தரி தொழிற் கடன் வாய்ப்புகள் குறித்துக் கூறினார்.  எட்டாம் வகுப்பு படித்திருந்தாலே டிக் நிதியளிக்கத் தயாராக இருக்கிறது என்றார். 

அடுத்து பேச வந்த லீட் வங்கியின் பயிற்சியாளர் வீரப்பன் அவர்கள் மிக நீண்ட தகவல் செறிவுமிக்க உரையை தந்தார். 

தொழிற் கடன் தாண்டியும் இவர் சொன்ன பல விசயங்கள் வியப்பு. குறிப்பாக ருப்பே கார்ட் குறித்து சொன்ன தகவல் அதி முக்கியமானது.

ருப்பே கார்ட் 

ருப்பே கார்ட் முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்தில் இயங்கும் கார்ட் ஆகும். எல்லா வங்கிகளும் ருப்பே கார்ட் வழங்கும் திறனோடு இருந்தாலும், மாஸ்டர் கார்ட், வீசா கார்ட் என்று வாடிக்கையாளரிடம் கொடுத்துவிடுகின்றன. 

இரண்டு விளைவுகளை இது ஏற்படுத்துகிறது, முதலாவது வாடிக்கையாளரின் தகவல் வீசா என்றால் அமெரிக்க சர்வர்களிலும், மாஸ்டர் கார்ட் என்றால் லண்டன் சர்வர்களிலும் சேமிக்கப்படுவதால் உலகின் ஏதொ ஒரு மூலையில் இருந்து கார்ட் திருட்டை செய்ய வாய்ப்பு உள்ளது. 

இரண்டாவது விளைவு இந்த கார்டுகளை நாம் பயன்படுத்தும் பொழுது ஆண்டுதோறும் அமெரிக்கவிற்கும், லண்டனுக்கும் ராயல்டி கட்டிக்கொண்டிருக்கிறோம். 

இதற்கு மாறாக இந்தியத் தொழில் நுட்பத்தில் இயங்கும் ருப்பே தொழில் நுட்ப அடிபடையில் இயங்கும் கார்டை கேட்டுப் பெரும்பொழுது நம் தகவல் எதுவும் அந்நிய நாட்டின் சர்வர்களில் சேமிக்கப்படுவதில்லை.

அதே போல அந்நியச் செலவாணியும் சேமிக்கப்படும். எனவே நாம் ருப்பே கார்டுக்கு மாறுவது அவசியம் என்றார். 

முதல் வேலையாக இருக்கும் வங்கி பண பரிவர்த்தனை அட்டைகள் அத்துணையும் ருப்பே அடிப்படையில் செயல்படும் கார்டுகளாக 
மாற்றிக் கொள்ளவேண்டும் இல்லையா? 

நிகழ்வில் பங்கு பெற்ற கல்லூரிகளில் பட்டியல்
பாரதி கலை அறிவியல் கல்லூரி, வெங்கடேஷ்வரா பாலி டெக்னிக், 
செந்துரான் பொறியியல் கல்லூரி, மாஹாத்மா கல்லூரி, சுதர்சன் கலை அறிவியல், ஷண்முகநாதன் பொறியியல் கல்லூரி, செந்தூரன் நர்ஸிங் கல்லூரி, 

புதுகை கிங்க்டவுன் ரோட்டரி சங்கம் நிகழ்த்திக்காட்டிய பொருள்மிக்க இளையோர் வழிகாட்டல் நிகழ்வு இது. 

நானும் கலந்து கொண்டதில் மகிழ்வு. 
(அடியேன் ஒரு தொழில் முனைவு ஊக்குவிப்பு பயிற்சியாளர் என்பதும் ஒரு காரணம்) 

நிகழ்வில் நானுமே கொஞ்சம் பேசினேன். நிகழ்வு முடிந்தவுடன் செயலர்.கணேஷ் நல்லா பேசினீங்க என்றார். தலைவர் நான் மிஸ் செய்த சில முக்கியமான விசயங்களை சொன்னார். மிஸ் செய்யாமல் பேசியிருக்க வேண்டிய பாயிண்டுகள்தாம் அவை. இனி மிஸ் ஆகாது என்று சொன்னேன். சிரித்துக் கொண்டார். 

மாணவர்களுக்கு குறிப்பேடும், பேனாவும் வழங்கிய சிங்கப்பூர் சில்க் மால்ஸ்க்கும், சிற்றுண்டி வழங்கிய புதுகையின் நல்ல நிகழ்வுகளில் ATM என்று அழைக்கப்படுகிற எங்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அண்ணன் சீனு சின்னப்பா அவர்களுக்கும் நன்றிகள். நிகழ்வில் பங்குபெற்ற அனைவர்க்கும் தரமான நீர்க் குடுவை ஒன்றை கிரீன் பாலி நிறுவனரும் செயலருமான கணேஷ் அவர்கள் வழங்கினார்.

நினைவில் நிற்கும் ஒரு நிகழ்வை நேர்த்தியாக நடத்திக் காட்டிய இளம் தொழில் அதிபர் பிரபுவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.Comments

  1. நிகழ்வுப் பகிர்வு சிறப்பு

    ReplyDelete
  2. நல்லதொரு நிகழ்வு. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக