வாசிப்பு என்பது ஒரு தனித்த போதை, அது தரும் உணர்வை வார்த்தைகளில் அவ்வளவு எளிதாக கடத்திவிடமுடியாது.
நிகில் நிறுவனப் பயிற்சிகளுக்கு மதுரைப் பக்கம் போகும் பொழுது ஒலிப்புத்தகங்களை கேட்டுக்கொண்டே போவது வழக்கம். ஏ.கே பார்ட்டி செவன் போல ஆங்கில வார்த்தைகளைத் துப்பவேண்டும் என்கிற என்னுடைய முடிவு எனக்கு மாணவர்கள் மத்தியில் ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஒரு மாதம் ஆர்வத்துடன் பயிற்சி செய்தால் எல்லோரும் மிகச் சரியான ஆங்கிலத்தை பேசலாம் என்பதே உண்மை, விரைவாக படபடவென்று பேசினால் போதும் என்ற என் நிலைப்பாட்டை மணல் மேட்டை கடலலை கரைப்பது போல கரைத்தவை நான் இப்படிக் கேட்ட ஆங்கில ஒலிப் புத்தகங்கள்தான். ஸ்டாப் வொரியிங் ஸ்டார்ட் லிவிங், தி எய்த் ஹாபிட் போன்ற புத்தகங்களை நான் கேட்டு அயர்ந்து போய் என் ஆங்கிலம் பேசும் வேகத்தை மட்டுப்படுத்தி ஒக்கிட்டதற்கு நிகில் பயணங்கள்தான் காரணம்.
பின்னர் மடிக்கணினி வந்ததற்கு பிறகு ஒரு இற்றையை தட்டுவது, முகநூலில் இற்றை புரட்சி செய்வது என்று மாறிவிட்டன பயண நேரங்கள்.
சில ஆண்டுகளாக நிகில் நிகழ்வுகளுக்குச் செல்வதில்லை. இந்நிலையில் நிகில் நிறுவனத்தின் அம்மா மலர்க்கொடி நாகலிங்கம் அவர்கள் இயற்கையோடு கலந்தார் என்று பொழுது இறுதியாக அவர்களை ஒருமுறை பார்த்துவரலாம் என்று புறப்பட்டேன்.
மடிகணினியில் மின்சக்தியில்லை, ஜியோபியை காணோம், இரண்டரை மணிநேர பயணத்தை எப்படிக் கடப்பது. அவரசரத்தில் வீட்டில் குவித்து வைத்திருக்கும் நூற்களில் இரண்டை எடுத்துக்கொண்டு வண்டியேறினேன்.
வண்டி நகரத்துவங்க அட்டையைப் புரட்டினேன் அன்பளிப்பு நிகில் அறக்கட்டளை என்ற முத்திரை இருக்க ஒரு நீண்ட பெருமூச்சு.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகில் நிகழ்வு ஒன்றில் அப்பா நாகலிங்கம் எனக்குக் கொடுத்த நூல் இது. நான் அப்புறம் படிக்கலாம் என்று வாங்கி ஓரமாக வைத்திருந்தேன்.
ஆசிரியர்கள் மிகுந்த அழுத்தத்திற்கும் சமூகப் புறக்கணிப்பிற்கும் ஆளாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் பெரும் ஆளுமைகள் தங்கள் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
பாரதி புத்தகாலையம் வெளியீடாக திருச்சி துளசிதாசன் அவர்களின் முயற்சியில் வெளிவந்திருக்கிறது.
இலக்கிய உலகின் டான்கள், ஞானி போன்ற அசத்தலான கட்டுரை ஆசிரியர்கள், குடிமைப்பணியில் முத்திரை பதித்திருக்கும் இறையன்பு, கல்வி அலுவலராக இருந்த நாவலாசிரியர் பொன்நீலன் என பெரும் பெரும் ஆளுமைகளின் ஆசிரியர்கள் குறித்த நினைவு இந்த நூல்.
அசோகமித்ரனின் ஆசிரியரில் துவங்கி ஆப்ரகாம் லிங்கன் எழுதிய ஆசிரியருக்கு கடிதத்தில் நிறைவுறும் இருபது கட்டுரைகள். அப்பப்பா கட்டுரைகளா அவைகள். என்ன ஒரு உணர்வு பிரளயத்தை ஏற்படுத்துகின்றன.
விமர்சனம் குறித்து, சமூக எள்ளல் குறித்து ஆசிரியர்கள் கழிவிரக்கம் கொள்ளக்கூடாது என்று முதல் கட்டுரையிலேயே அசோகமித்திரன் ஒரு ஹெலி ஷாட்.
அடுத்து பிரபஞ்சன் தன்னுடைய உடை நேர்த்திக்கு ஒரு ஆசிரியர், தமிழ் செழுமைக்கு ஒரு ஆசிரியர் என்று சொல்கிறார்.
இந்த இடத்தில் இன்னொரு விசயத்தை சொல்ல்விடுவது அவசியம். கட்டுரையாளர்கள் தனித்த எழுத்துப் பாணியும், சொற்பயன்படும் செம ட்ரீட் நமக்கு.
சொல் வளம், ரசனை வேறுபட்ட ஆளுமைகள் என இந்த நூல் ஒரு உயர் ரக காக்டைல்!
இந்த் பிரபஞ்ச பிசாசு இருக்கிறாரே தன் கணித ஆசிரியர் குறித்து என்ன சொல்கிறார் பாருங்கள்
// நான் ரெஜிஸ் மாணவன். அற்புதமான ஆசிரியர் அவர். எந்தக் கல்லுக்கும் குன்றுக்கும் பாறைக்கும் கணக்குப் புகட்டுவதில் நிபுணர் அவர் என்று என் பெற்றோர்கள் பேசிக் கொள்வார்கள். அவரே என்னிடம் தோற்றார்//
என்ன வாக்கியம் அது கல்லுக்கும் குன்றுக்கும் பாறைக்கும் கணக்கு புகட்டும் ஆசிரியர் ...வாவ் அல்லவா ...
மயில் இறகு குட்டிபோடுவது குறித்த நான்கு பாராக்கள் உலகத்தரம், உச்சகட்டம்.
மிஸ் யூ பிரபஞ்ச பிசாசு என்று சொல்லிக்கொண்டேன். இவரது கட்டுரையை படிக்கும் பொழுது பலமுறை புத்தகத்தை கீழே வைத்துவிட்டு இவரது வாக்கியங்களை சிலாகித்துகொண்டே வந்தேன். அருகே இருந்தவர் ரசனைக்காரர் என்பதால் பிரச்சனை இல்லை.
பொன்னீலன் கையெடுத்து வணங்கிய ஆசிரியையின் கதையை வகுப்பில் பகிர்ந்த பொழுது சார் இது அப்படியே ராட்சசி படத்தில் இருக்கு சார் என்றார்கள் பிள்ளைகள். ஒ!
ஒருவேளை மகாலெட்சுமிதான் அந்த ராட்சசியோ?
காஸ் என்கிற கணித நிபுணர், கதை சொல்லச் சொன்ன ஆசிரியர், கணக்கு வரல போய் உன் அப்பனாட்டம் பனையேறி கள் இறக்கு என்று சொன்ன ஆசிரியர், ஒன்றுக்கும் உதவாத மாணவர்களுக்கு யாப்பு இலக்கணம் சொல்லித்தந்து அவர்களை பெரும் எழுத்து ஆளுமைகளாக்கிய தமிழ் ஆசிரியர்கள்.
குடைக்குள் வானத்தையும் நட்சத்திரத்தையும் காட்டிய ஆசிரியை, ஒரு பந்தையும் சிம்னி விளக்கையும் வைத்துக் கொண்டு சூரிய கிரகணத்தை நடத்திய ஆசிரியர் என நம்மை சிலிர்க்க வைக்க, சிந்திக்க வைக்க மேலும் சரியான திசையில் செயல்படவைக்கும் கலங்கரை விளக்கு இந்த நூல்.
பேரா மாடசாமி ஓவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பாடங்களை தயார் செய்வது வழக்கம் என்கிறார். மனிதர் எப்படி ஒரு அற்புத ஆசிரியராக இருந்தார் என்பதற்கான காரணம் புரிந்தது.
கீரனூர் ஜாகீர் ராஜாவை உருவாக்கிய தமிழாசிரியர் குறித்த கட்டுரை உச்கட்ட சோகம். ஜாகீரை ஆரஞ்சு மணக்கும் பசியில் பார்த்தது. இனி தேடிப்போய் பார்க்க வேண்டும்.
ஊதியம் பெரும் ஆசிரியர்கள் படிக்கவேண்டாம், தன் பணிக்கு எந்த ஹைகோர்ட்டானும் ஊதியம் தர முடியாது என்று நம்பும் செயல்படும் ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல்.
இளவல் பிரேமிடம் தேநீர் அருந்த வாரியா என்ற பொழுது சார் நான் உங்கள ஒரு கடைக்கு கூட்டிப் போறேன் என்று இரவு ஒன்பதரை வாக்கில் நீதிமன்றத்திற்கு தெற்கே புதுக்கோட்டையின் பழைய கோட்டைச்சுவர் அருகே இருக்கும் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார்.
புதிய சுவையில் ஒரு எலுமிச்சை தேனீர். சில நாட்களுக்கு பின்னர் இணையரை அழைத்துக் கொண்டு அவர் ஊர்தியில் இருக்க அந்த தேநீரை வாங்கிவந்து கொடுத்தேன். ரசித்தார். ஒரு தேநீரை வார்த்தையில் வர்ணிப்பதை விட பருகி ரசிப்பதே சரி. அதே போல இந்த நூலையும் வாசித்து ரசிப்பதே சரி.
அவசியம் படிங்க.
நல்லதொரு அறிமுகம் மது. நன்றி.
ReplyDeleteநன்றி அய்யா
Deleteசமீபத்தில் ஸ்ரீரெங்கம் சென்றிருந்தேன்
திகைக்க வைக்கும் அளவிற்கு பெரும் கோவில்
உங்கள் நினைவு வந்தது
நிறைய படித்தவிட்டு மீண்டும் செல்ல வேண்டும்
அருமையான நூல் மதிப்பீடு. விரைவில் வாங்கி வாசிப்பேன்.
ReplyDeleteநன்றி பதிவாளரே
DeleteWow
ReplyDeleteநன்றி மலை
Deleteஉங்கள் பதிவே ரசிக்க வைக்கிறது. உங்கள் பாணியில் உங்கள் ரசனையில். மிகவும் ரசித்தேன். ஒரு புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் பதிவு இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு இந்தப் பதிவே உதாரணம். மகிழ்ச்சி அண்ணா.
ReplyDeleteநன்றி முன்னணிப் பதிவரே
DeleteYour reviews are always unique, Anna.
ReplyDeleteநன்றி க்ரேஸ் ஆனால் மருமகன்கள் படிக்கும் வேகத்தை பார்த்தால்
Deleteபெருமையாக இருக்கு
இருவருக்கும் வாழ்த்து சொன்னேன் என்று சொல்லுங்க
மாப்பிள்ளையை கேட்டேன் என்று சொல்லுங்கள்
Happy New Year
ReplyDeleteஅருமை
www.nattumarunthu.com
nattu marunthu kadai online
nattu marunthu online