#PBF2020
#புத்தகக்கோட்டை2020
நாள் ஒன்று
சிறப்பு விருந்தினர் மருத்துவர் சிவராமன்
மருத்துவர் சிவராமன் வாழ்வுப் பாணி மாற்றத்தை உடல்நலத்தை ஆயுளை நீட்டிக்கும் செய்திகளைப் பகிர்வதில் முன்னணியில் இருப்பதை நாம் அறிவோம்.
புத்தகத் திருவிழாவின் முதல் நாள் பேச்சை கடந்த மூன்று வருடங்களாக எழுத்தாளர் எஸ்.ரா கொண்டே துவக்குவார் அண்ணன் தங்கம் மூர்த்தி. இம்முறை மருத்துவர் சிவராமன். சிவராமன் அவர்களின் பேச்சை கேட்ட கொட்டும் பணியிலும் நகரமன்ற வளாகத்தை நிறைத்துவிட்டார்கள் வாசகர்களும் ரசிகர்களும்.
பேச்சு வாழ்க்கை பாணியை மாற்றும் பேச்சாக இருந்தது ஒரு உன்னத அனுபவம்.
வழக்கம்போல லோ கிளைசிமிக் மரபு அரிசி, தானியங்கள், சிறுதானியங்கள் உணவில் சேர்ப்பதை வலியுறுத்திய அவர், ஸ்பூனில் சோற்றையும், கரண்டியில் காய்கறியையும் உண்ணும் பழக்கத்துக்கு மாறும் மனிதர்கள் நோயெதிர்ப்புதிறனோடு இருப்பார்கள் என்பதை விளக்கினார்.
தற்போது மகளிருக்கு வரும் மார்பகப் புற்றை, ஆண்களுக்கு வரும் புற்றை எதிர்ப்பதில் மரபு அரிசிகளான கருப்பு அரசியும் சிகப்பரிசியும் பெரும் பங்கு வகிப்பதைவிளக்கினார்.
உச்சகட்ட நடுக்கத்தை விளைவித்த ஒரு மருத்துவ ஆய்வு குறித்து அவர் சொன்னது ஹைலைட்.
பீகல் ட்ரான்ஸ்பிளான்ட் மூலம் குடல் வியாதிகளால் துன்புறும் மனிதர்களுக்கு ஆரோக்கியமான மனிதர்களின் குடலில் இருக்கும் பீகல் மேடீரியலை எடுத்துவைப்பதின் மூலம் அவர்கள் நலம் பெறுவதை விளக்கினார்.
பீகல் மெடீரியலில் இருக்கும் நலம் பயக்கும் பாக்டீரியாக்கள் நோயுற்ற மனிதரின் குடலை சீராக்கி நலம்பெறவைப்பதை ஆய்வுகள் உறுதி செய்திருப்பதை சொல்லிவிட்டு இந்த அதிர்ச்சி நீங்கும் முன்னர் அடுத்த வெடிகுண்டை வீசினார்.
பீகல் மெடீரியல் ட்ரான்ஸ்பிளான்ட் பெற்றோர் யாரிடம் இருந்து பீகல் கொடை பெற்றார்களோ அவர்களைப் போலவே சிந்திக்க செயல்பட ஆரம்பித்தை கண்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள் பீகல் மேடீரியலில் இருக்கும் எம் ஆர் என் ஏ மூளை புரதத்தோடு பேசி மூளையும் சீரமைப்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.
இந்த கண்டடைவு மருத்துவ உலகில் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்த இருக்கிறது. இந்த முறையை செழுமைப் படுத்தி இனி ஆட்டிச குழந்தைகளே இல்லாமல் செய்ய இருக்கிறது மருத்துவ உலகம். வாவ் இல்லையா.
ஆமா, பீகல் மெடீரியல் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?
மலம்.
புற்று நோய், சர்க்கரை நோய் வராமல் இருக்க அளவான முறையில் மரபுசார் அரிசிவகைகளை உண்பது முக்கியம், அதிக காய்கறிகள் முக்கியம் என்று சொன்னது போலவே புற்று நோய்க்கு இன்னொரு எளிய தடுப்பு முறையையும் சொன்னார் அவர்.
மணமூட்டும் பொருட்களான லவங்கம், பட்டை, இஞ்சி, புதினா போன்ற (ஸ்பைஸ்)வகைகளை ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி பயன்படுத்தும் நபர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வருவதில்லை என்கிற ஆய்வு உண்மையை சொன்னது உச்சப்பட்ட அட்டகாசம்.
இருபத்தியொரு மணமூட்டிகள் குறித்து பரத் அகர்வால் எனும் புற்றுத்தடுப்பு ஆய்வு மருத்துவர் எழுதிய ஹீலிங் ஸ்பைசஸ் நூலை குறிப்பட்ட அவர் நம் மரபு சார் உணவுகள் எவ்வளவு மகத்துவமானவை என்பதை உணரவைத்தார்.
மைதா, பேக்கரி விசயங்களை உண்ணும் ஒவ்வொருவருக்கும் பல வியாதிகளுக்கான வாசல் திறக்கப்படுகிறது என்று சொன்னார். குடலில் இருக்கும் நலம் பயக்கும் நுண்ணுயிர்களை அழித்தொழிப்பதில் ஜன்க் உணவுகள், பேக்கரி ஐட்டங்கள் மகத்தான பங்காற்றுவதை பகிர்ந்தார்.
இதே போல எப்படி ரொட்டி காய்ச்சலுக்கான உணவானது என்று விவரித்த பொழுது அவையில் சிரிப்பலை.
ஆங்கில ஆட்சியல் GGH என ஒரே ஒரு மருத்துவமனைதான் தமிழகத்தில் இருந்தது. அந்த மருத்துவமனைக்கு பின்பகுதியில் பிரிட்டிஷ் அலுவலர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள் என பெரும் திரள் யூரோப்பியர்கள்.
இவர்களுக்கு எழுப்பப் பட்டதே அந்த கவர்ன்மென்ட் ஜெனரல் ஹாஸ்பிடல், இன்றைய ராஜாஜி மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஆங்கிலயேர்களுக்கு மருந்துடன் சில பிரட் பாக்கெட்டுகள் வழங்கப்படும். அங்கே கூட்ட பெருக்க தோட்டம் பார்க்க இருந்த இந்திய தொழிலார்களுக்கும் இதுவே வழங்கப்பட, அவர்கள் அந்த பெருமை பீற்ற மெல்ல மெல்ல பேக்கரி பிரட் காய்ச்சலுக்கு மருந்தானது.
உண்மையில் காய்ச்சலுக்கு கஞ்சியும், தண்ணீரும் மட்டுமே நல்லது என்று சொன்னபொழுது ஏற்பட்ட வெட்கமும் புரிதலும் இங்கே எழுத முடியாதது.
தமிழன் என்று சொல்லடா ...
மன நோய்
காலை எழுந்தவுடன் ஒரு சின்ன மகிழ்வு உங்களைத் தழுவவில்லை எனில் நீங்கள் மன நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்ற பொது அவை அதிர்ச்சியில் உறைந்தது.
வாட்சப்பில் இருந்து வெளியே வருவதே மன நோய்க்கு நல்ல மருந்து என்றார், அவரது காதல் அனுபவங்களையும் இன்றைய வாட்சப் காதல்களையும் ஒப்பிட்டு பேசிய பொழுது அரங்கு 96 நினைவுகளில் திளைத்து.
ஒரு பேச்சாளர் தன்னுடைய அந்தரங்கவிசயங்களை பகிர்கிறபொழுது அவையோருக்கு இன்னும் நெருக்கமாகிறார் என்பதை அனுபவத்தில் உணர்ந்த தருணம் அது.
ஹாட்ஸ் ஆப் சிவராமன்.
பி.கு.
சிவராமனை வாழ்விப்பது தமிழும், தொடர்ந்த வாசிப்பும்தான் என்பதை அவையோர் உணரச் செய்ததில் இருந்தது பேச்சின் வெற்றி.
வாசிப்போம்
புதுகை புத்தகத் திருவிழாவை போற்றுவோம்.
மாவட்ட ஆட்சியர் நிகழ்வில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இந்த டாக்டர் சிவராமன் உடம்பை பார்க்கும் போது ஸ்பூனில் சோற்றையும், கரண்டியில் காய்கறியையும் சாப்பிடுபவர் மாதிரி தோன்றவில்லையே ...ஒரு வேளை ஊருக்குதான் அவர் உபதேசம் பண்ணுகிறாரோ என்னவோ?
ReplyDeleteபிரெட் - இங்கே தினம் தினம் வட இந்தியர்களுக்கு காலை உணவே அது தான்! :)
ReplyDeleteசிவராமன் அவர்களின் உரை பற்றி இங்கே பகிர்ந்ததற்கு நன்றி. விழாவில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் உங்கள் வழி சில தகவல்களைத் தெரிந்து கொள்கிறேன். நன்றி.
பகிர்விற்கு நன்றி அண்ணா.. அருமையான உரை. பீகல் மெட்டீரியல் தகவல் அதிர்ச்சியும் நம்பிக்கையும் கொடுக்கிறது. பேக்கரி பொருட்கள் கூடாது என்பதைத்தான் என் தங்கையும் (சித்த மருத்துவர்) சொல்வாள்.
ReplyDelete