பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்-சாமி கிரிஷ்

பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்-சாமி கிரிஷ்

பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
சாமி கிரிஷ்
வினாடி முள்ளளின் விசையோடு ஓடிகொண்டிருக்கும் வாழ்க்கைக்கு பழகிப்போன மனங்களை அமைதிப்படுத்தும் வல்லம. கவிதைகளுக்குண்டு. இலக்கியத்தின் இருப்பே இதற்குத்தானே. ஆனந்த விகடனில் பலமுறை கவிதைகளை வெளியான  பெருமைக்கு சொந்தக்காரர் சாமி கிருஷ். புதுகை போன்ற மாவட்டத்திலிருந்து தங்கள் இலக்கிய தரத்திற்கேற்ற உயரம் பெறாமல் இன்றும் குடத்திலிட்ட விளக்காக பலர் இருக்கும் நிலையில், சாமிக்கு ஆனந்த விகடன் கொடுத்த தளம் பெரியது. 

“அப்பாவின் வாசனை”  பீடி வாசனையை அப்பாவின் வாசனையாக எழுதி முத்தாய்ப்பாக
//கடைசிப்பீடி வாயிலிருக்க
அப்படியே இறந்துபோன அப்பா
இப்போதும் ஆவியாக அடிக்கடிவந்துபோகிறார்
யாரோ ஒருவர் உள்ளிளித்துவிடும்
புகை வழியாக //

எனும் பொழுது மனக்குளத்தில் எத்துனை கற்கள்!

//இல்லாத தேன்குளத்தை
நில்லாது தேடுவதைவிடவும்
இருக்கின்ற பூக்களை ரசிப்பதில்
தீர்ந்துபோகும் அளவிற்கு
இம்மனதைப் பழக்குவதே
இச் சிறுவாழ்வின்
பெரும் போரட்டமாயிருக்கிறது //

என வாழ்வின் விழுமியப் பாடத்தை எடுக்கும் “தேன்குளத்தை தேடும் வாழ்வு”

பால்யத்தில் அண்ணாச்சி கடையில் தவறாக கணக்கை கொடுத்து ஏமாற்றி பண்டங்கள் தின்ற குற்ற உணர்வை
// ஒரு நாள் காலைப் பொழுதொன்றில்
கடையின் ஷட்டரைத் திறக்க
முதுமையோடு
திணறிக்கொண்டிருந்த
அண்ணாச்சிக்கு உதவியதில்
எனது குற்ற உணர்வு
கொஞ்சமாய் குறைந்திருந்தது
என வோர்ல்ட்ஸ் வொர்த்தை நினைவூட்டும் “பெட்டிக்கடை அண்ணாச்சி”

கவிதை ஒப்பீடுகளால் உன்னதம் பெறுவது “காலத்தின் பொட்டலம்” என்கிற கவிதை வழியாக பால்மாடு வளர்த்த குடும்பத்தில் இன்றைய சிறுவன் ஒருவன் நெகிழிப் பையில் தேநீரை வாங்கிவருவதை கவிஞர் எப்படி பார்க்கிறார் பாருங்கள் 

// அவனது நினைவுகளில்
ஓடிக்கொண்டிருக்கிறது
அப்பா சொல்லி விளக்கியிருந்த
பால் நன்றாய் சுரந்திருக்கும் ‘
பால்மாட்டின் மடிக்கு
உவமையாய்
தேநீர் நிரம்பிய
நெகிழிப்பை பார்சல் //

வாவ் இல்லையா. பால் மடிகள் பாலிதீன் கவர்களாக மாறிப்போன வலியை’க் கூட இப்படி பகிரமுடியுமா என்ன ? வாழ்த்துகள் கவிஞருக்கு!

பெரும் புயலின் தந்த பேரிடரை பேசும் “புயலின் பாடுகள்”,
கிராமத்தின் சிறார்கள் விளையாடிக் களித்த இடத்தில், இளைஞர்கள்  உடற்பயிற்சி செய்த இடத்தில் அரசின் கோரக்கரம் ஒன்று சாராயக் கடையைத் திறப்பதை பேசும் “சொர்க்கமென்று நரகமாகும் நிகழ்வு” பேசுகிறது. 

தொகுப்பின் முதல் கவிதையிலேயே மனசை அள்ளிவிடுகிறார் சாமி.

முத்தாய்ப்பாக தொகுப்பின் ஒரு கவிதையைப் பேசி விடைபெறுவோம்

ஆட்கள் தேவை

படித்து வாங்கிய
மொத்தச் சான்றிதழ்களையும்
அடைத்து வைத்துக்கொள்ள
ஒரு கவரோஒரு ஃபைலோ
ஒரு சிருபெட்டியோ போதுமானதாகிறது.
அதை சுமந்து அலைவதற்குதான்
ஒரு நகரமோ
ஒரு நாடோ
ஒரு உலகமோ
போதவே போதவில்லை

சாமி கிருஷ்சின் இந்தத் தொகுப்பு ஒரு கவிதை கல்கண்டு பொட்டலம். மிஸ்பண்ணாம வாங்கவேண்டிய தொகுப்பு. ஆசிரியர்கள் தொகுப்பின் பல கவிதைகளை வகுப்பறைக்கு கடத்தலாம்.  கவித்துவமான முன்னட்டைப் படம் அற்புதம்.

அன்பன்
மது
பட்டாம் பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
சாமி கிரிஷ்
தேநீர் பதிப்பகம்
விலை : 90/-

Comments

 1. சிறப்பான கவிதை& கவிஞர் அறிமுகம் . வாழ்த்துகள் சாமி கிரிஷ்

  ReplyDelete
 2. //ஆனந்த விகடனில் பலமுறை கவிதைகளை வெளியிட்ட பெருமைக்கு// ஆனந்த ”விகடனில் பலமுறை கவிதைகள் வெளியான பெருமைக்கு” என்று இருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மாத்திட்டேன் நன்றி

   Delete
 3. சிறப்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நல்லதொரு கவிதைத் தொகுப்பு. அறிமுகம் செய்தமைக்கு நன்றி மது.

  பீடிப் புகையும், பாலீதின் கவராக மாறிய பால் மடிகளும் என்னமோ செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் வருகைக்கும் கருத்திற்கும்

   Delete
 5. நல்ல அறிமுகம்.

  புத்தகத்தைக் கையில் பிடித்திருக்கும் மகள்/மருமகள் க்யூட்!! நான் வளர்கிறேன் மம்மி/டாடி....என்று வளர்ந்துவிட்டாள் மருமகள்! மகிழ்/ நிறை?

  கீதா

  ReplyDelete
 6. நல்ல அறிமுகம்.

  புத்தகத்தைக் கையில் பிடித்திருக்கும் மகள்/மருமகள் க்யூட்!! நான் வளர்கிறேன் மம்மி/டாடி....என்று வளர்ந்துவிட்டாள் மருமகள்! மகிழ்/ நிறை?

  கீதா

  ReplyDelete
 7. ஒரு பட்டாம்பூச்சியின் புகைப்படப் பிரியங்களை ஒரு பட்டாம்பூச்சியே சுமந்து நிற்கையில் இதைத் தாண்டி மற்ற பதிவுகளுக்குப் போக முடியவில்லை. அதனால் பழைய பதிவாக இருப்பினும் இருக்கட்டும் எனப் படித்தேன். ஆனால் படித்த பின் கருத்திடாமல் போக முடியவில்லை. படித்த உடனே வாங்கத் தூண்டும் வகையில் எழுதியிருக்கிறீர்கள். மிகச் சிறப்பான மதிப்புரை! அதுவும் வோர்ல்ட்சுவொர்த்தை நினைவூட்டும் பெட்டிக்கடை அண்ணாச்சி என நீங்கள் வருணித்திருந்தது கவிதை நூல் பற்றிய திறனாய்வுக்குக் கவிதை நடையில் ஒரு பாராட்டு என நினைக்கத் தோன்றியது. அருமை!

  ReplyDelete

Post a Comment

வருக வருக