அட்டணக்கால்


அட்டணக்கால்
சிறுகதைகள்
சோலச்சி


எழுத்தாளர் சோலச்சியின் இருபது சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. நெகிழ வைக்கும், பதறவைக்கும், சிந்திக்கவைக்கும் சிறுகதைகள்.
தமிழகத்தின் வெளிவரும் பல்வேறு இதழ்களில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற கதைகள்.
பெரும்பாலான கதைகள் சமூக பொருளாதாரச் சிக்கலைப் பேசுகின்றன. நாம் பரபர வாழ்வுப் பாணியில் தொலைத்து விட்ட கடந்தகால கிராமத்து வாழ்வினைச் சிலாகிக்கின்றன சில.

பக்கம் பக்கமாய் சிறுகதையில் வலியவரும் காதலியை ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு மாணவனின் பொறுப்புணர்வை சொல்கிறார். தன் காதலி எழுதிய கடிதத்தைப் படித்துக்கொண்டிருக்கும் அவன் தாய் குறிப்பரிந்து படிப்பில் கவனம் செலுத்தினால்தான் பிழைக்க முடியும் என்று சொல்வதும் மறுநாள் அப்படி ஒரு கடிதமே வரவில்லை போல அவன்பள்ளிக்குப் போவதுமாக முடிகிறது கதை.

சீறிப்பாய் செவியிலடி கதை ரௌத்ரம் பழகும் இரு இளைஞர்களை கிராமமக்கள் பாதுகாப்பதை பேசுகிறது. கடைசிச் சாவு எனும் கதையில் மிக நேர்மையான கதாநாயகன், அவன் மிக அழகான குடும்பம் எப்படி குடியினால் அழிகிறது என்பதைச் சொல்லி கதையின் இறுதியில் ஒரு ஆக்ரோசம் தரும் செயலைச் சொல்லியிருக்கிறார்.

சியூக்கி போன்ற அறிவியல் புனைவுகளும், குறி போன்ற திரில்லர் வகை கதையும் தொகுப்பின் கனம் சேர்க்கின்றன.
சில கதைகளில் வரும் பெயர்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெசல் பவல்ராஜ், அப்துல் ஜலில், ஜோசப் பென்சிகர் என புதுக்கோட்டையின் கவிஞர்கள் அனைவரும் கற்பனைப் பாத்திரங்களாய்க் கதையில். இது ஒரு புதுமையான் முயற்சி. ஒரே இலக்கியதளத்தில் செயல்படும் தனது நண்பர்களை கதைகளின் கற்பனைப்பாத்திரங்களாக்குவது சோலச்சிக்கே உரிய பாணி.

இவ்வளவு எளிமையான விசயங்களைத் தொகுப்பின் தலைப்பு அட்டணக்கால். பா.ரஞ்சித் தாக்கம் என்றுதான் நினைத்தேன். அதிலும் ஒரு அதிர்சிகரத் திருப்பம். காலில் முள் குத்திவிட்டது என்று ஊர்ப்பாலத்தில் உட்கார்ந்து முள்ளைப் பிடுங்கிக்கொண்டிருக்கும் தலித் முருகேசனின் கால்களை வெட்டிவிடுகின்றன சாதி வெறி நாய்கள்.
அட்டணக்கால்
சிறுகதைகள்
ஆசிரியர் சோலச்சி
மின்னல் கலைக்கூடம்
விலை : 100

தொடர்வோம்

அன்பன் 
மது 


Comments

 1. நல்லதொரு அறிமுகம். முகநூலிலும் இவரது அட்டணக்கால் பற்றிய பதிவொன்று படித்தேன். அங்கே வரும்போது தான் வாங்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வரும் போது சொல்லுங்கள் கைவசம் இருக்கிறது

   Delete
 2. அருமை
  நண்பர் சோலச்சி அவர்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 3. மகிழ்ச்சி கொள்கிறேன்

  ReplyDelete
 4. மகிழ்ச்சியும் பேரன்பும்

  ReplyDelete

Post a Comment

வருக வருக