அக்கா


கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் சசி, அவள் கணவன் ஜெயகோபால், சசியின் தம்பி நீலமணி இவர்களுக்குள் எழும் உணர்வுகளும், ஆசைகளும், வஞ்சகங்ளுமே கதை.

ஜெயகோபால், சசி ஈருயிர் ஓருடல் என்று சொல்ல முடியாவிட்டாலும் அந்தமாதிரி என்று வைத்துக் கொள்ளலாம். கணவன் எவ்வளவு மோசமாக இருந்தாலும் மனைவி அவனைவிட்டுத்தரக் கூடாது என்பதே அவள் நிலைப்பாடு. அவளுடைய தோழி ஒரு மோசமான கணவனுடன் வாழ்வதை விட ஏழு பிறவியிலும் விதவையாகவே இருப்பது மேல் என்கிறாள். ச்சே இப்படில்லாம் எப்படித்தான் பேசுகிறார்கள் என்று நினைத்தவாறே பிழைக்கப் போயிருக்கும் தன் கணவன் குறித்து சிந்திக்கிறாள் அவள்.

ஜெயகோபால் கிடைக்கும் பணிகளை செய்துவந்தவன். அவன் ஒரே நம்பிக்கை தன் மாமனாரின் ஒரே மகளான தன் மனைவிக்கு மாமனாரின் எல்லா சொத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே. அதிலும் மண் விழுகிறது. காலம் போன கடைசியில் மாமனாருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, அதுவும் ஆண் பிள்ளை. பிள்ளைப்பிறப்பின் பொழுது மாமியார் இறந்தும் போகிறாள். இடிந்து போன ஜெயகோபால் ஒரு தேயிலைத் தோட்டத்துக்கு பணிக்கு சென்றுவிடுகிறான்.

இதனிடையே மாமனாருக்கு உடல் நிலை மோசமாகி தன் லேட்டஸ்ட் சாதனைச் செல்வனை தன் மகள் கையில் ஒப்படைத்துக் கண்ணை மூடுகிறார், அப்படி அவர் ஒப்படைக்கையில் மகள் இடுப்பில் அவள் பிள்ளை இருந்தது என்பதும் வாசகர்கள் உணர்விலே இருக்கும். காலம் கடந்த பிள்ளை என்பதால் நீலமணியின் தலை பெரிதாகவும் உடல் சிரிதாதகவும் இருக்கிறது. மரபுக் குறைபாடு போல.

தன் கணவன் தன்னைப் பிரிவதற்கு காரணமான காலம்கடந்து பிறந்த தன் தம்பியை வெறுக்கிறாள் சசி, இருப்பினும் தாயில்லா தன் தம்பியிடம் இரக்கம் கொள்கிறாள், பின்னர் இது பெரும் பாசமாக மாறுகிறது. ஜெயகோபால் தன் மைத்துனனை எவ்வளவு வெறுத்தான் என்று சொல்ல வேண்டாம்.

காலம் ஓட ஓட, தம்பியின் சொத்துக்கள் முறைகேடான வழிகளில் ஏலம் போவதை, விற்கப்படுவதைப் கண்டறிகிறாள். இதற்கு காரணமான தன் கணவனை கடுமையாகத் திட்டுகிறாள்.

அந்த நாட்களில் கிராமங்களில் வெள்ளை துரைமார்கள் கூடாரம் அமைத்துத் தங்குவது வழக்கம். எல்லோரும் அந்தப் பக்கம் போகவே அஞ்சும் வேளையில் நீலமணி மட்டும் ஒரு துரையிடம் பேசுகிறான், இவன் வித்யாசமான உருவம் துரை இவன் மேல் கவனம் கொள்ள வைக்கிறது.

வீட்டுக்கு திரும்பும் நீலமணி துரை என் நண்பர் என்று சொல்கிறான், போதாத நீலமணியை அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்கப் போகிறாள் சசி. தன் கணவன் தன் தம்பியின் சொத்துக்களை ஏமாற்றி விற்றுவிட்ட விசயத்தை முறையிடுகிறாள். நீலமணியை நீங்களே அழைத்துச்செல்லுங்கள் நியாயம் கிடைத்தபின்னர் அவனை திரும்பத்தாருங்கள் என்கிறாள். நீலமணி பிரிய விரும்பவில்லை, அவனை முத்தமிட்டுச் சொல்கிறாள் திரும்ப வந்து கூட்டிக்கிறேன்.

விசாரணையில் அவமானப்படுத்தப்பட்ட ஜெயகோபால் சசியோடு வீடு திரும்புகிறான், சில தினங்களுக்குப் பிறகு சசி இரவோடு இரவாக காலரா வந்து இறந்ததாகவும், அந்த இரவே எரியூட்டப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கவிஞர் இப்படி எழுதினார்
//கல்லானால் ரோட்டுக்கு
புல்லானால் மாட்டுக்கு//

இந்த வரிகள்தான் நினைவில் வருகிறது.

சசி தன் கணவனின் வஞ்சம் குறித்த அறியாமையில் இருக்கிறாள், அதை தெரிந்துகொண்ட பொழுதும் அவளால் அவனோடு சண்டையிட முடிகிறதே ஒழிய வேறு தீர்வுகள் இல்லை. உச்ச கட்ட முயற்சியாக வெள்ளை துறையிடம் ஒரு புகார் செய்ய மட்டுமே முடிகிறது. விசாரணையில் அவமானப்படுத்தப்பட்ட ஜெயகோபால் என்ன செய்வான் என்பதுகூட தெரியாமல் அவனோடு மீண்டும் வருவதாகவேபடுகிறது. இருப்பினும் ஏதும் நிகழலாம் என்கிற அச்சத்தினால்தான் தன் தம்பியை அவள் துரையோடு அனுப்பிவைத்தாள் என்றும் கொள்ள வேண்டியிருகிறது.

பதிபக்தி கண்ணை மறைத்தால் சிலருக்கு அது உயிராபத்தாக முடியும் என்பதை சொல்லும் கதையாக கொள்கிறேன்.

இன்றும் சசிகள் இருக்கிறார்கள், தெரிந்தே அவர்கள் சிதையைத் தேர்ந்தெடுகிறார்கள்.

தொடர்வோம்

அன்பன்
மது

Comments

  1. சசிகள் மட்டுமல்ல, ஜெயகோபால்களும் நிறைய அளவில் இங்கே உண்டு.

    நல்ல கதை மது. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  2. கதை எப்போது எழுதப்பட்டக் கதையோ ஆனால் சசி, ஜெயகோபால் இரு கேரக்டர்களும் இப்போதும் நிறைய வே இருக்கிறார்கள். அதுவும் நல்லவனாக நடித்துக் கொல்லும் கணவன்மார்கள். விமர்சனம் நல்லாருக்கு. கதை யதார்த்தம் நிகழ்வுகளைச் சொல்லுகிறது.

    கீதா

    ReplyDelete

Post a Comment

வருக வருக