இர்பான் கான் 1967-2020

இர்பான் கான் 
இன்று மதியம் இவரது பேட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். கேள்விகளுக்கு இவர் பதிலளித்த விதம் ஆசம், இணையர் ஏங்க ஹீரோக்களை விட வில்லன்கள் இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காங்க என்றார்...சில வினாடிகளில் ரிப் இர்பான் பதான் என்றார்கள், ஜனாதிபதி, பிரதமர், ஆளுமைகள், அரசியல் வாதிகள் என தொடர்ந்து இவருக்கு அஞ்சலி செய்திகளை வெளியிட அவற்றை கீழே உருட்டியது அந்த சானல்.



ஏங்க தயவு செய்து மாத்துங்க என்றார் இணையர்.

கனத்த மனதோடு மாற்றினேன்.

இர்பான் கான் இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர். ஜுராசிக் பார்க் படத்தில் கோடீஸ்வர பார்க் ஓனராக வரும் காட்சிகளை இவரது இந்திய முகத்துக்காக ஏகத்துக்கும் ரசித்தேன்.

உண்மையில் 2001இல் இருந்தே இர்பான் உலக சினிமா பக்கம் சென்றுவிட்டார். பல ஆங்கிலப் படங்களில் நடித்திருக்கிறார்.

இர்பானின் பள்ளிப் பருவத்தில்  சி.கே நாய்டு டோர்னமென்ட்டில் ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆனால் நிதிஉதவி இல்லாததால் கிரிக்கட்டுக்கு முழுக்கு போடவேண்டியதாகிவிட்டது.


1984இல் தேசிய நாடகப் பள்ளியில் பயிற்சியெடுத்து
 சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் 2001இல் தி வாரியர் எனும் பிரிட்டிஷ் படத்தில் நடித்த பின்னர் உலகின் கவனத்தைப் பெற்றவர்.

சைக்கோ கில்லர் வேடமோ, அன்பு கனியும் தந்தை வேடமோ கிடைக்கும் அத்துணை பாத்திரங்களிலும் உச்சம் தொடுவதே இவர் வெற்றிக்கு காரணம்.

ஒவ்வொரு நாளும், ஹாலிவுட் படங்களின் திரைக்கதைகளைப் படித்து, குறிப்புகள் எடுத்துக் கொண்டு தன்னை தயார்ப்படுத்திக் கொள்வதும், அதிகாலை மூன்று வரை பணியாற்றுவதும் இவரது பாணி, மனிதரின் இந்த ஓய்வில்லா உழைப்புதான் இவருக்கு மூளை புற்றுநோயைத் தந்திருக்க வேண்டும்.

தனது புற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட இவர் நேற்று வயிற்றில் பாக்டீரியா தொற்று என திரு கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்திருக்கிறார்.

இன்று விடைபெற்றுவிட்டார்.

இந்தியக் கலையுலகிற்கு பேரிழப்பு

--

Comments

  1. நேற்று தான் அவரது உடல்நிலை குறித்த செய்தி படித்தேன். நல்ல நடிகர்.

    ReplyDelete
  2. கலையுலகிற்குப் பேரிழப்புதான்
    ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  3. நடிப்புலகத்தில் ஆராதிக்கப்பட வேண்டிய கலைஞனை முன்னதாக நோய் கொள்ளை கொண்டுவிட்டது

    ReplyDelete

Post a Comment

வருக வருக