முகநூல் இற்றைகள்


1.
வணக்கம் குருவே ...
சிஷ்யா என்ன இது என் ஆசிரமத்துக்குள் விசில் அடிக்கிறாய், அவ்வளவு மகிழ்வாய் என்ன நிகழ்ந்து.. கொரோனாவில் மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்க உனக்கு என் ஆசிரமத்தில் விசில் கேட்கிறதா...சபித்துவிடுவேன் ஜாக்கிரதை.


குருவே செய்தியைக் கேட்டால் நீங்களே விசில் அடிப்பீர்கள் ...
அப்படி என்ன செய்தி
நம்ம நாரவாய் நாரயணனும் நாய் சேகரும் இஸ்லாமியர்கள் குறித்து போட்டிருக்கும் செய்திகளைப் பார்த்தீர்களா ...
அந்த சைத்தான்கள் விஷமல்ல கக்கும்?
இல்லை குருவே, ஆகாச பல்டி அந்தர் பல்டி அடித்துவிட்டார்கள். அதாகப்பட்டது இஸ்லாமியர்கள் தங்கள் குருதி கொடைமூலம் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க உதவு கிறார்களாம் ...
என்ன சொல்கிறாய், அவர்கள் ஐ.டியை யாரும் ஹேக் செய்திருப்பார்கள்...
ஹேக் இல்லை குருவே ஷேக் ...
அட, அதுதான் புல்லாங் குழல் ஊத துவங்கி விட்டார்கள் போல
ஆம் குருவே பிரிட்டிஷ் காலத்திலிருந்தே அவர்களுக்கு சிறந்த பணி அனுபவமும் செம்மையும் இருக்கிறது...
விசில் சத்தம் கேட்கிறது
குருவே நான் அடித்தால் தவறு நீங்கள் அடித்தால் சரியா...
குரு என்ன செய்தாலும் சரி என்பதுதான் ஆசிரம விதி...
இது சரியா குருவே
சரி என்றால் உனக்கு ஒரு மூடி தேங்காய் உண்டு
அப்போ ரொம்ப சரி குருவே

2.
குருஜி மோடியவே கேள்வி கேட்குரானுக சங்கிக...
பொறுமை சிஷ்யா யார் கேள்வி கேட்டது எங்கே கேட்டார்கள் ?
uphold.coன்னு ஒரு தளம் இருக்கு குருஜி அதிலே ஒரு காணொளி அதில்தான் ...
என்ன சொல்லியிருக்காங்க...
அதாகப் பட்டது இந்தியாவில் இந்து சமூகத்தை சேர்ந்தவர்களே இந்துக்களை பற்றி கேலி செய்வார்களாம்.
ஆம், உண்மைதானே ...சரி சிஷ்யா இந்த செய்தியை சொன்னபொழுது பின்னணியில் என்ன காட்சி வந்தது...
அதுவா குருவே வி ஹேட் இந்துத்வா என்று ஒரு கும்பல் எழுதிப் பிடித்துக் கொண்டிருந்த படம் வந்தது குருமகா பிரபோ
ஒ, சந்தடி சாக்கில் இந்து தத்துவத்தையும், இந்துத்துவ வெறியையும் ஒன்றாக்கியிருக்கிறார்கள் அப்படித்தானே.
அட, இது எனக்குத் தோணவே இல்லை குருவே...
உனக்குத் தோணினால் நான் எதற்கு? சரி மேலே கூறு...
அடுத்து குருவே உலக அளவில் மைனாரிட்டி இந்துக்கள்தானாம், உலக அரசியலில் அனாதைகளாம்...
ஒரே போடாக போட்டிருக்கிறார்கள், நேற்றுவரை அப்படி இல்லை எப்போது இவர்கள் கொரோனாவின் கோமணத்தை உருவி மைனரிட்டியா மெஜாரிடியா என்று பார்த்த போதுதான் அனாதைகளானார்கள். சரி மேலே சொல் இன்னும் என்ன என்ன உளரியிருக்கிறார்கள்
நேற்று மகாராஸ்ட்ராவில், பால்கர் கிராமத்தில் இரண்டு சாதுக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்.
ஆம், அது உண்மையில் துயர்தான்.
ஆனால், அதுகுறித்து பிரதமர் மோடி மௌனிக்கிறாராம்.
இந்தியாவில் இந்துக்கள் துயரில் வாடும் பொழுது, கொல்லப்படும் பொழுது பிரதமரின் அமைதி மிகுந்த துன்பம் தருகிறதாம்.
அடேடே
குருஜி இவ்வளவு சீரியசான விசயத்தை கொஞ்சம் கூட சீரியஸாக பார்க்காமல் அடேடே என்று சொல்கிறீரே என்ன இது...
அட என் சிஷ்யக் கொழுந்தே இது எதற்கான காணொளி என்று புரியவில்லையா?
எதற்கான காணொளி ?
சரி இப்படிக் கேட்கிறேன் ஏன் இது ஆங்கிலத்தில் இருக்கிறது ? மோடி லண்டன் கிங்க்சில் படித்தவர் அதனால் அவருக்கு புரியும் என்றா?
என்ன விழிக்கிறாய் சிஷ்யா ...
புரியல குருவே
இல்லை மாட்டு மூத்திர பானம் அருந்தும் சங்கிகளின் மனக் குமுறலா? இல்லை அவர்களை தூண்டி கலவரத்தை நிகழ்த்தும் முயற்சியா ?
அட நீங்க வேற குருவே இந்த வீடியோ பார்த்தால் கலவரமெல்லாம் வராது, ஆனால் மோடியை அவர்களே கேள்வி கேட்டிருப்பதுதான் புரியவில்லை ?
அடேய் அறிவுக் கொழுந்து சிஷ்யா இது உலக நாடுகள் ஐம்பது ஆறு இஞ்சு ஆளுமையை குறித்து ஒரு நேர்மறையான புரிதலை உருவாக்க வெளியிடப்பட்டிருப்பது புரியவில்லையா ?
அட, ஆமால்ல...சரி ஒரு கானொளியில் அத்துணை ரத்தக் கறைகளையும் மறைத்துவிட முடியுமா குருவே ...?
இன்னும் பல காணொளிகள் வரும் சிஷ்யா ஒழுங்காக ஹேட் ஸ்பீச் என்று சொல்லி அப்ஹோல்ட் தளத்தை ரிப்போர்ட் அடி. கொஞ்ச நேரம் நிம்மதியாகவாவது இருக்கலாம்.
ஆகட்டும் குருவே
ஓம் சாந்தி ...போய் வா சிஷ்யா...

3.
புதிய பதங்களை
சரியான பதங்களை
அறிதல்
இட ஒதுக்கீடு
தவறான சொல்
சரியான சொல்
சமூக பிரதிநித்துவம்
community reservation (very wrong word)
community representation is the right word

4.
இது குறித்து எழுதவேண்டும் என்று இருந்தேன்
ஈ.டிவி முந்திக் கொண்டுவிட்டது
பாலாஜி எனும் ஆசிரியர் தன் குடும்பத்தோடு உணவு தயாரித்து கொரோனவால் பாதிக்கப்பட்ட, உணவின்றி சாலையோரங்களில் தவிக்கும் ஆதரவற்ற மனிதர்களுக்கு வழங்கி வருகிறார்.
முதல் நாள் இப்படி ஒன்று நடப்பதை தெரிந்து கொண்ட இவர் தெரு மக்கள் ஊரடங்கு உள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் முன்பணம் செலுத்தி தாங்களும் சேவையில் இணைந்துவிட்டார்கள்.
இவர்கள் தயாரிக்கும் உணவை மாடி மதன், புதுகை செல்வா போன்ற தங்கள் உயிரையோ குடும்பத்தினர் உயிரையோ குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாத மனிதர்கள் மாவட்டம் முழுதும் பயணித்து வழங்கி வருகிறார்கள்.
ஆசிரியர் பாலாஜி மற்றும் அவரது பெற்றோர், அவரது இணையருக்கு வாழ்த்துகள்.
மனிதம் தழைக்கட்டும்


5.

என் வீட்டிலிருந்து அழைக்கும் தூரத்தில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது தோழர் ஆரோக்கிய சாமி குறித்தோ, பவா குறித்தோ அல்ல இந்தப் பதிவு.

வலது ஓரத்தில் நிற்கும் ஸ்டாலின் எனது வகுப்புத்தோழன், பயல் படிப்பில் சூரப்புலி, ஜாதகம், கட்டம் என்பதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லா விசயங்கள் எனினும் என் வகுப்பின் முதல்வனாக இருந்தவனை ஒரு ஆட்சித்தலைவராக எதிர்பார்த்தேன்.

இப்போது ஒரு வங்கியில் பணியில் இருக்கிறான்.

அவன் முழங்காலிடும் தண்டனையைப் பலமுறை எனக்கு வழங்கியிருக்கிறான். எப்படியும் ஏதாவது ஒரு மாவட்டத்தில் பைலட் காரில் வரும் ஆட்சியராக இருப்பான் என்றே நம்பினேன்.

காதல் பிடித்து ஆட்ட, படத்தில் இருக்கும் இரண்டு சிங்ககுட்டிகளும் அவன் செய்கைதான் என்று நினைக்கிறேன்.

பல நாட்களுக்கு பிறகு சந்தித்த பொழுது மனசுப்படி புல்லட்டை வாங்கிக் கொண்டு சக நண்பர்களோடு நடுக் காட்டில் டென்ட் அடித்துத் தங்கியது பற்றி சிலாகித்தான்.

வாழ்வின் வெற்றியை கல்வியைவைத்து, பதவியை வைத்து எடைபோடும் மனங்களுக்கு ஸ்டாலின் புரியமாட்டான்.

சனியன் அவன் எப்போதும் அப்படிதான்.

படத்தை இணைத்ததற்கு நன்றிகள் பி.எம். இபு

Comments

  1. அருமையான எள்ளல் நடை உண்மையை அப்படிதான் கூற முடியும்

    ஆசிரியர் பாலாஜி மற்றும் அவரது பெற்றோர், அவரது இணையருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக