ஜோனதன் லிவிங்க்ஸ்டன் சீகல்


ஜோ ஒரு சி கல், கடற்பறவை, சற்றும் "பொறுப்பற்ற" பறவை.

ஒரு பறவையாக லட்சணமாக குட்டி மீன்களை வேட்டையாடினோமா, பசியாறினோமா என்றில்லாமல் பசித்தால் கூட பறந்துகொண்டே இருக்கும் கனாக்கார  ஜோனதன்லிவிங்க்ஸ்டன் சீகல்லை அவன் அம்மா திட்டாத நாட்களே இல்லை.

யாருடைய அறிவுரையும், திட்டும், ஏளனப் பார்வைகளையும் ஜோனதனை பாதிக்கவேவே இல்லை.

"நீ ஒரு இறகுகளும் எலும்பும் கொண்ட பிராணி" என்கிற அவன் அம்மாவின் கோபம் நிறைந்த வார்த்தைகள் ஜோவை பாதிக்கவே இல்லை.

"அம்மா நான் ஒரு பறவை, பறத்தல் என் வாழ்வு, பறத்தலின் அத்துணை சாத்தியங்களையும் முயற்சித்துப் பார்க்காமல் என்ன வாழ்வு இது, குட்டி மீன்களை கொத்திக்கொண்டு, கடற்கரையில் கிடக்கும் நாறிப்போன ரொட்டித் துண்டுகளை திருடிக்கொண்டு என்ன வாழ்வம்மா இது என்கிறான் ஜோ"

ஒரு நாள் மாலை இரண்டாயிரமடி உயரத்தில் இருந்து விரைந்து இறங்கும் வித்தையில் நூற்றி நாற்பது கி.மி வேகத்தில் வரும் பொழுது காற்றின் வேகம் அவனை சுழற்றிவிட்டு கட்டுப்பாட்டை இழக்கச்செய்து கடலில் விழ வைக்கிறது.

கடல் நடுவே இறகுகள் ஈயம் போலக் கனக்க, அம்மா சொன்னதுதான் சரி "நான் வெறும் சிறகுகளும் எழும்பும் கொண்ட பிராணி மட்டுமே " என்று நினைத்துக் கொண்டு பறக்கிறான்.

எல்லாம் சில நிமிடங்கள் மட்டுமே, மற்ற சின்ன பறவைகள் எப்படி அதி உயிரே பறக்கின்றன, விர்ரென கீழே இறங்குகின்றன என்பதைப் நினைவு கூர்கிறான்.

அந்த கரும் இருளில், மீண்டும் மேலேறத் துவங்குகிறான்,  மீண்டும் நான்காயிரம் அடி, மீண்டும் டைவ் ஆனால் இம்முறை தன்னுடைய நீண்ட இறகை உடலோடு அணைத்துக்கொண்டு, இறகின் வெளி நுனியை மட்டும் மெல்ல விரிக்க இரநூற்றி இருபது மைல்\ வேகம் வசப்படுகிறது, எந்த உயிரோடு இருக்கும் கடற் பறவையைவிடவும் அதீத வேகம், புளித்த விரைத்த பிரட் துண்டுகளைத் தின்னும் தன் சகாக்கள் கற்பனை கூட செய்து பார்க்க இயலாத வேகம். கரிய வானத்திலிருந்து கடல்பரப்பை நோக்கி வரும் பீரங்கி குண்டுஅவன்.

மறுநாள் இந்த வித்தையை மீண்டும் செய்து பார்க்கிறான், கடற்பரவைகளின் ஆட்சிமன்றக் குழு அழைக்கிறது, கடற் பறவைகளின் பெரும் அவமானச் சின்னம் நீ , உன்னை சமூக விலக்கம் செய்கிறோம் என்கின்றனஅவை.

ஜோ, தனியே பறக்கிறான், கடலின் மேற்பரப்பில் இருக்கும் மீன்களை அல்ல கடலின் பத்தடி ஆழத்தில் இருக்கும் மீன்களை பிடிக்கும் வித்தையை அவன் அறிந்து வைத்திருக்கிறான், கடல் மட்டுமல்ல அடர் வனங்களுக்கு மேலே, நகர்களுக்கு மேலே பறந்து வித்யாசமான அருமையான சுவையுடைய பூச்சிகளை, புழுக்களை ரசித்து உண்கிறான்.

ஒரு நாள் அவனைப்போலவே வித்தை தெரிந்த இரண்டு கடற் பறவைகள் அவனோடு பறக்கின்றன, அவன் ஆர்வமாக அவர்களோடு பறக்க அவை அவனை சொர்க்கம் அழைத்துச் செல்கின்றன. அங்கே மிகச் சில சீகல்கள் மட்டுமே இருகின்றன.

ஆனால், ஒவ்வொன்றும் பறத்தலின் எல்லைகளை விரிவு செய்துகொண்டே இருக்கின்றன

தலைமைப் பறவையான சியாங் கல் இதுவரை ஜோனதனுக்கு தெரியாத பல பறக்கும் வித்தைகளைச் சொல்லித்தர உச்சகட்டமாக மன வேகத்தில் பறக்கும் வித்தை கைகூடுகிறது ஜோனதனுக்கு.

காலம், நேரம், இடம் இவையெல்லாம் பொய்த்துப் போகும் வேகம், விரைவுப் பறப்பு

நீ வெறும் இறகுகள், எலும்புகள் கொண்ட பிராணி அல்ல, நீ ஒரு எண்ணத்தின் வடிவம் என்கிறார் குரு.,

பல்வேறு கிரகங்களுக்கு பறந்து பயிற்சி செய்கிறார்கள் இருவரும்.

இறுதியில் ஜோ மீண்டும் தன் குழுவுக்கு திரும்பி அவர்களை பயிற்றுவிக்க விரும்புகிறது.

என்ன நிகழ்கிறது என்பதை மூன்றாம் பகுதியில் சொல்கிறார் ரிச்சர்ட் பாஷ் ..

எழுத்தாளர் ரிச்சர்ட் பாஷ் ஒரு விமானி, அதுவும் எப்போதும் பறக்க விரும்பும் விமானி என்பது நூலின் அற்புதத்திற்கு ஒரு காரணம்.

பறத்தலின் நுட்பங்களை, அவர் சொல்கிற நேர்த்தி அற்புதமான அனுபவம்.

இது ஒரு ஆங்கில நூல்.

உலகின் அதி முக்கியமான நூற்களில் ஒன்று.

அவசியம் படிக்க வேண்டிய நூல்

தொடர்வோம்

மது

Comments

 1. /மாப்பிள்ளை சாரே உங்கள் பதிவுகள் எல்லாம் ரொம்ப ஹைலெவலாக இருக்கிறது சாரே, என்னை மாதிரி ஆட்களுக்கு ஏற்றவாறும் பதிவு எழுதுங்க சாரே... மீ பாவம் சாரே

  ReplyDelete
 2. நல்லதொரு புத்தகம். புத்தகம் பற்றி இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 3. அருமையான கதை சொல்லி நீர்
  நன்றி

  ReplyDelete
 4. சீகல் சாதனைப் பறவை..... சிறப்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment

வருக வருக