மத்தியவர்த்தினி

மத்தியவர்த்தினி



நிவாரண், ஹரசுந்தரி மற்றும் சைல பாலா என்கிற சிறுமிதான் கதைமாந்தர்கள். 


இவர்களின் உலகை உணர்வுததும்பச் சொல்லியிருகிறார் தாகூர். 

நிவாரண் ஒரு சராசரி ஆண், அவனுகேற்ற மனைவி மிக எளிதாக போய்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நோய் வடிவில் பிரச்னை குறுக்கிடுகிறது. 

ஹரசுந்தரி நோயில் விழுகிறாள், பிழைப்பாளா என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தவள் நாற்பதாம் நாள் காய்ச்சல் நிற்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக தேறிவருகிறாள் அவள்.

ஆனால் இல்வாழ்விற்குத் தேவையான திறனை இழந்துவிடுகிறாள். இந்தக் குற்ற உணர்வும், கணவன் அவள் மீது வைத்திருக்கும் பேரன்பும் அவளை வாட்ட கணவனை இன்னொரு திருமணம் செய்துகொள்ள பணிக்கிறாள். கடும் விவாதம், பின்னர் ஏற்பு என சைல பாலா என்கிற சிறுமியை இரண்டாம்தாரமாக மணக்கிறான் நிவாரண்.

தன் புது மனைவி மீது பாராமுகமாக இருக்கும் நிவாரணை அழைத்து ஊஞ்சலில் உட்காரவைத்து, சைலபாலாவை அருகே அமரவைத்து அவள் முக்காட்டை சரி செய்து எவ்வளோ அழகாக இருக்கிறாள் என்று சொல்லி அவர்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறாள். 

எதிர்பார்த்த விசயங்கள் நடக்கின்றன, சைல பாலவே கதி என்று மாறுகிறான், ஒரு சிறுமி திடீரென இல்வாழ்வில் வந்தால் என்ன செய்வாள்? அதுவும் அவள் விசயத்தில் எல்லோரும் அவளை தலைமீது வைத்துத்தாங்குகிறார்கள். வீட்டு வேலைகளைக் கூட பார்ப்பதில்லை. அவளுக்குத் தேவையான எதற்குமே அவள் போராடிப் பெற தேவையிருக்கவில்லை. அவள் இந்த பூமியின் மகாராணி போலவும் நிவாரணும், ஹரசுந்தரியும் அவளுக்கு அடிமைகள் போலவுமே நினைகிறாள். வீட்டில் அதிகாரம் தூள் பறக்கிறது. மமதையும் சேர்ந்து கொள்கிறது. 

நிவரணனுக்கு அவசர தேவைகளுக்குகூட பணம் தரமறுத்து(நகைகள்) தூக்கில் தொங்கிவிடுவேன் என்கிறாள். ஒரு கட்டத்தில் ஹரசுந்தரியையே விரட்ட ஆரம்பிக்கிறாள். கணவனும் முன்போல் வலுவாக இல்லை, வலுவாக இல்லாதவன் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற கேள்வியை கேட்டுக்கொள்கிறாள். 

திடுமென நோய்வாய்ப்படுகிறாள்,  தன்னுடைய இயல்பால் பத்திய உணவையோ, மருந்தையோ சரியாக எடுத்துகொள்ள மறுத்து மேலும் உடல் நிலை மோசமாகி போய்ச்சேருகிறாள். நிவாரணுக்கு கட்டு அருந்தார் போல இருக்கிறது. 

ஒரு நாள் ஹர சுந்தரியின் படுக்கைக்கு வருகிறான். ஆனால் அவளுக்கும் அவனுக்கும் இடையே செத்துப் போன சிறுமி ஒருத்தியின் பிணம் இருப்பதை உணர்கிறான் (மத்தியவர்த்தினி, நடுவில் இருப்பவள்). அவளை இருவராலும் கடக்கவே முடியவில்லை என்பதோடு கதை நிறைவு பெறுகிறது. 

கதையின் சமூகக் காரணிகள் 

சராசரி மனிதர்களின் அன்றய வாழ்வை மிக துல்லியமாக காட்சிப்படுத்துவதில், அவர்களின் மனஓட்டங்களை துல்லியமாக சொல்வதில், சராசரி மனிதன், ஒரு குமாஸ்தா எப்படி பணம் கையாடல் செய்கிறான், பணி இழப்பு என ஒரு டவுன்வோர்ட் ஸ்பைரல்தான் நிவராணனின் வாழ்வு. 

ஒரு குழந்தையைப் பெற்றேடுப்பதற்காக இன்னொரு குழந்தையைப் மணமுடிக்கும் மாண்பு ஆகா என்னே நம் கலாச்சாரக் கழிவறை.

தன் உடல்நிலைக்காக தன் கணவன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு வரும் அளவிற்கு நிவாரண் பரிசுத்தமான அன்பை தன் மனைவி மீது வைத்திருந்தவன். சைல பாலாவருகைக்குப் பின்னர் எத்துனை மாற்றம். அவன் பண்புமே மாறிப் போய் அலுவலகத்தில் பணம் கையாடல் செய்கிறான்.

எதுவுமே கேட்காமல், முயற்சி செய்யாமல் கிடைத்தால் மனிதர்கள் எவ்வளவு மமதை பெறுவார்கள் என்பதை சைல பாலா சொல்கிறாள். 

நேர்த்தியான வர்ணனைகளுக்கும்,  எழுத்துப் பாணிக்கும் படிக்கலாம்.

ஹரசுந்தரி போல கிறுக்குகள் தன் கணவனுக்கு தானே திருமணம் செய்து வைப்பார்களா? 

என் வட்டத்தில் நடந்திருக்கிறது, உளவியல் பிரச்னைக்குட்பட்ட ஒருமனைவி தன் கணவனை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவர் மறுத்தவுடன் அப்பெண் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அரிதினும் அரிதாக இப்படி படைப்புகள் தீரக்கதரிசனங்கள் போல இருகின்றன.

தொடர்வோம் 

அன்பன் 
மது 
#Tagore #8

Comments

  1. நல்ல கதை. உங்கள் வட்டத்தில் இருந்தவர் மனைவி தற்கொலை - சோகம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் இவை போன்ற ஆயிரம் நிகழ்வுகள் இங்கே உண்டுதானே

      Delete
  2. நன்றாக அலசி இருக்கிறீர்கள்
    சிறப்பான கண்ணோட்டம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி...
      வாழ்துக்கள் உமக்கும் அய்யா

      Delete
  3. அருமையான உணர்வுபூர்வமான கதை என்று தெரிகிறது. யதார்த்தமான முடிவு மத்தியவர்த்தினி

    இப்படியும் மனைவிகள் இருக்கிறார்கள். தன் கணவனுக்கு இன்னொரு திருமணம் செய்து...அதென்னவோ தியாகிகள் என்ற நினைப்போ அல்லது கணவனின் மீது அதீத காதல் என்றோ ஏதோ ஒன்று.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இயலாமையை குறித்த மன அழுத்தம்தான் காரணம்

      Delete

Post a Comment

வருக வருக