ஊடல்

ஊடல் தணித்தல் 

அப்பர் மிடில் கிளாஸ் கதை, கோபிநாத் சீல், அவன் மனைவி கிரிபாலா தேவி இவர்களுக்கு இடையே எழும் தேநீர்க் கோப்பை புயல்தான் கதை. 


கோபிநாத் மேட்டுக்குடி குட்டிச்சுவர், விதிவசத்தால் அவன் மனைவியாகிறாள் அழகே உருவான கிரிபாலா தேவி. வீட்டில் தேவதை இருக்க தன் குழுவோடு வெட்டி வேலைகளில் ஈடுபடுகிறான் கோபி, அவன் பணக்காரன் எனவே அவனை உசுப்பேற்றி தாங்கள் குளிர்காய்கிறார்கள். அவர்களோடு இருக்கும் போதைக்காவே இவன் வெளியில் சுற்றுகிறான். 

நாடகக் கொட்டகையில் கதியாகக் கிடக்கிறான், அங்கே லவங்கா எனும் நடிகையை மோகிக்கிறான். அவளுக்கு கொடுக்கும் பொருட்டு கிரிபாலாவின் நகைகளை பறிக்கிறான். ஒரு மாலை வேளையில் கணவனுக்காகக் காத்திருக்கும் கிரிபலாவின் அழகை பொருட்படுத்தாமல் அவளை சுவற்றோடு வைத்து அழுத்தி அவள் நகைகளை எடுத்துக்கொண்டு காணமல் போகிறான். 

நாடக கொட்டைகையில் அண்ணன் அதகளம் வேறு ரகம். லவங்கா மேடையில் வரும் பொழுதெல்லாம்  அவள் பெயரைச் சொல்லி கூவிக்கொண்டு பெரும் ரகளை செய்து வருகிறான். இவனால் வரும் வருமானத்தை கணக்கில் கொண்டு நாடகக் கம்பெனியும்  இவனைக் கண்டு கொள்வதில்லை. 

கிரிபலாவிற்கு லவங்கா தன்னைவிட அழகா என்கிற கேள்வி இருக்கிறது, இதற்காக தன் வேலைக்காரியை கொட்டகைக்கு அனுப்பி பார்த்துவரச் சொல்கிறாள். அவள் பார்த்துவிட்டு வந்து கருவாட்டுக்குத் துணி சுற்றியமாதிரி இருக்கிறாள்கள் என்கிறாள். இது கிரிபலாவை ஆறுதல்படுத்துகிறது. 

இதையும் மீறி ஒருநாள் தானே நாடகம் பார்க்கப் போகிறாள். மேடையில் விரியும் காட்சிகள், பெண்கள் ஆண்களை மோகத்தில் மண்டியிட்டு கெஞ்சும் நிலைக்கு வரவைப்பதை பார்க்கும் அவளுக்கு ஒரு புதிய அனுபவம் கிடக்கிறது. ரகசியமாக தொடர்ந்து நாடங்களுக்கு செல்கிறாள். 

ஒருநாள் நாடக அரங்கில் கோபியின் ரகளை எல்லை மீறிவிடுகிறது. ஓடு துணை நடிகை தன்னை கேவலமாகப் பார்த்தாள் என்று சொல்லி அவளை ஒப்பனை அறையில் புகுந்து அவளை அடிக்க, கம்பனி அவனை போலீஸில் ஒப்படைக்கிறது. 

இதற்கு பழிவாங்க அவன் லவங்காவை அழைத்துக்கொண்டு தலைமறைவாகிவிடுகிறான். நாடகக் கம்பனி தடுமாறிப் போகிறது ஒருவழியாய் எப்படியோ ஒரு கதாநாயகியைப் பிடித்து நாடகத்தை நடத்துகிறது. ஆரம்பத்தில் சுமாராக நடித்த அந்த நடிகை, சில நாட்களில் அற்புதமாக நடிக்கவே கம்பனி களைகட்டுகிறது. 

லாவங்கா இல்லை என்றால் நாடகம் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த கோபிக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது. புதிய நடிகையை பார்க்க அரங்கிற்கு வருகிறான். கிரிபலா கிரிபலா என்று கூவ ஆரம்பிக்க அவனை நோக்கி ஒரு ஏளனப் பார்வையை வீசிவிட்டு தொடர்ந்து நடிக்கிறாள் அவள். கம்பனி கோபியை மீண்டும் போலீசில் ஒப்படைக்கிறது.

திமிறேறிப் போன கணவனுக்காக காத்திருக்கும் மாசற்ற மனைவி ஸ்தானத்தில் இருந்து ஒரு நடிகையாக கிரிபலாவை மாற்றியது ஏது?

கணவனின் ஏற்புக்கும் அங்கீகாரத்திற்கும் காத்திருந்து காத்திருந்து, இறுதியில் லவங்கா மூலம் ஒரு புதிய அனுபவத்தைப் பெறுகிறாள். ஒரு நடிகைக்கு இத்துணை அங்கீகாரமா, மகுடிக்கு ஆடும் பாம்புகள் போல ஆண்களை ஆட விடலாமா என்கிற வியப்பே அவளை நடிகையாக மாற்றுகிறது.

ஆறும் அது ஆழம் இல்லை என்று நம்ம கவிகள் பாடிக்கொண்டிருக்க தாகூர் அதில் மூழ்கி முத்துக்களை எடுத்து மாலையாகத் தொடுத்திருக்கிறார் இந்தத் தொகுப்பில். 

தொடர்வோம் 

அன்பன் 
மது

Comments

  1. Replies
    1. நிதி ஒதுக்கீடு குறித்த உங்கள் ஆய்வுப் பதிவைப் படித்தேன் சிறப்பு...
      வருகைக்கு நன்றி

      Delete
  2. சிறப்பான கதை. இங்கே தொடர்ந்து தாகூரின் கதைகளைப் பற்றி படிக்க முடிவதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. Replies
    1. தொடர்கிறேன் அய்யா

      Delete
  4. தொடருங்கள் நண்பரே. அருமை

    ReplyDelete

Post a Comment

வருக வருக